சொல்
|
அருஞ்சொற்பொருள் |
காபாலம் | பிரமன் தலையோட்டைக் கையிலேந்திச் சிவபிரான் ஆடுங் கூத்து ; சைவத்தின் அகப்புறச் சமயம் ஆறனுள் ஆன்மா நித்திய மாய்ப் பலவாய் வியாபகமாய் இருப்பதென்றும் பச்சைக்கொடி பிடித்து மக்களின் தலையோட்டில் ஐயமேற்றுண்பவர் முத்தராய்ச் சிவசமம் ஆவரென்றும் கூறும் சமயம் . |
காபாலமதம் | சைவசமயத்தின் ஒரு பிரிவு . |
காபாலன் | சிவன் ; காபால மதத்தான் . |
காபாலி | சிவன் ; காபால மதத்தான் . |
காபி | ஒரு பண்வகை ; காப்பி . |
காபில் | திறமையாளன் . |
காபிலம் | கபிலர் மதமான சாங்கியம் ; தலைதொடங்கிக் காலளவும் ஈரத்துணியால் உடம்பைத் துடைத்துக் கொள்ளுதலாகிய நீராட்டு வகை . |
காபினி | நவச்சாரம் . |
காபோதி | கண்ணிலி ; அறிவிலி . |
காம்பி | நீர் இறைக்குங் கருவி . |
காம்பிரம் | முருக்கு . |
காம்பிலி | வடநாடுகளுள் ஒன்று . |
காம்பிலியம் | வடநாடுகளுள் ஒன்று . |
காம்பீரம் | பெருமிதம் , கம்பீரம் ; ஆழம் . |
காம்பீரியம் | பெருமிதம் , கம்பீரம் ; ஆழம் . |
காபரா | குழப்பம் . |
காந்திப்போதல் | சோறு முதலியன கரிந்து போதல் . |
காந்திமதி | ஒளியுள்ளவள் ; குபேரன் பட்டணம் . |
காந்திமான் | ஒளியுள்ளவன் . |
காந்திருவம் | காந்தருவம் ; கந்தருவலோகம் . |
காந்துகம் | வெண்காந்தள் . |
காந்துகன் | பந்தடிப்போன் ; பலகாரம் விற்பவன் . |
காந்துதல் | எரிதல் ; வெப்பங்கொள்ளுதல் ; கருகிப்போதல் ; மனம் வேகுதல் ; ஒளிவீசுதல் ; பொறாமைப்படுதல் ; வீணாய் எரிதல் ; சினத்தல் ; சுடுதல் ; பல்லால் சுரண்டுதல் . |
காந்தை | பெண் ; மனைவி ; தலைவி . |
காந்தைக்கண் | இரண்டு இமைகளையும் விரித்து விழிக்கும் அபிநயக் கண் . |
காப்பரிசி | பிறந்த குழந்தைகளுக்குக் காப்பிடும் நாளில் வழங்கும் பாகு கலந்த அரிசி ; திருமணம் முதலிய காலங்களில் காப்புநாண் கட்டும்போது கையிலிடும் அரிசி ; கிறித்து பிறந்த பதின் மூன்றாம் நாள் திருவிழாவில் கோயிலில் வழங்கும் பாகுகலந்த அரிசி . |
காப்பவிழ்த்தல் | திருமணம் முதலிய சடங்குகளில் காப்புக் களைதல் . |
காப்பாடுதல் | மறைத்துக் காத்தல் . |
காப்பாள் | காவல் வீரன் . |
காப்பாற்றுதல் | பாதுகாத்தல் , ஆதரவளித்தல் . |
காப்பி | ஒருவகைச் செடி ; குடிநீர் ; படி , நகல் . |
காப்பிடுதல் | நெற்றியில் திருநீறு அல்லது மண்ணைக் குழைத்திட்டுக் காப்புச் செய்தல் ; காப்புநாண் கட்டுதல் ; பிறந்த குழந்தைக்குக் காப்புப்பூட்டுதல் ; ஆவணங்களில் அரசு முத்திரை இடுதல் . |
காப்பியக் கலித்துறை | நெடிலடி நான்காய் வரும் கலித்துறை . |
காப்பியக்குடி | பழைய அந்தணர்குடி ; சீகாழிக்கு அயலிலுள்ள ஓர் ஊர் . |
காப்பியன் | சுக்கிரன் . |
காப்பிரிமிளகாய் | குடைமிளகாய் . |
காப்பில் | மீன்பிடிக்க உதவும் கூரிய ஓர் ஆயுதம் ; தோணியின் உறுப்புகளுள் ஒன்று . |
காப்பீடு | பாதுகாத்தல் ; காக்கப்படுவது . |
காப்பு | பாதுகாவல் ; காவலாயுள்ளது ; காப்பு நாண் ; தெய்வ வணக்கம் ; காப்புப் பருவம் ; திருநீறு ; கைகால்களில் அணியும் வளை ; வேலி ; மதில் ; கதவு ; அரசமுத்திரை ; ஏட்டுக்கயிறு ; காவலான இடம் ; ஊர் ; திக்குப்பாலகர் ; சிறை ; மிதியடி ; அரசன் நுகர்பொருள் . |
காப்புக்கட்டுதல் | கோயில் திருவிழாத் தொடங்குதல் ; ஊக்கத்துடன் செயலில் இறங்குதல் ; மூலிகைக்குக் காப்புநாண் கட்டுதல் ; நேர்த்திக்கடனுக்கு மஞ்சள் நூல் அணிதல் . |
காப்புக்கடவுள் | திருமால் . |
காப்புக்கரப்பறிதல் | பொருள் அறிந்து ஏட்டெழுத்தைப் படித்தல் . |
காப்புக்காடு | காவற்கட்டுள்ள காடு . |
காப்புச்செய்தல் | ஓலைச் சுவடியைக் கட்டிவைத்தல் . |
காப்புத்தடை | விழாக்காலத்தில் காப்புக் கட்டுதலால் நிகழும் பயணத்தடை . |
காப்புதாரி | தற்காப்புரிமை . |
காப்புநாண் | இரட்சையாகக் கட்டும் மஞ்சட்படுத்தின நூற்கயிறு . |
காப்புநீக்குதல் | ஓலைச்சுவடியைக் கட்டவிழ்த்துத் திறத்தல் . |
காப்புப்பருவம் | பிள்ளைத்தமிழ் கூறும் பருவங்களுள் முதற்பருவம் . |
காப்புமறம் | காவல்வீரர் . |
காப்புமாலை | தெய்வங்காப்பதாக மூன்று , ஐந்து அல்லது ஏழு பாடல்களாற் பாடப்படும் ஒரு சிற்றிலக்கியம் . |
காப்பொன் | நூறு பலம் நிறையுள்ள பொன் . |
காபட்டியம் | கபடத்தன்மை . |
காபணங்கட்டுதல் | தெய்வத்துக்கு வேண்டிக்கொண்ட பணத்தை மஞ்சள் துணியிற் கட்டிவைத்தல் . |
காபணம் | ஒற்றடம் . |
காபந்து | பாதுகாவல் . |
காந்தருவவாதம் | அறுபத்து நான்கு கலையுள் ஒன்றான இசைக்கலை . |
காந்தருவவிவாகம் | காண்க : காந்தருவமணம் . |
காந்தருவவேதம் | இசைக்கலை . |
காந்தருவி | பாடுபவள் . |
காந்தல் | காந்துகை ; உமி , ஓலை முதலியவற்றின் எரிந்த கருகல் ; காய்ந்த பயிர் ; தீய்ந்து போதல் ; சினம் . |
காந்தவண்டி | இருப்புப்பாதையில் செல்லும் மின்வண்டி . |
காந்தவர் | காண்க : காந்தருவர் . |
காந்தள் | கார்த்திகைப் பூ ; காந்தள் மலரணிந்து வேலன் வெறியாடுவதைக் கூறும் புறத்துறை ; முருகக் கடவுளுக்குரிய காந்தளைச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை ; சவர்க்காரம் . |
காந்தளிகம் | சின்னிமரம் . |
காந்தற்சோறு | கரிந்த சோறு . |
காந்தன் | அரசன் ; எப்பொருட்கும் இறைவன் ; கணவன் ; தலைவன் ; சந்திரன் ; மன்மதன் . |
காந்தாரக்கிராமம் | தேவலோகத்து வழங்குவதாகக் கொள்ளப்படும் இசைச் சுரவகை . |
காந்தாரபஞ்சமம் | பாலையாழ்த் திறங்களுள் ஒன்று , |
காந்தாரம் | வடமேற்கு இந்திய நாடுகளுள் ஒன்று , ஐம்பத்தாறு நாடுகளுள் ஒன்று ; ஏழிசையுள் ஒன்று ; பாலையாழ்த்திறம் ; காடு . |
காந்தாரி | துரியோதனனின் தாய் ; கொடியவள் ; தசநாடியுள் ஒன்று ; சிவனார்வேம்பு ; சத்தி சாரம் ; ஒரு பண்வகை . |
காந்தாரி மைந்தன் | துரியோதனன் . |
காந்தாளம் | எரிச்சல் ; சினம் . |
காந்தி | அழகு ; ஒளி ; கதிர் ; சிலாசத்து ; வைடூரியம் ; அணிவகை . |
காந்திகொள்ளுதல் | உடம்பு சூடுகொள்ளுதல் . |
![]() |
![]() |
![]() |