214 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
“அகத்தியர் ஆய்ந்த தமிழ்மொழி, நமது தாய்மொழி. அதை அன்னியருக்கு அடிமைப்படாதபடி காப்பாற்றுவது உங்கள் கடமை யன்றோ ! “உங்களைத் தொட்டிலில் இட்டு, உம்முடைய பெரியோர்களின் சிறப்பையும் புகழையும் பாடி உங்கள் அன்னைமார் தாலாட்டி வளர்த்த காலம் முதல், அவர்களுடைய வீர தீரங்களைக் கேட்டு வளர்ந்தீர்கள். தமிழையும் பண்டையோர் வீரத்தையும் அருந்தி வளர்ந்த நீங்கள், ஆண்மையும் உரிமையும் இழந்தவர் அல்லர். பொதிகைமலைக் காற்றைச் சுவாசித்து வளர்ந்த நீங்கள் அன்னியனுக்கு அடிமைப்பட்டு நாட்டபிமானம் இல்லாமல் நடைப் பிணமாகத் திரியும் பேடிகளல்லர். நீங்கள் தேசாபிமானம், பாஷாபிமானம், ஆண்மை, சுதந்தரம், வீரம், ஆற்றல் அற்றவர்கள் என்று உங்களைத் துச்சமாக எண்ணிப் போருக்குவந்த பகைவர்மேல் நீங்கள் சினங்கொண்டிருப்பது முழுவதும் சரியே. போரிலே என்ன ஆகுமோ என்று உங்கள் மக்கள் மனைவியர் உறக்கம் இல்லாமல் அழுகின்றனர். அதனைக் கண்டு உங்கள் நெஞ்சம் பதைத்துக் கோபம் கொண்டது இயல்பே. சிங்கத்தை அதன் குகையில் சென்று பிடரிமயிரைப் பிடித்து இழுத்தால் அது சினங் கொள்ளாதிருக்குமோ? உரிமை பறிபோகும்போது அதனை ஆண்மையோடு காப்பாற்றுவது வீரர்களின் கடமையல்லவா? “நாட்டுப் பற்று என்னும் தீ வேள்வியைவிடத் தூய்மையானது என்று விண்ணவரும் கருதுவர். படையெடுத்து வந்து உங்கள் உள்ளத்தில் கோபத் தீயை மூட்டிவிட்ட பகைவர், தாங்களே உங்கள் கோபத் தீயை எரியவிடும் விறகுகளாக அமைகிறார்கள். இன்று நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தமும் உலகமுள்ளளவும் சொல்லும், ‘பாண்டி நாட்டார் சுதந்தரம் உடையவர். அவர்களிடம் போகாதீர்கள். சுதந்தரமும் செருக்கும் அவர்களுக்கு உயிராக, உணவாக, மூச்சாக உள்ளன?’ என்று. போர்க்களத்திலே நீங்கள் கொள்ளும் காயங்கள், வெற்றி மகள் உங்களுக்கு முத்தமிட்டளித்த வெற்றி முத்திரை என்று கருதுங்கள். (போர்வீரர்கள் மீண்டும் ஆரவாரம் செய்கின்றனர்.) “போரில் அடைந்த காயம் உங்கள் வீரப் புகழின் அடையாளம். இப் பெருமை யாருக்கு வாய்க்கும்! உங்கள் பின்சந்ததியார் தலைமுறை தலைமுறையாகப் பேசுவார்கள்: ‘நமது பெரியோர் போரிட்டுப் புண் அடைந்து பெற்ற சுதந்தரம் அல்லவா நாம் இப்போது அடைந்துள்ள |