1888 | இந்து நேசன்: திங்களுக்கு இருமுறை. பினாங்கில் அச்சிடப் பட்டது. |
1888 | சன்மார்க்க போதினி: திங்கள் இதழ், சிதம்பரத்திலிருந்து சி. ஆர். சீனிவாச சாஸ்திரியாரால் வெளியிடப்பட்டது. |
1889 | தீர்க்கதரிசன சுப்ரதீபிகை: திங்கள் இதழ். கிறிஸ்து வருக்காக வெளியிடப்பட்டது. மாசிலாமணி என்பவர் இதன் ஆசிரியர். |
1889 | பிரமவித்தியா: திங்கள் இதழ். சி. ஆர். சீனிவாச சாஸ்திரியா ரால் வெளியிடப்பட்டது. |
1890 | கிறிஸ்துவன்: இதுபற்றி ஒன்றும் தெரியவில்லை. கிறிஸ்துவப் பத்திரிகை. |
1890 | சிவபக்திசந்திரிகை: அநந்த வைத்தியநாத சிவன் என்பவரால் திருவாடியிலிருந்து வெளியிடப்பட்டது. 1893 வரையில் வெளிவந்ததாகத் தெரிகிறது. |
1890 | வைதீக சித்தாந்த தீபிகை: திங்கள் இதழ். டி. நாதமுனி நாயுடு என்பவரால் சென்னையிலிருந்து வெளியிடப்பட்டது. |
1890 | வேத விளக்கம்: கிறிஸ்துவப் பத்திரிகை. திங்கள் இதழ். சென்னை அல்பினியன் அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டது. |
1891 | ஞானமித்திரன்: சென்னை ஸ்டார் ஆப் இந்தியா அச்சுக் கூடத்தில் பிரசுரிக்கப்பட்டது. |
1892 | விவேக சிந்தாமணி: திங்கள் இதழ் சி.வி. விசுவநாதையர் இதன் ஆசிரியர். சென்னை ரிப்பன் அச்சு யந்திரசாலையில் அச்சிடப்பட்டது. |
1892 | வித்தியா வினோதினி: சென்னையிலிருந்து வெளியாயிற்று. |
1892 | ஞானதீபம்: திங்கள் இதழ். M.C. சித்தி லெப்பை என்பவரால் கொளும்பில் அச்சிடப்பட்டது. |
1893 | வித்தியாபானு: கோயமுத்தூரிலிருந்து வெளியான திங்கள் இதழ். கே. என். ஈசுவரய்யா என்பவர் இதன் ஆசிரியர். |
1893 | மாதச் சட்டப் பத்திரிகை: திங்கள் இதழ். வி.டி. வேங்கடராம அய்யரால் சென்னையில் வெளியிடப்பட்டது. |