சொல்
|
அருஞ்சொற்பொருள் |
ஒவ்வோர்க்குழி | நிலத்திலே சிறுவர் விரலால் எழுதும் அரிக்குழி . |
ஒவ்வோன் | ஒப்பில்லாதவன் . |
ஒழிகடை | ஈறு பெரும்பான்மை முடிந்த நிலை . |
ஒழிச்சுதல் | போக்குதல் ; வெறுமையாக்குதல் , அழித்தல் . |
ஒழித்தல் | நீக்குதல் ; முடித்தல் ; அழித்தல் ; ஒதுக்குதல் ; குறைத்தல் ; தவிர்த்தல் ; தீர்த்தல் ; கொல்லுதல் ; காலிசெய்தல் . |
ஒழித்துக்காட்டாணி | ஒரு பொருள் ஓர் இடத்தில் இல்லையென மறுத்து , மற்றோர் இடத்தில் உண்டென்று ஏற்படுத்திக்காட்டும் அணி . |
ஒழிதல் | அழிதல் ; சாதல் ; நீங்கல் ; தவிர்தல் ; விடுதல் ; வெறுமையாதல் ; எஞ்சுதல் ; தங்குதல் ; ஓய்தல் . |
ஒழிந்தார் | ஏனையோர் , தவிர்ந்தோர் ; மற்றவர் . |
ஒரூஉத்தொடை | அளவடியுள் நடுவிரு சீர்கள் ஒழிய முதற் சீர்க்கண்ணும் நான்காஞ் சீர்க்கண்ணும் மோனை முதலியன வரத்தொடுப்பது . |
ஒரூஉவண்ணம் | யாற்றொழுக்காகப் பொருள் கொண்டு செல்லுஞ் சந்தம் . |
ஒரே | ஒன்றேயான . |
ஒரோவழி | ஒவ்வோரிடம் , சிறுபான்மை . |
ஒரோவொருவர் | தனித்தனி ஒவ்வொருவர் . |
ஒரோவொன்று | ஒவ்வொன்று |
ஒல் | முடிவிடம் ; ஒலிக்குறிப்பு . |
ஒல்குதல் | தளர்தல் ; மெலிதல் ; குழைதல் ; நுடங்குதல் ; சுருங்குதல் ; அசைதல் ; ஒதுங்குதல் ; அடங்குதல் ; வளைதல் ; குறைதல் ; வறுமைப்படுதல் ; மேலே படுதல் ; மனமடங்குதல் ; கெடுதல் ; நாணுதல் ; எதிர்கொள்ளுதல் . |
ஒல்லட்டை | ஒல்லியானவன்(ள்) . |
ஒல்லல் | ஒல்லுதல் ; இயலுதல் ; பொருந்துதல் ; இசைதல் ; ஊடல் ; தீர்க்கை |
ஒல்லாங்கு | பொருந்தும் வழி , பொருந்துமாறு . |
ஒல்லாடி | ஒல்லியானவன் ; இயலாதவன் . |
ஒல்லாதவர் | பகைவர் . |
ஒல்லாமை | இயலாமை ; பொருந்தாமை , இசையாமை ; இகழ்ச்சி , வெறுப்பு ; அவாவின்மை . |
ஒல்லார் | பகைவர் |
ஒல்லி | மெலிவு ; மெலிந்த தோற்றம் ; மெலிவுற்றவன் ; ஒல்லியானவன் ; மென்மை ; உள்ளீடு குறைந்த தேங்காய் ; துடைப்பம் . |
ஒல்லிக்காய்ச்சி | உள்ளீடில்லாத காயுள்ள தென்னை . |
ஒல்லித்தேங்காய் | உள்ளீடில்லாத தேங்காய் |
ஒல்லுதல் | பொருந்துதல் ; இயலுதல் ; உடன்படுதல் ; தகுதல் ; ஆற்றுதல் ; ஓலைப்பெட்டி பொத்துதல் ; ஒலித்தல் ; விரைதல் ; கூடுதல் ; பொறுத்தல் ; நிகழ்தல் . |
ஒல்லுநர் | நண்பர் ; ஆற்றலுடையவர் ; நூலுரையுணர்வோர் . |
ஒல்லென | விரைவாக ; வெளியாக . |
ஒல்லெனல் | ஒலிக்குறிப்பு . |
ஒல்லே | விரைவாக . |
ஒல்லை | விரைவு ; வேகம் ; காலவிரைவு ; சீக்கிரம் ; பழைமை ; தொந்தரவு . |
ஒல்வது | இயல்வது . |
ஒல்வழி | பொருந்திய இடத்து ; பொருந்திய காலத்து . |
ஒலரி | சிறுமீன்வகை . |
ஒலி | ஓசை ; ஆரவாரம் ; இடி ; காற்று ; எழுத்தொலி ; சொல் . |
ஒலிசை | மணமகனுக்குக் கொடுக்கும் கொடை , மணமகளின் சுற்றத்தார் திருமணத்தில் மணமகனுக்குக் கொடுக்கும் சீர்வரிசை . |
ஒலித்தல் | ஓசையுண்டாக்கல் , ஆரவாரித்தல் ; ஆடை வெளுத்தல் விளக்குதல் ; தழைத்தல் ; சந்தித்தல் . |
ஒலிதல் | தழைத்தல் . |
ஒலிப்பு | பேரொலி ; பெருஞ்சத்தம் |
ஒலிமுகம் | நகரம் அல்லது கோயிலின் முன்புற வாயில் ; கோட்டையின் முன்புற வாயில் . |
ஒலிமுகவாசல் | நகரம் அல்லது கோயிலின் முன்புற வாயில் ; கோட்டையின் முன்புற வாயில் . |
ஒலிமுகவாயில் | நகரம் அல்லது கோயிலின் முன்புற வாயில் ; கோட்டையின் முன்புற வாயில் . |
ஒலியல் | தழைக்கை ; தளிர் ; மாலை ; ஈயோட்டுங் கருவி ; மேலாடை ; தோல் ; தெரு ; ஆறு ; ஒலியடிப்படை . |
ஒலியற்கண்ணி | தளிர்மாலை ; பச்சிலை மாலை ; |
ஒலியன் | ஆடை ; எழுத்தொலி . |
ஒலியெழுத்து | மொழிமுதற்காரணமாகிய அணுத்திரள் ; ஒலி வடிவான எழுத்து . |
ஒலிவு | ஒரு மரவகை . |
ஒலுகு | சாய்வு , திண்டு . |
ஒலுங்கு | கொசு ; பெருங்கொசு . |
ஒலோவுதல் | குறைவாதல் . |
ஒவ்வாப்பக்கம் | தருக்கத்தில் பொருந்தாத பக்கம் . |
ஒவ்வாமை | இயலாமை ; பொருந்தாமை , இசையாமை ; தகுதிக் குறைவு ; ஒப்பாகாமை . |
ஒவ்வுதல் | இணங்குதல் , பொருந்துதல் ; இசைதல் ; ஒத்திருத்தல் . |
ஒவ்வுறுதல் | பொருத்தமுறல் ; ஒப்பாதல் . |
ஒவ்வொன்று | ஒன்றொன்று , வகைக்கொன்று , ஒன்றுவீதம் ; சில . |
ஒருவண்ணம் | ஒருவாறு . |
ஒருவந்தம் | உறுதி ; ஒருதலை ; நிலைபேறு ; சம்பந்தம் ; ஒற்றுமை ; தனியிடம் . |
ஒருவயிற்றோர் | உடன்பிறந்தார் . |
ஒருவர் | ஓராள் ; ஒருவன் ; அல்லது ஒருத்தியைச் சிறப்புப்பற்றிப் பன்மையில் வழங்கும் பெயர் , மரியாதைப் பன்மை . |
ஒருவர்க்கொருவர் | இருவரும் ஒத்த தன்மையராயிருக்கை , பரஸ்பரம் . |
ஒருவழித்தணத்தல் | அலர் அடங்குதற் பொருட்டுத் தலைமகன் சிலநாள் வேறிடத்திற்குச் சென்று உறையும் அகத்துறை . |
ஒருவழிப்படுதல் | ஒருமுகப்படுதல் ; நேர்படுதல் ; ஒற்றுமைப்படுதல் ; |
ஒருவழியுறுப்பு | ஏகதேசம் |
ஒருவன் | ஓர் ஆண்மகன் ; ஒப்பற்றவன் ; கடவுள் . |
ஒருவருக்காக | ஒரேபடியாக , ஒரேமாதிரி ; ஒரேமுறையில் ; ஒருசேர |
ஒருவாக்கு | ஒருமுகமாகச் சொல்லும் சொல் ; உறுதிமொழி . |
ஒருவாமை | பிறழாமை , நீங்காமை . |
ஒருவாய்க்கோதை | காண்க : ஒருகட்பறை . |
ஒருவாற்றான் | ஒருவாறு , ஒருவிதமாக , ஓரளவாக ; ஒருசேர . |
ஒருவியாழவட்டம் | குரு சூரியனைச் சுற்றிவருகிற காலம் , பன்னிரண்டு ஆண்டு . |
ஒருவு | ஆடு ; நீங்குகை . |
ஒருவுதல் | விடுதல் ; நீங்குதல் ; கடத்தல் ; ஒத்தல் . |
ஒருவேளை | ஒருபொழுது , ஒருமுறை |
ஒரூஉ | ஒருவு ; நீங்குகை ; செய்யுளடியில் முதற்சீரிலும் மோனை முதலியன அமையும் தொடை . |
![]() |
![]() |
![]() |