பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் | 207 |
| | யாரிவை அனைத்தும் ஆய்ந்திட வல்லார்? பாரிசா தாதிப் பனிமலர் அந்தியின் | | 180 | அலர்தலே அன்னவை விளர்நிறம் கிளர நறுமணம் கமழ்தற் குறுகா ரணமென நேற்றிரா நடேசர் சாற்றிடும் முன்னர் நினைத்தோம் கொல்லோ? உரைத்தபின் மற்றதன் உசிதம்யார் உணரார்? நிசியலர் மலர்க்கு | | 185 | வெண்மையும் நன்மணம் உண்மையும் இலவேல் எவ்வணம் அவற்றின் இஷ்டநா யகராம் ஈயின மறிந்துவந் தெய்திடும்? அங்ஙனம் மேவிடில் அன்றோ காய்தரும் கருவாம்? இவ்விதம் நோக்கிடில் எவ்வித தோற்றமும் | | 190 | செவ்விதிற் பற்பல காரணச் செறிவால் அவ்வவற் றுள்நிறை அன்பே ஆக்கும். சிற்றறி வா தலான் முற்றுநாம் உணரோம். அந்தியில் இம்மலர் அலர்வதேன் என்பதிங் கறிகிலோம் ஆயினும் அதற்குமோர் காரணம் | | 195 | உளதென நம்பலே யூகம், அதனால் உலகிடைத் தோன்றும் உறுகணுக் கேது நலமுற நமக்கிங் கிலகா ததினாற் பலமுறை நம்மையே பரிந்திழுத் தாண்டவர் இலையுல கிடையென எண்ணுவ தெங்ஙனம்? | | 200 | யாரிங் குலகெலாம் அறிந்திட வல்லார்? பாருமிங் கீதோ! பரம தயாநிதி நங்குரு நாத னென்பதார் ஒவ்வார்? நம்புவம் நீரும் நானுமிங் கொருப்போல். ஆயினும் பாரும்! அம்மணி மனோன்மணி, |
பாரிசாதம் - பவழமல்லிப்பூ. இது இரவில் மலர்வது. 179-181 வரிகள்: வெண்ணிற மலர்கள் இராக் காலத்தில் மலர்வதன் காரணம், இருட்டில் வெண்ணிறம் காட்டி வண்டுகளையும் ஈக்களையும் கவர்ச்சி செய்வதற்காக என்பது. உசிதம் - பொருத்தம். நிசி - இராத்திரி. செறிவு - அடர்ச்சி, நெருக்கம். உறுகண் - துன்பம். ஏது - காரணம். இலகாதது - விளங்காதது, தெரியாதது. இசைவு - பொருத்தம். |