சொல்
|
அருஞ்சொற்பொருள் |
எந்திரம் | சூத்திரப்பொறி ; மதிலுறுப்பு ; கரும்பு ஆலை ; தேர்ச்சக்கரம் ; குயவன் திரிகை ; பஞ்சு கொட்டும் எந்திரம் ; செக்கு ; தீக்கடைகோல் ; மந்திரச் சக்கரம் . |
எந்திரவாவி | எந்திரக் கிணறு , நீரை நிரப்பவும் வடிக்கவும் உரிய பொறியையுடைய நீர்நிலை . |
எந்திரவில் | தானே எய்யும் விற்பொறி . |
எந்திரவூசல் | பிறராட்டாத நிலையில் தானே ஆடும் பொறியமைந்த ஊசல் . |
எந்திரவூர்தி | சூத்திரத்தால் தானே இயங்கும் ஊர்தி . |
எந்திரவெழினி | பொறியினால் எழவும் விழவும் கூடியபடி அமைக்கப்பட்ட திரை . |
எந்திரன் | தேர் . |
எந்திரி | பாவையை ஆட்டுவிப்போன் . |
எந்து | என்ன ; எப்படி ; ஏன் . |
எந்தை | எம் தந்தை ; எம் தலைவன் ; எம் தமையன் . |
எந்தைபெயரன் | எம் தந்தையின் பெயர் தாங்கிய என் மகன் . |
எப்படி | எவ்வண்ணம் , எவ்விதம் , எவ்வாறு . |
எப்பொழுது | எக்காலம் , எப்பபோது . |
எப்பொழுதும் | எக்காலமும் , எல்லாக் காலமும் . |
எப்போது | காண்க : எப்பொழுது . |
எப்போதும் | காண்க : எப்பொழுதும் . |
எப்போழ்து | காண்க : எப்பொழுது . |
எதிர்வு | எதிர்ப்படுகை ; எதிர்காலம் ; நேரவிருப்பது . |
எதிர்வெட்டு | மறுதலை , மறுப்பு . |
எதிர்வைத்தல் | சரிவைத்தல் . |
எதிர | ஓர் உவமவுருபு . |
எதிரடையோலை | அடையோலை எழுதித் தருபவருக்குக் கொடுக்கும் ஆதரவுச்சீட்டு . |
எதிரதாக்காத்தல் | வரக்கடவதாகிய ஒன்றை முன்னே அறிந்து அதன் காரணத்தை விலக்குதல் . |
எதிரதுதழீஇய எச்சவும்மை | எதிர்காலச் செயலை விளக்கி நிற்கும் இடைச்சொல் ; ' சாத்தனும் வருவான் ' என்றால் ' கொற்றுனும் வருவான் ' என்பது வெளிப்படுதல் போல்வது . |
எதிரது தழுவுதல் | உத்தி முப்பத்திரண்டனுள் ஒன்று , முன்னில்லாதனவாயினும் தற்கால வழக்காயின் அவற்றை ஏற்றுக் கொள்ளுதல் . |
எதிரது போற்றல் | உத்தி முப்பத்திரண்டனுள் ஒன்று , முன்னில்லாதனவாயினும் தற்கால வழக்காயின் அவற்றை ஏற்றுக் கொள்ளுதல் . |
எதிரம்பு கோத்தல் | ஒருவர் எய்யும் அம்பிற்கு எதிராக அம்பு விடுகை ; எதிர்த்து நிற்றல் . |
எதிரழற்சி | எரிப்புண்டாக்கும் மருந்து . |
எதிராசன் | துறவிகளுள் சிறந்தவராகிய இராமானுசர் . |
எதிராப்பு | கழலாதபடி வைக்கும் ஆப்பு . |
எதிராளி | பகைவன் ; எதிர்வழக்காடி , பிரதிவாதி ; எதிரிடைக்காரன் , போட்டி போடுபவன் ; சமமாயிருப்பவன் . |
எதிரி | பகைவன் ; எதிர்வழக்காடி , பிரதிவாதி ; எதிரிடைக்காரன் , போட்டி போடுபவன் ; சமமாயிருப்பவன் . |
எதிரிடுதல் | எதிர்ப்படுதல் ; எதிர்த்தல் ; மாறுபடுதல் . |
எதிரிடை | எதிர்க்கை ; பகை ; போட்டி ; சமமாயிருப்பது ; எதிரிடை முறி . |
எதிரிடைச்சீட்டு | காண்க : எதிரடையோலை |
எதிரிடைமுறி | காண்க : எதிரடையோலை . |
எதிரிலி | எதிரில்லாதவன் , எதிர்ப்பார் எவரும் இல்லாதவன் ; ஒப்பில்லாதவன் . |
எதிருத்தரம் | மறுமொழி . |
எதிருரைத்தல் | எதிர்த்துப் பேசுதல் ; மறுமொழி உரைத்தல் . |
எதிரூன்றுதல் | எதிரூன்றல் , போருக்கு உறுதியாய் எதிர்நிற்றல் . |
எதிரெடுத்தல் | காண்க : எதிர்(ரு)க்கெடுத்தல் . |
எதிரேவல் | ஒருவன் செய்த ஏவலின்பொருட்டு மாறாக அவன் மீது ஏவுகை ; ஏவலையெடுக்கச் செய்கை . |
எதிரேற்றம் | மாறாக எதிரே போதல் ; போருக்கு எதிரேறிச் செல்லுகை . |
எதிரேற்றல் | எதிர்கொள்ளுதல் , எதிர்கொண்டு வரவேற்றல் ; பிறன்மேல் வருவதைத் தானேற்றல் ; எதிர்த்தல் ; எதிரேவல் ; தடுத்தல் . |
எதிரேறு | வலிமை ; எதிர்கொள்ளல் . |
எதிரொலி | மாற்றொலி . |
எதிரொலித்தல் | பிரதித்தொனி செய்தல் , எதிரொலி காணல் . |
எது | யாது . |
எதுகுலகாம்போதி | ஒரு பண்வகை . |
எதுகுலம் | யதுகுலம் , யதுவின் மரபுவழி . |
எதுகை | எதுகைத்தொடை , செய்யுளடிகளிலாயினும் சீர்களிலாயினும் முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாமெழுத்து ஒன்றிவருவது ; பொருத்தம் . |
எதுகைத்தொடை | எதுகைத்தொடை , செய்யுளடிகளிலாயினும் சீர்களிலாயினும் முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாமெழுத்து ஒன்றிவருவது ; பொருத்தம் . |
எதோள் | எவ்விடம் . |
எதோளி | எவ்விடம் . |
எந்த | வினா , வினாப் பொருளில் வரும் பெயர்ச் சொல்லுக்கு முன்வரும் ஓர் இடைச்சொல் . |
எந்திரக்கிணறு | நீரை நிறைத்தற்கும் வடித்தற்குமுரிய பொறியையுடைய கிணறு . |
எந்திரகாரன் | சூத்திரக்காரன் . |
எந்திரநாழிகை | நீர் வீசும் ஒருவகைக் கருவி . |
எந்திரப்பொருப்பு | பல்வகைப் பொறிகள் அமைக்கப்பட்ட செய்குன்று . |
எதிர்முறி | காண்க : எதிரிடைமுறி |
எதிர்மூச்சுப்போடுகை | எதிரெதிராக நின்று மூச்சு வாங்க நெற்குற்றுகை . |
எதிர்மை | எதிர்காலத்தில் நிகழ்வது . |
எதிர்மொழி | மறுமொழி ; மறுப்புரை ; வழக்கில் எதிர்வழக்காடி கொடுக்கும் பதிலுரை . |
எதிர்வ | முன்னே வருவன . |
எதிர்வட்டி | செலுத்தும் மூலத்தொகைக்கு ஏற்பக் கழிக்கும் வட்டி . |
எதிர்வரவு | பிற்காலத்து வருகை . |
எதிர்வழக்காடி | வழக்குத் தொடுத்தோனுக்கு எதிராக வழக்காடுபவன் , பிரதிவாதி . |
எதிர்வழக்கு | எதிர்வாதம் , பிரதிவாதம் . |
எதிர்வாக்கு | பதிலுரை . |
எதிர்வார்த்தை | பதிலுரை . |
எதிர்வாதம் | பிரதிவாதியின் வாதம் ; மாறுபடக் கூறுகை . |
எதிர்வாதி | எதிர் வழக்காடி , வழக்கிற் பிரதிவாதி ; தன் பக்கத்துக்கு எதிராக வாதிப்பவன் ; எதிர்க்கட்சி பேசுவோன் . |
எதிர்வாய் | ஏரியின் முன்வாய் . |
எதிர்விற்பனை | போட்டி வாணிகம் . |
எதிர்வினை | எதிர்காலத்துச் செய்கை , எதிர் காலத்தில் நேரவிருக்கும் செயல்கள் ; எதிர்மறை வினை . |
![]() |
![]() |
![]() |