பக்கம் எண் :

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு57

எண்கள், கணக்கை எழுதிச் செய்வதற்கு ஏற்றதாக இல்லாதபடியால், அந்த எண்களுக்குப் பதிலாக அரபு எண்களினால் எழுதுவது நன்றாக இருக்கும். இது பற்றிப் புள்ளி (சுன்னம்) 0 சேர்த்து எழுத முயற்சி செய்யப்படுகிறது.’ ஆனால், இம் முயற்சிக்கு ஆதரவு ஏற்படவில்லை என்று அவ்வறிக்கை கூறுகிறது.

கணித தீபிகையிலிருந்து தமிழ் எண்களினால் அமைந்த கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் கணக்குகளை மாதிரிக்காகக் கீழே தருகிறேன். அவை விரைவாக எழுதுவதற்கு எளிதாக இல்லாமல் எவ்வளவு சங்கடமாக இருந்திருக்கும் என்பது இக் கணக்குகளைக் கண்டு அறியலாம்.

கணித தீபிகை. பக்கம் 28, கூட்டல் கணக்கு. 
476, 5723, 87, 54632. இவைகளைக் கூட்டிச் சொல்லு. 
 476
5723
87
 54632
 60918
1057, 369, 845932, 56. இவைகளைக் கூட்டத் தொகை யென்ன?  
1057  
369  
845932  
56  
847414  
கணித தீபிகை, பக்கம் 32. கழிததல் கணக்கு.  
 5327496 - இல்
2136598 - கழி.
நீக்கு 3190898  
 1235476 - இல்
 1059654 கழி
நீக்கு 175822  
கணித தீபிகை. பக்கம் 37. பெருக்கல் கணக்கு.