பக்கம் எண் :

160மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15

வெவ்விட மமுதென விளங்குங் கண்ணினார்க்
கெவ்விட முடம்பினி லிழிக்கத் தக்கன
அவ்விட மாடவர்க் கமிர்த மாதலால்
உய்விடம் யாதினி யுரைக்கற் பாலையே.     1

பெற்றவை பெற்றுழி யருந்திப் பின்னரும்
மற்றுமோ ரிடவயின் வயிறு தானிறைத்
திற்றைநாள் கழிந்தன மென்று கண்படூஉம்
ஒற்றைமா மதிக்குடை யரசு முண்டரோ.     2

புழுமலக் குடருள் மூழ்கிப் புலால்கமழ் வாயிற் றேய்த்து
விழுமவை குழவி யென்றும் விளங்கிய காளை யென்றும்
பழுநிய பிறவு மாகிப் பல்பெயர் தரித்த பொல்லாக்
குழுவினை யின்ப மாகக் கொள்வாரோ குருடு தீர்ந்தார்.     3

அருந்திய குறையிற் றுன்ப மாங்கவை நிறையிற் றுன்பம்
பொருந்துநோய் பொறுத்தல் துன்பம் பொருந்திய போகத் துன்பம்
மருந்தினுக் குஞற்றல் துன்ப மற்றவை யருந்தல் துன்பம்
இருந்தவா றிருத்தல் துன்பம் யார்கொலோ துன்ப மில்லார். 4

வாழ்கின்ற மக்களுநம் வழிநின்றா ரெனவுள்ளந்
தாழ்கின்றார் தாழ்கில்லார் தமநில்லா வானக்கால்
ஆழ்கின்ற குழிநோக்கி யாதார மொன்றின்றி
வீழ்கின்றார் மெய்யதா மெய்தாங்க வல்லரோ.     5

வல்லென்ற சொல்லும் புகழ்வாய்மை வழீஇய சொல்லும்
இல்லென்ற சொல்லு மிலனாகலின் யாவர் மாட்டுஞ்
சொல்லுங் குறையின் மையிற்சோரரு மின்மையாலே
கொல்லென்ற சொல்லு முரைகற்றிலன் கொற்ற வேலான்.     6

மன்னன் மேவு கோயில்மேரு மான மற்றி மண்ணெலா
மென்ன லாய வூரிடத் திலங்கு மாளி கைக்குலம்
பொன்னின் மேரு வின்புறம் பொருப்பு நேர வப்புறந்
துன்னு நேமி வெற்பையென்பர் சூழ் மதிற் பரப்பையே.     7

ஆசை யல்குற் பெரியாரை யருளு மிடையுஞ் சிறியாரைக்
கூசு மொழியும் புருவமும் குடில மாகி யிருப்பாரை
வாசக் குழலு மலர்க்கண்ணு மானமுங் கரிய மடவாரைப்
பூசல் பெருக்க வல்லாரைப் பொருந்தல் வாழி மடநெஞ்சே.     8