1877 | சிவகாமி அம்மையாரைத் திருமணம் செய்துகொண்டார். திருநெல்வேலியில் ஆங்கிலத் தமிழ் உயர்தரப் பள்ளியின் தலைமை ஆசிரியராக அமர்ந்தார். | 1879 | மீண்டும், திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் ஆசிரிய ரானார். |
1880 | எம். ஏ. பரீட்சையில் தேறினார். |
1882 | திருவனந்தபுரம் அரண்மனையில் பிறவகை சிரஸ்தார் (Commis sioner of Seperate Revenue) என்னும் உத்தியோகத்தில் அமர்ந்தார் |
1884 | திருவனந்தபுரத்தில் சைவப் பிரசார சபையைச் சில நண்பர்களுடன் சேர்ந்து நிறுவினார். |
1885 | திருவனந்தபுரம் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகவும் முதல்வராகவும் அமர்ந்தார். |
1888 | சயன்ஸ் பயில்வதற்கு முன்னுரையாக “நூற்றொகை விளக்கம்” என்னும் நூலை இயற்றி வெளியிட்டார். |
1889 | சிவகாமி சரிதை என்னும் கவிதைநூலை இயற்றினார். இது ஆங்கிலக் கவிதையைத் தழுவி இயற்றப்பட்டது. |
1891 | புகழ்பெற்ற மனோன்மணீயம் என்னும் நாடக நூலை முதன் முதலாக வெளியிட்டார். |
1894 | “Early Sovereigns of Travancore” (திருவாங்கூரின் பழைய அரசர்கள்) என்னும் நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். |
1895 | “The Age of Gnanasambandar” (ஞானசம்பந்தரின் காலம்) என்னும் ஆராய்ச்சிக் கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதினார். (Madras Christian College Magazine.) |
1896 | “ராய்பகதூர்” என்னும் சிறப்புப் பட்டம் பெற்றார். |
1897 | ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி திங்கட்கிழமை காலை 8 மணிக்கு உயிர் நீத்தார். |