தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு | 139 |
குமரனை முத்துக் குமரனைப் போற்றுதும்” என்று சலாம் என்னும் சொல்லைக் குமர குருபரசுவாமிகள் வழங்கினார். “சுராதிபதி மாலயனும் மாலோடுசலாமிடு சுவாமிமலை வாழும் பெருமாளே!” என்று கூறினார் அருணகிரிநாதர். “மகராஜ ராஜுக்குச் சரபோஜி ராஜுக்கு மந்தர ராஜுக்கு சலாமெனவே” என்றும் “வரபோ சலகுல மணியினைக் கண்டு சரபோஜி மகாராஜா சலாமெனப் பணிந்து” என்றும், சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடகத்தில் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் கூறினார். “சித்தர் விஞ்சையர் மாகர் சபாசென” என்று அருணகிரிநாதர் சபாசு என்னும் சொல்லை எடுத்தாண்டார். “அந்நலங் கொளோர் துலுக்க வஞ்சிமை ஹாத்தேக்கர் பொலந்1 என்றாள் அன்னை கைக்குறி சொன்னதற் கவள் மன்னிடாரம் அளித் தனள்.” என்று சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடகத்தில் உருது மொழிச் சொற்கள் புகுத்தப்பட்டன. இவ்வாறு சில சொற்களைத் தமிழ் இலக்கியங்களில் காணலாம். தமிழ் முஸ்லிம்கள், தமிழ் இலக்கியத்தில் புதிதாகப் படைத்துக் கொடுத்தது நொண்டி நாடகம் என்னும் இலக்கியமாகும். அவை திருக்கச்சூர் நொண்டி நாடகம் முதலியவை. தமிழில் கலந்து வழங்கின அரபுச்சொற்கள், பாரசீகச் சொற்கள். இந்துஸ்தானிச் சொற்கள் ஆகியவற்றின் பட்டியலைக் கீழே தருகின்றேன். இச்சொற்களில் பல இக்காலத்து வழக்கிழந்து விட்டன. |