பக்கம் எண் :

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு267

படாமையால் அக்காலத்திலிருந்த தாமோதரம் பிள்ளை முதலிய அறிஞர்கள் அந்நூலை அறியவாய்ப்பு ஏற்படவில்லை. ஆகவே, அவர்கள் கீழ்க்கணக்கு நூல்கள் இன்னவை என்பதை உறுதியாக அறியாமல் மயங்கிப் பல கருத்துக்களை வெளியிட்டார்கள். பிரபந்த தீபிகையில், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இன்னவை என்று கூறும் செய்யுள் இது:

“ஈரொன் பதின்கீழ்க் கணக்கினுட் படும்வகை
    இயம்பு நாலடி நானூறும்
இன்னாமை நாற்பது நான்மணிக் கடிகை சதம்
    இனிய நாற்பான் காரதே
ஆருகள வழிநாற்ப தைந்திணையு மைம்பதும்
    ஐந்துட னிருபானு மாம்
அலகிலா சாரக்கோ வைசதம் திரிகடுகம்
    ஐயிருப தாகு மென்பர்
சீருறும் பழமொழிகள் நானூறு நூறதாஞ்
    சிறுபஞ்ச மூலம் நூறு
சேர்முது மொழிக்காஞ்சி யேலாதி யெண்பதாம்
    சிறுகைந்நிலை யறுபதாகும்
வாரிதிணை மாலைநூற் றைம்பதாம் திணைமொழி
    வழுத்தைம்ப தாம் வள்ளுவ
மாலையீ ரொன்பதாய்ச் சாற்று பிரபந்தம்
    வழுத்துவர்கள் புலவோர்களே.”

இச் செய்யுளினால் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இன்னவை என்பதை அறியலாம். எனவே.

நாலடி நான்மணி நானுற்ப தைந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைசொல் காஞ்சியுடன் ஏலாதி யென்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு

என்னும் செய்யுளில் கூறப்பட்ட பதினெட்டு நூல்களின் பெயர்கள் இவை:

1. நாலடியார். 2. நான்மணிக்கடிகை. 3. இன்னாநாற்பது. 4. இனியவை நாற்பது. 5. கார் நாற்பது 6. களவழி நாற்பது (நால் நாற்பது) 7.