| தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் | 51 |
| | வந்தன பிறவு மாற்றி வளமலி மாளிகை யெடுக்கவு மணிக்குலை கமுகு நாளி கேரமு நன்குட னாக்கவுங் | | 40 | கரும்புஞ் செந்நெலு மொருங்குட னடவுஞ் சண்பகந் தமனகஞ் சாதி கேதகை வண்கழு நீருடன் மலர்பல வியற்றவும் . . . . ஞ் செக்கு மமைக்கவு மருளிச் சாலையுந் தவமுந் தருமமுந் தழைப்பச் | | 45 | செம்பிலுங் கல்லிலுஞ் செய்து தன்புக ழலர்கதி ரளவுஞ் செல்ல மலர்தலை யுலகின் வாழ்வமைத் தனனே. | குறிப்பு :- வரி 5. செயங்கொண்ட சோழ மண்டலம் - தொண்டை மண்டலம். வரி 13. சினவரசன் - ஜினன், அருகன். வரி 15. சினாலயம் - அருகன் கோவில். ஆலத்தூர் திவாகரன் இடம் : வடஆர்க்காடு மாவட்டம், குடியாத்தம் தாலுகா, திருவல்லம். இவ்வூர் பில்வநாதேசுவரர் கோவிலின் மகாமண்டபத்துத் தென்புறச் சுவரில் உள்ள செய்யுள் சாசனம். பதிப்பு : எண் 325. தென் இந்திய சாசனங்கள், தொகுதி நான்கு. (No. 325. S.I.I. Vol. IV.) விளக்கம் : வல்லத்துப் பில்வநாதேசுவரர் கோவில், முற்காலத்தில் திருவல்லத்து ஆழ்வார் கோயில் என்று பெயர் பெற்றிருந்தது. இக்கோவில் பூசைக்காக ஆலத்தூர் திவாகரன் என்பவர் தானம் செய்ததை இச்செய்யுள் கூறுகிறது. சாசனச் செய்யுள் ஆலத்தூ ராளி திவாகரன்தான் செய்வித்தான் பாலொத்த வெள்ளி நாற்பதின் கழஞ்சால் - சோலைத் திருவலத்தே யாழ்வார் திருப்பல்லிக்குச் செல்வம் வருநலத்தான் கொள்கைதான் மற்று. திருவுண்ணாழிகையார் வசம். |