பக்கம் எண் :

மறைந்துபோன தமிழ் நூல்கள்115

“சீற்றஞ் செற்றுப்பொய் நீக்கிச்செங் கோலினாற்
கூற்றங் காய்ந்து கொடுக்க வெணுந்துணை
மாற்ற மேநவின் றான்றடு மாற்றத்துத்
தோற்றந் தன்னையுங் காமுறத் தோன்றினான்.”     4

“மண்ணுளார் தம்மைப் போல்வார்
     மாட்டாதே யன்று வாய்மை
நண்ணினார் திறத்துங் குற்றங்
     குற்றமே நல்ல வாகா
மண்ணுளார் புகழ்தற் கொத்த
     விழுமியோ னெற்றி போழ்ந்த
கண்ணுளான் கண்டந் தன்மேற்
     கறையையார் கறையன் றென்பார்.”     5

“மறிப மறியும் மலிர்ப மலிரும்
பெறுப பெறும்பெற் றிழப்ப விழக்கும்
அறிவ தறிவா ரழுங்கா ருவவார்
உறுவ துறுமென் றுரைப்பது நன்று.”     6

“முன்றான் பெருமைக்க ணின்றான்முடி வெய்து காறும்
நன்றே நினைந்தான் குணமே மொழிந்தான் தனக்கென்று
ஒன்றானு முள்ளான் பிறர்க்கே யுறுதிக் குழந்தா
னன்றே யிறைவ னவன்றாள் சரணாங்க ளன்றே.”6     7

“நோய்க்குற்ற மாந்தர் மருந்தின்சுவை நோக்க கில்லார்
தீக்குற்ற காத லுடையார்புகைத் தீமை யோரார்
போய்க்குற்ற மூன்று மறுத்தான் புகழ்கூறு வேற்கென்
வாய்க்குற்ற சொல்லின் வழுவும் வழுவல்ல வன்றே.”     8

“வாயுவினை நோக்கியுள மாண்டவய நாவாய்
ஆயுவினை நோக்கியுள வாழ்க்கையது வேபோல்
தீயவினை நோக்குமியல் சிந்தனையு மில்லாத்
தூயவனை நோக்கியுள துப்புரவு மெல்லாம்.”     9

“போர்த்தலுடை நீக்குதல் பொடித்துகள்மெய் பூசல்
கூர்த்தபனி யாற்றுதல் குளித்தழலுள் நிற்றல்
சார்த்தரிடு பிச்சையர் சடைத்தலையர் ஆதல்
வார்த்தையிவை செய்தவ மடிந்தொழுக லென்றான்.”     10