ஏவற்காரப்பேய் முதல் - ஏற்றம்போடுதல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஏழுலகம் மேலேழுலகம் ; கீழேழுலகம் .
ஏழை அறியாமை ; அறிவிலான்(ள்) ; வறியவன் ; பேதை ; பெண் .
ஏழைக்குறும்பு வறுமையைக் காட்டி மோசஞ்செய்கை ; பேதைபோலக் காட்டிச் செய்யும் குறும்பு .
ஏழைத்தன்மை அறியாமையாகிய குணம் ; வறுமைநிலை .
ஏழைமை அறியாமை , பேதைமை ; வறுமை .
ஏழைமைகாட்டுதல் கோழைத்தனமாதல் .
ஏழையாளன் வறுமையுடையான் .
ஏழொத்து தாளவகை .
ஏளனம் எளிமை ; இகழ்ச்சி ; கேலி ; அவமதிச் சிரிப்பு ; பரிகாசம் .
ஏளிதம் எளிமை ; இகழ்ச்சி ; கேலி ; அவமதிச் சிரிப்பு ; பரிகாசம் .
ஏற்க பொருந்த ; இணங்க ; இசைவாயிருக்க ; எதிர்க்க ; பிச்சைவாங்க ; முன்னமே .
ஏற்கவே பொருந்த ; இணங்க ; இசைவாயிருக்க ; எதிர்க்க ; பிச்சைவாங்க ; முன்னமே .
ஏற்கெனவே ஏற்கவே , முன்னமே .
ஏற்ப தக்கபடி , பொருந்த ; ஓர் உவமவுருபு .
ஏற்படுத்துதல் உண்டுபண்ணுதல் ; இணங்கச் செய்தல் ; உறுதிப்படுத்துதல் ; ஆயத்தப் படுத்துதல் ; அமர்த்துதல் .
ஏற்படுதல் உண்டாதல் ; தலைப்படுதல் ; உடன்படுதல் .
ஏற்பாடு ஒழுங்கு ; நியமனம் ; உடன்படிக்கை ; விவிலியத்தில் புதிய பழைய ஏற்பாடுகள் .
ஏற்பு பொருத்தம் , தகுதி ; ஏற்றுக்கொள்கை .
ஏற்புடைக்கடவுள் ஒரு நூலுக்கு உரிமை பூண்டுள்ள கடவுள் ; வழிபடுகடவுள் .
ஏற்புழி ஏற்குமிடத்து .
ஏற்புழிக்கோடல் நூல் உத்திகளுள் ஒன்று , ஒரு விதியைப் பொருந்தும் இடங்களில் அமைத்துக் கொள்ளுகை .
ஏற்போன் இரப்பவன் , யாசிப்பவன் .
ஏற்றக்கால் துலாவைத் தாங்குங்கால் ; தூண் .
ஏற்றக்குறைச்சல் உயர்வு தாழ்வு ; ஒவ்வாமை .
ஏற்றக்கோல் துலாமரத்தில் நீர் முகக்கும் கழி .
ஏற்றச்சால் துலாச் சால் , நீரிறைக்குஞ் சால் , நீர் மொள்ளும் பாத்திரம் .
ஏற்றணை அரியணை ; அரசுகட்டில் .
ஏற்றத்தாழ்ச்சி உயர்வுதாழ்வு , வேற்றுமை ; பெருமை சிறுமை ; மேடுபள்ளம் .
ஏற்றத்தாழ்வு உயர்வுதாழ்வு , வேற்றுமை ; பெருமை சிறுமை ; மேடுபள்ளம் .
ஏற்றது இயன்றது ; பொருந்தியது ; விருப்பமானது ; தக்கது .
ஏற்றப்பட்டரை ஏற்றமிட்டு இறைக்கும் கிணற்றைச் சூழந்த விளைநிலம் .
ஏற்றப்பாட்டு நீரிறைக்கும்போது பாடும் பாட்டு .
ஏற்றபடி இசைந்தவாறு , விரும்பியவாறு ; தக்கவாறு .
ஏற்றம் மேலே ஏறுகை ; மேடு ; புகழ் ; உயர்ச்சி ; மிகுதி ; மேன்மை ; நினைவு ; துணிவு ; பெருக்கம் ; நீரேற்றம் ; நீர்ப்பெருக்கு ; ஏற்றமரம் ; நீரிறைக்குங் கருவி .
ஏற்றம்போடுதல் துலாமரம் அமைத்தல் ; தோப்புக்கரணம் போடுதல் .
ஏவற்காரப்பேய் ஏவற்பேய் ; காளிதேவிக்கு ஏவல் செய்யும் பேய் .
ஏவற்காரன் காண்க : ஏவலன் .
ஏவற்சிலதி குற்றேவல் செய்யும் பெண் .
ஏவற்பணி கட்டளையிடப்பட்ட தொழில் .
ஏவற்பேய் தூண்டிவிடப்பட்ட பேய் ; பெரிய பேய்க்கு ஊழியம் செய்யும் குட்டிப்பிசாசு .
ஏவறை ஏப்புழை , மறைந்து அம்பு எய்தற்குரிய மதில் உறுப்பு .
ஏவன் எவன் ; யாவன் .
ஏவாகனம் அசமதாகம் ; ஓமவித்து .
ஏவாங்கம் அசமதாகம் ; ஓமவித்து .
ஏவாங்கனம் அசமதாகம் ; ஓமவித்து .
ஏவிளம்பி அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்தோராம் ஆண்டு .
ஏவு ஏ , அம்பு ; வருத்தம் .
ஏவு (வி) கட்டளையிடு ; தூண்டு ; எய் , செலுத்து ; அனுப்பு .
ஏவுண்ணுதல் அம்பு பாயப்பெறுதல் .
ஏவுதல் கட்டளையிடுதல் ; தூண்டிவிடுதல் ; செலுத்துதல் ; சொல்லுதல் ; அனுப்புதல் .
ஏவுதற்கருத்தா வேறொருவரை ஏவி ஒன்றைச் செய்விக்கிறவன் , கட்டளையிடும் தலைவன் ; செய்விக்கும் வினைமுதல் .
ஏழ்சுரம் சட்ஜம் , ரிடபம் , காந்தாரம் , மத்திமம் , பஞ்சமம் , தைவதம் , நிஷாதம் என்பன ,
ஏழ்நரம்பு குரல் , துத்தம் , கைக்கிளை , உழை , இளி , விளரி , தாரம் என்னும் ஏழு நரம்புகள் .
ஏழ்பரி சூரியன் தேரில் பூட்டப்படும் ஏழு குதிரைகள் ; காயத்திரி , திருட்டுபு , செகதி , அனுட்டுபு , பந்தி , பிரகதி , முட்டிணுகு .
ஏழ்பரியோன் சூரியன் .
ஏழ்பருவம் காண்க : ஏழுவகைப் பெண்பருவம் .
ஏழ்புழை வேய்ங்குழல்வகை .
ஏழ்மை எழு ; வறுமை .
ஏழகத்தார் படைவகுப்பாருள் ஒருவகையார் .
ஏழகம் ஆடு ; செம்மறிக்கடா .
ஏழமை காண்க : ஏழைமை .
ஏழரையாண்டுச்சனி சந்திர லக்கினத்தில் 12 , 1 , 2 ஆம் தானங்களில் ஏழரையாண்டு இருந்து துன்பம் செய்யும் சனி .
ஏழாங்கால் கலியாணத்துக்கு ஏழு நாளைக்கு முன் நடும் பந்தற்கால் .
ஏழாநீர்ச்சடங்கு திருமணமான ஏழாம் நாள் மணமக்கள் எண்ணெய் தேய்த்து முழுகும் சடங்கு .
ஏழாம்பொருத்தம் தீராப்பகைமை , ஓயாச் சண்டை .
ஏழிசை காண்க : ஏழ்நரம்பு .
ஏழிசைவாணர் கந்தருவர் ; இசை பாடுவோர் .
ஏழில் ஏழிலைப்பாலை , இசை ; நன்னன் என்பானுக்குரிய ஒரு மலை .
ஏழிலைக்கிழங்கு மரவள்ளிக்கிழங்கு .
ஏழிலைப்பாலை மகளிரால் மலரும் மரம் பத்தனுள் ஒன்று , இதன் மணம் களிறுகளுக்கு ஆகாதாம் .
ஏழிலைம்பாலை மகளிரால் மலரும் மரம் பத்தனுள் ஒன்று , இதன் மணம் களிறுகளுக்கு ஆகாதாம் .
ஏழு ஓர் எண் .
ஏழுநரகம் காண்க : எழுநரகம் .
ஏழுபெண்பருவம் காண்க : எழுவகைப் பெண்பருவம் .
ஏழுமலை ஏழு மலைக் கூட்டங்களுடைய திருவேங்கடம் .