பக்கம் எண் :

306மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

ஐந்தாம் அங்கம்

முதற் களம்

இடம்:கோட்டைக்கும் வஞ்சியர் பாசறைக்கும்
நடுவிலுள்ள வெளி.

காலம்:யாமம்.

(குடிலன் தனியே நடக்க)

(நேரிசை ஆசிரியப்பா)

குடிலன் (தனிமொழி)
  திருமணம் கெடினும் தீங்கிலை ஈங்கினி.
இருசரம் இன்றி எப்போ ரிடையும்
ஏகார் மதியோர். இதில்வரு கேடென்?
ஆகா வழியும் அன்றிது. சேரனை
 5அணைந்தவன் மனக்கோள் உணர்ந்ததன் பின்னர்
சுருங்கையின் தன்மை சொல்லுதும் ஒருங்கே.
இசைவனேற் காட்டுதும். இன்றேல் மீள்குதும்.
பசையிலா மனத்தன்! பணிதலே விரும்புவன்!
பாண்டிநா டாளவோ படையெடுத் தானிவன்?
 10தூண்டிடு சினத்தன்; தொழுதிடில் மீள்வன்.
வேண்டிய நீரும் விழைந்ததோர் தாரும்
பாண்டில் பாண்டிலா யாண்டுகள் தோறும்
அனுப்புதும். குறைவென் அதனில்? இதுவே
மனக்குறை நீக்கு மார்க்கம். - வதுவை
 15போயினென்? ஆயினென்? பேயன் நம்மகன்


இரு சரம் - இரண்டு அம்புகள். மனக்கோள் - மனத்தில் உள்ள கருத்து. பாண்டில் - வண்டி. நம் மகன் - பலதேவன்.