| 172 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 16 |
சேகனா லெப்பை (?-1848) செய்கப்துல் காதர் நயினார் லெப்பை என்பது இவருடைய பெயர். இப்பெயர் குறுகி சேகனா லெப்பை என்றாயிற்று. சேகனாப் புலவர் என்றும் இவரைக் கூறுவார்கள். முகம்மதியர். காயல் பட்டினத்திலும் சென்னையிலும் இருந்தவர். தமிழ், சம்ஸ்கிருதம், அரபி, பார்சி முதலிய மொழிகளைப் பயின்றவர். திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர், அஷ்டாவதானம் சபாபதி முதலியார் முதலிய புலவர்களின் நண்பர். குத்புநாயகம் என்னும் நூலை 1805-ஆம் ஆண்டில் இயற்றினார். புத்ஹுஷ் ஷாம் என்னும் புராணத்தை 1816-ஆம் ஆண்டில் இயற்றினார். இவர் இயற்றிய வேறு நூல்கள்: திருக்காரணப்புராணம், திருமணிமாலை, கோத்திரமாலை, சுவர்க்கநீதி, நாகையந்தாதி, மக்காக் கலம்பகம். தாண்டவராய முதலியார் (?-1850) சென்னைக்கடுத்த வில்லிவாக்கத்தில் பிறந்தவர் உழலூர் வேலப்ப தேசிகர். தொல்காப்பியம் வரதப்ப முதலியார், சீகாழி வடுகநாதத் தம்பிரான் இவர்களிடம் தமிழ் பயின்றார். ஆங்கிலம். தெலுங்கு, கன்னடம். இந்துஸ்தானி, மராட்டி, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றவர். இவர் காலத்திலிருந்த மகாவித்துவான் இயற்றமிழாசிரியர் இராமாநுச கவிராயருடனும் அவர். மாணவராகிய உரையாசிரியர் சரவணப் பெருமாளையருடனும் இலக்கண இலக்கியங்களைப் பற்றி வாதம் செய்தவர். இவர் சென்னைக் கல்விச் சங்கத்தின் தலைமைத் தமிழ்ப் புலவராக இருந்தார். அந்தச் சங்கம் கலைக்கப் பட்ட பிறகு 1843-இல் செங்கல்பட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்றினார். இவர் இயற்றிய நூல்கள்: இலக்கண வினா விடை (1820), பஞ்சதந்திரக் கதை. (மராட்டிய மொழியிலிருந்து மொழி பெயர்த்து 1826-இல் அச்சிட்டார்) கதாமஞ்சரி (1826), திருத்தணிகைமாலை, திருப்போரூர்ப் பதிகம். இவர் பதிப்பித்த நூல்கள்: வீரமா முனிவர் இயற்றிய சதுரகராதி. இதன் முதல் மூன்று (பகுதிகளை 1824-இல் அச்சிட்டார். இலக்கணப் பஞ்சகம் (நன்னூல் மூலம், அகப்பொருள் மூலம், புறப்பொருள் |