ஐவகைச்சுற்றம் முதல் - ஐவைந்து வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஐவகைமன்றம் சிவன் நடமிடும் ஐந்து சபைகள் : திருவாலங்காட்டு மணியம்பலம் , தில்லைப் பொன்னம்பலம் , மதுரை வெள்ளியம்பலம் , திருநெல்வேலித் தாமிர அம்பலம் , குற்றாலம் சித்திர அம்பலம் ; புகாரிலிருந்த வெள்ளிடை மன்றம் , இலஞ்சி மன்றம் , நெடுங்கல் மன்றம் , பூதசதுக்கம் , பாவை மன்றம் .
ஐவகைமெய்க்குற்றம் குறுகுறுத்தல் , கொட்டாவி விடுதல் , நெட்டை , கூன்கிடை , நட்டுவிழுதல் .
ஐவகையாகம் ஐந்துவகை வேள்விகள் : கருமயாகம் , தவயாகம் , செபயாகம் , தியானயாகம் , ஞானயாகம் .
ஐவகைவினா அறியான் வினாவல் , அறிவு ஒப்புப் பார்த்தல் , ஐயமறுத்தல் , அவனறிவுதான்கொளல் , அவனுக்கு உண்மை காட்டல் .
ஐவகைவேள்வி கடவுள் வேள்வி , பிரம வேள்வி , பூத வேள்வி , மானிட வேள்வி , தென்புலத்தார் வேள்வி .
ஐவண்ணம் மருதோன்றி ; சௌகந்திகப்பதுமராகம் ; செம்மை , கருமை , வெண்மை , பொன்மை , பசுமை என்னும் ஐந்து நிறங்கள் .
ஐவணி மருதோன்றி .
ஐவர் பஞ்சபாண்டவர் ; ஐம்பொறிகள் ; ஐம்புலன்கள் .
ஐவர்ணம் பரவ மகளிர் கால்விரல்களிற் பூணும் அணி ; நகமூடி , சலங்கை முன்தாங்கி , மயிலடி , இடைக்காற் பீலி , நகரை மீன் .
ஐவனம் மலைநெல் ; காட்டுநெல் .
ஐவாய்மான் அரிமா , சிங்கம் .
ஐவாய் மிருகம் கரடி ; சிங்கம் .
ஐவிரல் அத்தநாள் .
ஐவிரலி ஐவேலிக் கொடி ; கொவ்வை .
ஐவேசு கையிருப்பு ; சொத்து ; வழிவகை .
ஐவேலி காண்க : ஐவிரலி .
ஐவைந்து ஐயைந்து ; ஐந்து விதம் .
ஐவகைச்சுற்றம் அரசர்க்குரிய ஐவகைச் சுற்றத்தார் : நண்பர் , போர்வீரர் , சகுனம் சொல்லுவோர் , ஆயுர்வேதர் , பார்ப்பனர் ,
ஐவகைத்தற்கிழமை தன்னோடு ஒற்றுமையுடைய பொருளின் ஐவகை இயைபு : பண்புத்தற்கிழமை , ஒன்றன்கூட்டத் தற்கிழமை , பலவினீட்டத் தற்கிழமை , ஒன்று திரிந்துபட்டு ஒன்றாய தற்கிழமை .
ஐவகைத்தாயர் ஐந்துவகைத் தாய்மார் : ஈன்றதாய் , ஊட்டுந்தாய் , முலைத்தாய் , கைந்தாய் , செவிலித்தாய் .
ஐவகைத்திரவியம் ஐந்திடங்களில் கிட்டும் செல்வங்கள் ; அவை : மலைபடுபொருள் , நாடுபடுபொருள் , காடுபடுபொருள் , நகர்படுபொருள் , கடல்படுபொருள் .
ஐவகைத்தெய்வமணி சிந்தாமணி , சூளாமணி , சிமந்தகமணி , சூடாமணி , கௌத்துவமணி .
ஐவகைத்தொழில் எண்ணல் , எழுதல் , இலைகிள்ளல் , மலர்தொடுத்தல் , யாழ்மீட்டல் .
ஐவகைமயிர்முடி காண்க : ஐம்பால்முடி .