பக்கம் எண் :

118மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15

“அற்றன் றாத லதுதா னறஞ்செய்தல்
சொற்றன் மாட்டு நிகழ்த்தல்பின் னோர்த்தல்
மற்றித் தன்மைப் படுமாயின் மாண்பிலார்க்
குற்றப் பொய்யென் றுரைப்பர் குணமிக்கார்.     1

நிலைபெற வெல்லாரு நீத்தனக ளைந்தெனவுந்
தலைவரு மிழுக்கெனத் தவிர்ந்தனவு மேனா
ணிலைபெற வெல்லாரு நீத்தனயா வென்றான்
கொலைகளவு கட்காமம் பொய்யெனாக் கூறினாள்.     2

சென்றிறந்தார்க் கீந்தனன் பொருளுடம் புறுப்புக
டுன்றினன் பிறக்கன்ன னாயினன் மாமேருக்
குன்றியின் றுணையாகக் கொடுத்திட்டா னல்லனோ.     3

இன்பஞ்சால் பெரும்பார மீரைந்து முடனிறைத்து
நன்கென நிலைபெற்ற நாதன்.     4

நலங்கிள ரொழுக்கந்தா னண்ணிய காலத்துக்
கலங்குதற்குத் தக்கன கண்டன வுளவெனினுந்
துலங்காது நிற்குந்தன் றுணிவுடைமை காணுங்கா
னிலம்பூனை யாயொழியு நிறையினா னல்லனோ.     5

சென்றெய்து மவத்தையோ சிலவற்றாற் றரப்படுமோ
வன்றியு மன்பொருள்தோ றவ்வத் தன்மையோ.     6

நின்றதூஉந் திரிந்ததூஉ மன்றாயி னிகழ்வில்லை
யொன்றிய வொருவகையே லொருவகையாற் கேடுண்டோ. 7

அளவிலாக் கடைப்பிடி யொருநான்கும் பிறப்பென்னுங்
களையருந் துன்பத்துக் கற்பநூ றாயிரமும்
விளைவாய போதியை யுறுமளவும் வினைமடியான்
தளர்வின்றி யோடிய தாளினா னல்லனோ.     8

நிலம்வலிது நீர்துவளும் தீத்தெறூஉங் காற்றுளரும்
புலமாமா றிதுபொருள் வரையறுக்கு மாகாச
நிலமாண்ட நாற்பூதஞ் சார்வாக வுவாதாக்கள்
சொலமாண்ட வியற்கைதா னிறமுதலாச் சொலற்பாற்றே.     9