பக்கம் எண் :

234மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

  40வந்தனம் வந்தனம் உன்திரு வடிக்கே
  (நிலைமண்டில ஆசிரியப்பா)
சீவகன்: குடிலா! நமது குறைவிலாப் படைகள்
அடையவும் அணிவகுத் தனவோ?
குடி: அடியேன்.
   நாரணர்க் கன்றோ நீளரண் காப்பு?
சொன்னதப் படியென உன்னினன்.
சீவ: ஆமாம்!
சீவ: 45அதற்கேன் ஐயம்?
குடி: அவர்க்கது முற்றும்
  இதக்கே டென்றனர், ஆயினும் போயினர்.
  (படைகள் வணங்கி)
படைகள்: ஜயஜய! ஜீவக வேந்த ! விஜயே!
குடி: அதிர்கழல் வீரரும் அரசரும் ஈதோ
எதிர்பார்த் திருந்தனர் இறைவ! நின் வரவே.
 50நாற்றிசை தோறும் பாற்றினம் சுழல
நிணப்புலால் நாறிப் பணைத்தொளி பரப்பும்
நெய்வழி பருதி வைவேல் ஏந்திக்
கூற்றின்நா என்னக் குருதிகொப் புளித்து
மாற்றலர்ப் பருகியும் ஆற்றலா தலையும்


அடையவும் - முழுவதும். இதக்கெடு - நன்மைக் கேடானது.பாற்று இனம் - பருந்துகளின் கூட்டம்; (பாறு - பருந்து). நிணம் - கொழுப்பு. புலால் - மாமிசம், இறைச்சி. பணைத்து - பருத்து. பருதி - சூரியன், ஒளி. வை - கூர்மை. குருதி - இரத்தம். மாற்றலர் - பகைவர். பருகியும் - அவர் உயிரைக் குடித்தும்