மறைந்துபோன தமிழ் நூல்கள் | 301 |
லடைவுட னொற்றிச் சுட்டுவிர னிமிர வொழிந்தன வழிவழி முடங்கி நிற்ப மொழிந்தனர் மாதோ முடிபறிந் தோரே. 15 பதுமகோசிகம் பதும கோசிகம் பகருங் காலை யொப்பக் கைவளைந் தைந்து விரலு மெய்ப்பட வகன்ற விதியிற் றாகும். 16 காங்கூலம் 3 வகை. 1. குவிகாங் கூலம்: காங்கூ லம்மே கருதுங் காலைச் சுட்டும் பேடும் பெருவிரன் மூன்று மொட்டிமுன் குவிய வநாமிகை முடக்கிச் சிறுவிர னிமிர்ந்த செய்கைத் தாகும். 17 2. முகிழ்காங் கூலம்: முகிழ்காங் கூல முந்துற மொழிந்த குவிகாங் கூலங் குவிவிழந் ததுவே. 18 3. மலர்காங் கூலம்: மலர்காங் கூல மதுமலர்ந் ததுவே. 19 கபித்தம் கபித்த மென்பது காணுங் காலைச் சுட்டுப் பெருவிர லொட்டிநுனி கௌவி மல்ல மூன்று மெல்லப்பிடிப் பதுவே. 20 விற்பிடி விற்பிடி யென்பது விரிக்குங் காலைச் சுட்டொடு பேடி யநாமிகை சிறுவிர லொட்டி யகப்பால் வளையப் பெருவிரல் விட்டு நிமிரும் விதியிற் றாகும். |