44 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
மனோன்மணீயம் பாயிரம் கடவுள் வணக்கம் (நேரிசை வெண்பா) வேத சிகையும் விரிகலையும் மெய்யன்பர் போதமும் போய்த்தீண்டாப் பூரணமே-பேதமற வந்தெனை நீ கூடுங்கால் வாழ்த்துவர்யார் வாராக்கால் சிந்தனையான் செய்ம்முறையென் செப்பு. தமிழ்த்தெய்வ வணக்கம் (பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா) நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கொழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில், தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே தெக்கணமும்அதிற்சிறந்த திரவிடநல் திருநாடும்; அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே. 1 பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையரு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமும்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே. 2 - இவையிரண்டும் ஆறடித்தரவு கடல்குடித்த குடமுனியுன் கரைகாணக் குருநாடில் தொடுகடலை யுனக்குவமை சொல்லுவதும் புகழாமே. 1 ஒருபிழைக்கா அரனார்முன் உரையிழந்து விழிப்பாரேல் அரியதுன திலக்கணமென் றறைவதுமற் புதமாமே. 2 |