ஆம் ஆண்டிலும் அதன் பிறகும் 16,800 பிரதிகள் அச்சிடப்பட்டனவாம். எடுகேஷன் சொஸைடி என்னும் சங்கத்தாரால் நெய்யூரிலிருந்து வெளியிடப்பட்டது.
1861 | தேசோபகாரி: திங்கள் இதழ். கிறிஸ்துவருக்காகவும் இந்துக்களுக்காகவும் ஒவியங்களுடன் அச்சிடப்பட்டது. 1863-ஆம் ஆண்டிலும் அதன் பிறகும் 16,800 பிரதிகள் அச்சிடப்பட்டனவாம். எடுகேஷன் சொஸைடி என்னும் சங்கத்தாரால் நெய்யூரிலிருந்து வெளியிடப்பட்டது. |
1861 | The Lamp of Truth: என்னும் தமிழ் வெளியீட்டை, சென்னை பிஃரீ சர்ச்சு மிஷனைச் சேர்ந்த ரெவரண்டு R. M. பாபூ என்பவர் வெளியிட்டார். |
1863 | தென் திருவாங்கூர் கிறிஸ்துவ தூதன்: இந்த ஆண்டில் வெளிவந்தது. |
1863 | அருணோதயம்: இது தரங்கம்பாடி மிஷன் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு லூதரன் மிஷனால் வெளியிடப்பட்டது. |
1863 | திருச்சபைப் பத்திரிகை: சென்னை லூதரன் மிஷனைச் சேர்ந்த சாமுவேல் பிள்ளை இதனை நடத்தினார். |
1864 | கற்பக விருட்சம்: இப்பத்திரிகையையும் சென்னை லூதரன் மிஷனைச் சேர்ந்த சாமுவேல்பிள்ளை நடத்தினார். |
1864 | தத்துவ போதினி: சென்னை பிரம சமாஜத்தினால் நடத்தப் பட்டது. சுப்பராயலு செட்டியார். இராஜகோபாலாசாரியார். ஸ்ரீதரர் என்பவர்கள் இதைத் தொடங்கினார்கள். சென்னை மயிலாப் பூருக்கடுத்த சென்தோம் என்னும் இடத்தில் தத்துவ போதினி அச்சுக்கூடம் அமைக்கப்பட்டது. இவ்வச்சுக்கூடம் அமைப்பதற்கு ஸ்ரீ பொன்னுச்சாமி தேவர் அவர்கள் 1000 ரூபா நன்கொடையளித்தார். அதில் இந்துமத, சமுதாய விஷயங்கள் மட்டும் எழுதப்பட்டன. இத்துக்களால் நடத்தப்பட்ட முதல் பத்திரிகை இதுவே. |
1865 | விவேக விளக்கம்: மேற்படி பிரம சமாஜத்தினால் மேற்படி தத்துவ போதினி அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது. |
1865 | உதய தாரகை: யாழ்ப்பாணத்திலிருந்து இந்த ஆண்டில் வெளிவந்துள்ளது. எப்போது தொடங்கப்பட்டது என்பது தெரியவில்லை. |
1865 | அமிர்தவசனி: இந்துமதப் பெண்மணிகளுக்காகச் சென்னை யிலிருந்து வெளிவந்த இதழ். இந்தியக் கிறிஸ்துவப் பெண்மணிகள் இதில் கட்டுரை எழுதினார்கள். |