பக்கம் எண் :

மறைந்துபோன தமிழ் நூல்கள்299

மாசில் காங்கூலம் வழுவறு கபித்தம்
விற்பிடி குடங்கை யலாபத் திரமே
பிரமாந் தன்னொடு தாம்பிர சூடம்
பிகாச முகுளம் பிண்டி தெரிநிலை
பேசிய மெய்ந்நிலை யுன்ன மண்டலஞ்
சதுர மான்றலை சங்கே வண்டே
யதிர்வி விலதை கபோத மகரமும்
வலம்புரி தன்னொடு முப்பத்து மூன்றென்
றிலங்கு மொழிப் புலவ ரிசைத்தன ரென்ப.     3

பதாகை

பதாகை யென்பது மகருங் காலைப்
பெருவிரல் குஞ்சித் தலாவிர னான்கு
மருவி நிமிரு மரபிற் றென்ப.     4

எல்லா விரலு நிமிர்ந்திடை யின்றிப்
பெருவிரல் குஞ்சித்தல் பதாதை யாகும்1     5

பெருவிரல் குஞ்சித் தேனைய நான்கு
நிரலே நிமிர்த்தல் பதாகை யாகும்.2     6

திரிபதாகை

திரிப தாகை தெரியுங் காலை
யறைப தாகையி னணிவிரன் முடக்கினஃ
தாமென மொழிப வறிந்திசி னோரே     7

கத்தரிகை

கத்தரி கையே தாண்டக விரிப்பி
னத்திரி பதாகையி னணியின் புறத்தைச்
சுட்டக மொட்ட விட்டு நிமிர்ப் பதுவே.     8

தூபம்

தூப மென்பது துணியுங் காலை
விளங்குகத் தரிகை விரலகம் வளைந்து
துளங்கு மென்ப துணிபறிந் தோரே.     9