பக்கம் எண் :

58மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

வீரன் குலோத்துங்க சோழன், விக்கிரம சோழன் என்னும் இரண்டு அரசர்கள் காலத்திலும் இருந்தான்.

சாசனச் செய்யுள்

எல்லை கடலால் இகல்லெந் தணக்க வந்த
செல்வமெலாம் தில்லைச் சிற்றம்பலத்து - தொல்லைத்
திருக்கொடுங்கை பொன்மேந்தான் திண்மைக் கலியின்
தருக்கொடுங்க வெல்கூத்தன் தான்.    1

தில்லையில் பொன்னம்பலத்தைச் செம்பொனால் மேந்துவா
னெல்லையைப் பொன்னாக்கினா னென்பரால் - ஒல்லை
வடவேந்தர் செல்வமெலாம் வாங்க வேல்வாங்கும்
குடைவேந்தர் தொண்டையார் கோன்.     2

தென்வேந்தர் கூநிமிந்த செந்தமிழர் தென்கோயில்
பொன்மேந்து திக்கைப் புகழ்வேந்தா னொக்கும்
குற்றம்பல கண்டோன் கோலிழைக்கு வெல்கூத்தன்
சிற்றம் பலத்திலே சென்று.     3

பொன்னம்பலக் கூத்தாடு மிடம் பழமரைவில்
பொன்னம்பலக் கூத்தர் பொன்மேந்தார் - தென்னர்
மலைமன்னர் ஏனை வடமன்றக் குலமன்னர்
செல்வ மெலாம் கொண்டு.     4

தில்லைச்சிற் றம்பலத்தே பேரம்பலந் தன்னை
மல்லற் கடற்றான் வாழ்கூத்தன் - வில்லவுதொ
நம்புசேர் வெஞ்சிலையின் ஆற்றலனை மாற்றியகோன்
செம்பு மேவித்தான் தெரிந்து.    5

ஏனை வடவரைசர் இட்டிடைந்த செம்பொனால்
ஏனலென தில்லை நாயகற்கு - ஆனை
சொரிகலமா மாமயிலை தொண்டையர்கோன் கூத்தன்
பரிகலமாச் செய்தமைத்தான் பார்த்து.    6

தெள்ளு புனற்றில்லைச் சிற்றம்பலத் தார்க்கு
தள்ளி எதிரம்பலந் தாதம்பாதம் - புள்ளுண்ண
நற்பிக்கம் கொண்ட நரலோக வீரன்செம்
பொற்படிக்கம் கொண்டான் புரிந்து.    7