தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு | 51 |
“இஃது பண்டளராமசாமி நாயக்கர் செய்த கணித தீபிகை கிறிஸ்து 1825 'b4- வருசத்துக்குச் சரியான சாலிவாகன 41 வருசம் 1748-இல் பார்த்திவ. வருஷத்தில் பள்ளிக்கூடப் புத்தகசாலையார் செலவினால் வேப்பேரியி லச்சிற் பதிக்கப்பட்டது.” மாணவருக்காக எழுதப்பட்ட இந்நூலில், தமிழ் எண்களின் வரிவடிவத்தில் செய்யப்பட்ட சிறு மாறுதல்களையும் அதன் காரணத்தையும் இந்நூலின் பாயிரத்தில் நூலாசிரியர் கூறுகிறார். இந்தக் கணித தீபிகை இப்போது கிடைப்பது அருமையாகையால், அதன் பாயிரம் முழுவதையும் இங்குத் தருகிறோம்: பாயிரம் “உலக நடைக் குரித்தான மார்க்கம், லௌகீகம் வைதீக மென்றிரு வகைப்படும். அவ்விரண்டு மார்க்கங்களையுங் கண்டும் நடப்பதற்கு, எண்ணென்பதும் எழுத்தென்பது மிரண்டு கண்களாம். ஆனாலிவ் விரண்டனுள் எண்ணானது வேதாங்க மாறனுள் கண் ணெனச் சிறந்த சோதிடத்தோ ரங்கமாதலானும், தமிழினும் எண்ணும் எழுத்துங் கண்ணெனத் தகும் என ஒளவையும், ‘எண்ணென்ப வேனை யெழுத்தென்பவிவ் விரண்டுங், கண்ணென்ப வாழு முயிர்க்கு’ எனத் திருவள்ளுவரும் மற்றும் பிறரு மெண்ணி னையே முற்கூறுகையாலு மிவ்வெண், வலக்கண்ணெனவும் பட்டு, உலகத்திற்குப் பெரும் பயனுடைய தாயிற்று. “இவ்வாறு சிறப்புடைய எண்ணினை, ஆரிய முதலிய பாஷை களில் வழங்குங்கால் ஒன்று முத லொன்பது வரைக்கு மொவ்வொரு அறிகுறி வடிவை யுண்டாக்கி அதைத் தசகுணோத்தரமாக மேல் |