பக்கம் எண் :

84மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15

வான்றுறக்கம் வேட்டெழுந்தார் வாண்மறவ ரென்பதற் குச்
சான்றுரைப்ப போன்றன தங்குறை - மான்றேர்மேல்
வேந்து தலைபனிப்ப விட்ட வுயிர்விடாப்
பாய்ந்தன மேன்மேற் பல.      35

வெய்யோ னெழாமுன்னம் வீங்கிராக் கையகலச்
செய்யோ னொளிவழங்குஞ் செம்மற்றே - கையன்று
போர்தாங்கு மன்னன்முன் புக்குப் புகழ்வெய்யோன்
தார்தாங்கி நின்றத கை.39     36

மம்மர் விசும்பின் மதியு மதிப்பகையுந்
தம்மிற் றடுமாற்றம் போன்றதே - வெம்முனையிற்
போர்யானை மன்னர் புறங்கணித்த வெண்குடையைக்
கார்யானை யன்றடர்த்த கை.     37

வான்றோய் கழுகினமும் வள்ளுகிர்ப் பேய்க்கணமும்
ஊன்றோய் நரியு முடன்றொக்க - மூன்றுங்
கடமா நிலநனைக்குங் கார்யானைக் கிட்ட
படமாறு நீப்பதனைப் பார்த்து.40     38

மாயத்தாற் றாக்கு மலையு மலையும்போற்
காயத்தூ றஞ்சாக் களிற்றொடும்போய்ச் - சாயுந்
தொலைவறியா வாடவருந் தோன்றினார் வான்மேல்
மலையுறையுந் தெய்வம்போல் வந்து.     39

வென்று களங்கொண்ட வேந்தன்றே! சென்றதற்பின்
கொன்ற பிணநிணக்கூழ் கொற்றவை - நின்றளிப்ப
உண்டாடு பேய்கண் டுவந்தனவே போர்ப்பரிசில்
கொண்டா டினகுரவைக் கூத்து.41     40

கண்ணுதலோன் காக்க கடிநேமி யோன்காக்க
எண்ணிருந்தோ ளேந்திழையாள் தான்காக்கப் - பண்ணியநூற்
சென்னியர்க் களிக்குஞ் செல்வனீ
மன்னுக நாளுமிம் மண்மிசை யானே.     41

4 கூடல் சங்கமத்துப் பரணி

சோழ அரசர்கள் மேலைச்சளுக்கிய அரசர்களுடன் பலமுறை போர்செய்தார்கள். அவ்வாறு போர்செய்த சோழ அரசர்களில் வீர