| 195 | பிரையுறு பாலென உறைவதென் உதிரம். நாணா துன்முகம் காணுவ தெவ்விதம்? நடுநிசிப் பொழுது தொடுகற் படைவழி முனிவரன் பிறகுனைத் தனிவழி விடுத்திவண் தங்குவன் யானும்! தங்குவை நீயும்! |
| 200 | இங்கதற் கிசையேன். இறக்கினும் நன்றே! |
| | (மௌனம்) |
| | கற்படை இதுதான் எப்புறத் ததுவோ! உரைத்திலர் முனிவர் ஒளித்தனர். இஃதும் உளதோ? இலதோ? உணர்பவர் யாவர்? களவழி இதுமுனி கட்டற் பாற்றோ |
| 205 | முனமே முனிவன் மொழிமணம் அன்றோ இனையவிப் போர்க்கெலாம் ஏதுவாய் நின்றது! கூடிய தன்றது! ஏ! ஏ! குடிலனை ஓடியிங் கழையாய்! |
| | (சேவகன் வர) |
| | (சேவகன் போக) |
| | உண்மையெப் படியென நாடுமுன் வாடி நலிதல் என்பயன்? |
| 210 | நம்புதல் எல்லாம் துன்பமே தருவது. நம்பினோம் நாரா யணனை, அதற்கா வம்பே செய்தான் மாபா தகனவன். நட்பே நமக்கிங் குட்பகை யானது! முனிவரோ முதுநகர் விடுத்தநாள் முதலா |
| 215 | மனத்திடைக் களங்கம் வைத்துளர். அஃதவர் விளம்பிய மொழியே விளக்கிடும். நன்றாய் ஆரா யாமுனம் அனுப்புதல் தவறே. |
| | (குடிலன் வர) |
பிரையுறு பால் என - உரை குற்றிய பால்போல. தொடு கற்படை - தோண்டி அமைக்கப்பட்ட சுரங்க வழி. களவழி - கள்ள வழி, சுரங்க வழி. நலிதல் - வருந்துதல். களங்கம் - வஞ்சனை, மாசு.