பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் | 37 |
படைஞனது சகோதரியைக் கற்பழித்துக் கெடுத்துவிட்டது பற்றி யுண்டான வைரமே என்பது, படைஞன் வேலாற் பலதேவனைத் தாக்கியபொழுது கூறிய வன்மொழியாலும் அவன் தங்கைக்கு அரண் மனையினின்றும் பலதேவன் திருடிப் பரிசாக அளித்த ஒரு பொற்றொடி அவன்கையில் அக்காலம் இருந்தமையாலும் வெளிப் படுகின்றது. படை நியதி கடந்த அச் சேவகனை அருகுநின்ற வீரர் அக்கணமே கொன்றுவிட்டார்கள். பலதேவனும் மூர்ச்சை தெளிந்து கொண்டான். ஆயினும் படையிற் பிறந்த குழப்பம் தணியாது பெருகி விட்டதனால் பாண்டியன் சேனை சின்னபின்னப்பட்டுச் சிதறுண்டு ஜீவகன் உயிர் தப்புவதும் அரிதாகும்படி தோல்வி நேர்ந்தது. சத்திய வாதியாகிய நாராயணன் என்னும் ஒரு சுத்தவீரன் அக்காலம் வந்து உதவி செய்யாவிடில் அப் போர்க்களத்தில் ஜீவகன் மாண்டேயிருப்பன். இந் நாராயணன் யாரென்றால், நடராஜனுடைய நண்பன். இவன் குடிலனுடைய சூதுகள் தெரிந்தவன். அரசன் நிந்தித்துத் தள்ளினும் அவனைக் காப்பாற்றும் பொருட்டு அவனை விட்டு நீங்காது மதுரையி னின்றும் அவனோடு தொடர்ந்து வந்த பரோபகாரி. குடிலன் இவன் திறமும் மெய்ம்மையும் அறிந்துளானாதலால், இந் நாராயணன் போர் முகத்திருக்கில் தான் எண்ணியபடி ஜீவகனுயிருக்குக் கேடுவர வொட்டான் எனக் கருதிச் சண்டை ஆரம்பிக்கும் முன்னமே அவனைக் கோட்டைக் காவலுக்காக நியமித்தனுப்பினான். ஆயினும் போர்க்களமே கண்ணாக இருந்த நாராயணன் சேனையிற் குழப்பம் பிறந்தது கண்டு சில குதிரைப் படைகளைத் திரட்டிக் கொண்டு திடீரென்று பாய்ந்து சென்று அரசனையும் எஞ்சின சேவகரையும் காப்பாற்றிக் கோட்டைக்குட் கொண்டுவந்து விடுத்தான். சுத்தவீரனாகிய அரசன் இங்ஙனம் தான் பகைவருக்கு முதுகிட்ட இழிவை நினைந்து நினைந்து துக்கமும் வெட்கமும் தூண்டவே தற்கொலை புரிய யத்தனிக்கும் எல்லை நாராயணன் மனோன்மணியினது ஆதரவின்மையை அரசனுக்கு நினைப்பூட்டி அக் கொடுந்தொழிலிலிருந்து விலக்கிக் காத்தான். அவனது நயவுரையால் அரசன் ஒருவாறு தெளிவடைந்திருக்கும்போது சேரன் விடுத்த ஒரு தூதுவன் வந்து, ஒரு குடம் தாமிரவர்ணி நீரும் ஓர் வேப்பந்தாரும் போரிலே தோற்றதற்கு அறிகுறியாகக் கொடுத்தால் சமர் நிறுத்துவதாகவும், அன்றேல் மறுநாட் காலையிற் கோட்டை முதலிய யாவும் வெற்றிடமாம்படி தும்பை சூடிப் போர் முடிப்பதாகவும் கூறினான். போரில் ஒருமுறை தான் புறங் கொடுத்த புகழ்க்கெடுதியை |