338 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
புராணக்கதை விளக்கம் அகத்தியர் கடல்குடித்த கதை பக்கம் 17 ஒருகாலத்தில் மித்திரர் வருணர் என்பவர்கள் பேரழகியாகிய ஊர்வசியைக் கண்டு அவள் மீது ஆசைகொண்டார்கள். அதனால் அவர்களுக்கு விந்து வெளிப்பட்டது. ஒருவர் விந்து குடத்திலும், மற்றொருவர் விந்து நீரிலும் விழுந்தன. குடத்தில் விழுந்ததிலிருந்து அகத்தியரும். நீரில் விழுந்ததிலிருந்து வசிஷ்டரும் உண்டானார்கள். குடத்திலிருந்து உண்டானபடியினாலே அகத்தியருக்குக் குடமுனி என்று பெயர் ஏற்பட்டது. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஒருகாலத்தில் போர் ஏற்பட்டது. விருத்திராசுரனும் ஏனைய அசுரர்களும் கடலின் உள்ளே புகுந்து ஒளிந்துகொண்டனர். அப்போது இந்திரன் அகத்திய முனிவரிடம் வந்து அசுரர்களை வெளிப்படுத்தவேண்டும் என்று வேண்டிக்கொள்ள, அதற்கு அவர் உடன்பட்டுக் கடல்நீரைக் கையினால் முகந்து அருந்தினர். அதனால் கடல்நீர் வற்றியது. அப்போது அங்கு மறைந்திருந்த விருத் திராசுரன் முதலிய அசுரர்களை இந்திரன் கொன்றான். பிறகு, இந்திரன் வேண்டிக்கொண்டபடி அகத்தியர் மீண்டும் நீரைக் கடலில் உமிழ்ந்தார். “ முனிக்கர சு கையால் முகந்து, முழங்கும் பனிக்கடலும், உண்ணப் படும்.” சகரர் சாகரம் தோண்டிய கதை பரத கண்டத்தை அரசாண்ட சகர சக்கரவர்த்தி ஒரு காலத்தில் அசுவ மேத யாகம் செய்யத் தொடங்கினார். யாகம் செய்வதற்கு முன்னர், யாகக் குதிரையைத் தேசம் எங்கும் சுற்றி வலம்வரும்படி அனுப்புகிற வழக்கம்போல, தமது குதிரையை அனுப்பினார். பொறாமை கொண்ட இந்திரன். ஒருவரும் அறியாமல் யாகக் குதிரையைக் கொண்டுபோய்ப் பாதாள லோகத்திலே தவம் செய்துகொண்டிருந்த கபில முனிவரின் |