பக்கம் எண் :

70மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 16

பெரிதும் வளர்த்தவர்களும் அவர்களே. அச்சியந்திரங்கள் அதிகமாகப் பரவிய காரணத்தினால், 19-ஆம் நூற்றாண்டில் வசன நடை நூல்கள் அதிகமாக வெளிவந்தன.

கிறிஸ்து மதத்தைப் பரவச் செய்வது நோக்கமாகக் கிறிஸ்துவர் இவற்றையெல்லாம் செய்தார்கள். இந்தத் தொண்டுகள் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் வாய்ப்பாக இருந்தன. ஆகவே இதுவும் அவர்கள் செய்த தமிழ்த் தெண்டாகும்.

அடிக்குறிப்புகள்

1. Society for promoting Christian Knowledge.

2. Madras Religious Tract society.

3. Jaffna Tract society.

4. Nagarcoil Religious Tract society.

5. South Travancore Tract Society.

6. Tanjore Tract society.