பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்313

   அறியா வெறியன். அன்பொ டிம்மாலை
 115குறியா நீவிடு தூதையும் கொண்டிலன்.
அண்டிய சீவ ராசிகள் அனைத்தையும்
மண்டமர் இதில்நின் வைவாள் தனக்கே
இரையிடல் ஒன்றே விரதமாக் கொண்டனன்.
பித்தன் ஒருவன் தன்னால் இத்தமிழ்
 120நாடெலாம் வெறுஞ்சுடு காடாய் விடுமே.
ஆவ! இப்பெரும் பாவமும் பழியும்
அஞ்சினேன்; அஞ்சினேன்! எஞ்சலில் கருணை
யுருவே! அடியேற் கொருமொழி தருவையேல்
ஒருவர்க் கேனு முறுதுய ரின்றி
 125அரசனும் புரிசையும் அரைநொடிப் போதிலுன்
கரதல மாமொரு கௌசலம்,
காட்டுகே னடியேன் கேட்டரு ளரசே!
  (நிலைமண்டில ஆசிரியப்பா)
புரு (தனதுள்) பாதகா! விசுவாச காதகா!
  ஆ! ஹா!
(சிரித்து)
குடி: அரசன் கைப்படி லாங்குளார் யாருமென்
 130உரைதவ றாதுன் குடைக்கீ ழொதுங்குவர்.
மங்கல மதுரையு மிங்கிவர் வழியே
உன்னா ணைக்கீ ழொ துங்குதல் திண்ணம்.
தொல்புவி தோற்றியது தொட்டர சுரிமை
மல்கிய புவியிஃ ததனால், “மன்னவன்”
 135என்றபே ரொன்றுநீ யீவையே லென்றும்,
நின்னா ணையின்கீழ் நின்றுநீ முன்னர்
வேண்டிய தாரொடு நீருமே யன்றிமற்
றீண்டுள எவையே யாயினும் வேண்டிடில்,


குறியா - குறியாக. ஆவ - ஐயோ, இரக்கச்சொல். கரதலமாம் - கையில் ஆகும். கௌசலம் - சாமர்த்தியம். விசுவாச காதகன் - செய்ந்நன்றியைக் கொன்றவன். திண்ணம் - உறுதி.