66 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14 |
பல்லவர் கோன் இடம் : தென்ஆர்க்காடு மாவட்டம், சிதம்பரம் தாலுகா, சிதம்பரம் . நடராசர் கோவில் உள்ள சாசனம். பதிப்பு : தென் இந்திய சாசனங்கள், தொகுதி பன்னிரண்டு : முன்னுரை, பத்தாம் பக்கம். (Page 10, Preface, S.I.I. Vol. XII.) விளக்கம் : பல்லவ அரசன் தில்லையில் உலா வந்ததைக் கூறுகிறது. சாசனச் செய்யுள் சுந்தரத் தோரண நாட்டித் துகிற்கொடி சூட்டிமுத்துப் பந்தரப் பாலிகை தீபம் பரப்புமின் பல்லவர்கோன் செந்தளிர்க் கைக்கோத் தபையன் மகளுடன் தில்லையுலா வந்தளிக்கும் பெருமாள் வெற்பர் மாதை மணஞ்செய்யவே. குறிப்பு :- அபையன் - அபயன். அபயன் மகள் -சோழ அரகன் மகள். குந்தவையாழ்வார் இடம் : தென்ஆர்காடு மாவட்டம், சிதம்பரம் தாலுகா, சிதம்பரம் . நடராசர் கோவிலின் உள்பிராகாரம் வடக்குப் புறச் சுவரில் உள்ளது. பதிப்பு : இந்திய சாசனங்கள், தொகுதி ஐந்து, பக்கம் 105. (Epigraphia Indica, Vol. V. Page 105.) விளக்கம் : குலோத்துங்க சோழனுடைய தங்கையார் குந்தவை யாழ்வார், தில்லைச் சிற்றம்பலத் திருக்கோவிலில் செய்த தான தருமங்களைக் கூறுகிறது. இச்செய்யுளின் மேலும் கீழும் உரை நடையில் சில செய்திகள் எழுதப்பட்டுள்ளன. சாசனச் செய்யுள் ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர் திருத்தங்கையார் ராஜராஜன் குந்தவையாழ்வார் ஆளுடை |