சொல்
|
அருஞ்சொற்பொருள் |
கிராமச் செலவு | ஊர்ப் பொதுச்செலவு . |
கிராமசமுதாயம் | வருமானமுள்ள ஊர்ப் பொதுச் சொத்து . |
கிராமசிம்மம் | நாய் . |
கிராமணி | ஊர்த் தலைவன் ; தலைமையானவன் ; கிராமியன் ; சான்றாரிலும் கைக்கோளரிலும் ஒரு சாரார்க்கு வழங்கும் படடப்பெயர் . |
கிராமத்தார் | ஊர் மகாசனம் . |
கிராமத்தான் | நாட்டுப்புறத்தான் . |
கிராமதேவதை | ஊரைக் காக்கும் பெண் தெய்வம் . |
கிராமநத்தம் | ஊரையடுத்து வீடுகள் கட்டக் கூடிய இடம் . |
கிராமம் | நூறு குடியுள்ள ஊர் ; மருதநிலத்தூர் ; ஊர் ; நீர்வாழ் பறவை ; சுரங்களின் சேர்க்கை வகை . |
கிராமமானியம் | இடைக்கால அரசர்களால் ஊர்தோறும் பணியாள்களுக்கு அளிக்கப்பட்ட இறையிலி நிலம் . |
கிராமமேரை | ஊர் வேலைக்காரரின் சுதந்திரம் . |
கிராமாதிகாரி | ஊர்த்தலைவன் . |
கிராமாந்தரம் | நாட்டுப்புறம் . |
கிராமியம் | நாட்டுப்புறமக்கள் பேசும் கொச்சைப் பேச்சு ; இழிவானது . |
கிராமியன் | நாட்டுப்புறத்தவன் . |
கிராய் | புற்காடு ; கருஞ்சேற்று நிலம் . |
கிராய்தல் | சுவர் முதலியவற்றைத் தேய்த்துத் துலக்கல் . |
கிராவணம் | கல்மலை . |
கிராவம் | கல்மலை . |
கிரி | பன்றி ; மலை ; பிணையாளி ; இலக்கினம் . |
கிரிகரன் | ஒரு வாயு . |
கிரிகன்னி | துர்க்கை ; வெள்ளைக் காக்கணங்கொடி . |
கிரிகிரி | காட்டுப்பன்றி . |
கிரகவக்கிரம் | கோள் பின்னோக்கிச் செல்லும் நடை . |
கிரகவட்டம் | கோள் செல்லும் வழி . |
கிரகவீதி | கோள் செல்லும் வழி . |
கிரகாராதனை | நவக்கிரக பூசை . |
கிரகித்தல் | பற்றுதல் ; நுண்ணிதின் உணர்தல் ; ஏற்றுக்கொள்ளுதல் ; துப்பறிதல் ; சாரம் வாங்குதல் ; குறிப்பால் அறிதல் . |
கிரங்குதல் | சோர்வடைதல் . |
கிரசேமிரம் | பச்சைக் கருப்பூரம் . |
கிரஞ்சனம் | முருங்கைமரம் . |
கிரணம் | ஒளி ; கதிர் ; சிவாகமங்கள் இருபத்தெட்டனுள் ஒன்று . |
கிரணம்வீசுதல் | ஒளிவீசுதல் . |
கிரணமாலி | சூரியன் . |
கிரணன் | சூரியன் . |
கிரது | வேள்வி ; நரகவகை ; ஒரு முனிவர் . |
கிரந்தகர்த்தா | நூலாசிரியன் . |
கிரந்தம் | நூல் ; ஒற்று ஒழித்து உயிரும் உயிர் மெய்யுமாகக் கொள்ளப்படும் 32 எழுத்தின் கூட்டம் ; வடமொழியை எழுதற்குத் தமிழ் மக்கள் வழங்கிய எழுத்து ; வடமொழி . |
கிரந்தி | முடிச்சு ; இடை ; பிங்கலை ; சுழிமுனை நாடி மூன்றின் சந்தி ; கிரந்திநோய் ; ஏலத்தோல் ; நெல்லிப்பருப்பு . |
கிரந்திகம் | காண்க : கிரந்திமூலம் . |
கிரந்திதகரம் | நந்தியாவட்டை . |
கிரந்திப்பண்டம் | புண்களை உண்டாக்குந் தின்பண்டம் . |
கிரந்திப்புண் | மேகக்கட்டி ; சிலந்திப்புண் . |
கிரந்திமூலம் | திப்பிலிமூலம் . |
கிரந்திவாயு | குழந்தை நோய்வகை . |
கிரமக்காரன் | ஒழுங்காக நடப்பவன் . |
கிரமதாவா | ஒழுங்கு வழக்கு . |
கிரமப்பிரசவம் | சுகமான பிரசவம் . |
கிரமம் | ஒழுங்கு ; நீதிமுறை ; வேதமோதுதலில் ஒருவகை . |
கிரமி | ஒழுங்காய் நடப்போன் ; சாத்திர விதிப்படி நடப்பவன் . |
கிரமுகம் | கமுகமரம் . |
கிரயக்காரன் | விற்பவன் . |
கிரயச்சீட்டு | விற்பனை ஆவணம் . |
கிரயசாசனம் | விற்பனை ஆவணம் . |
கிரயபத்திரம் | விற்பனை ஆவணம் . |
கிரயம் | விற்பனை ; விலைத்தொகை . |
கிரவுஞ்சம் | அன்றிற்புள் ; கோழி பறக்கும் அளவுள்ள தொலைவு ; கிரவுஞ்சத்தீவு ; கிரவுஞ்சமலை . |
கிராக்கி | காண்க : கிறாக்கி . |
கிராகதி | நிலவேம்பு . |
கிராகியம் | அறியத்தக்கது ; கொள்ளத்தக்கது . |
கிராணம் | மறைவு , கிரகணம் ; சிறுவட்டில் ; மூக்கு . |
கிராணி | ஒருவகைக் கழிச்சல்நோய் ; எழுத்தர் . |
கிராதகன் | கொடியவன் . |
கிராதமூர்த்தி | வேட்டுவக்கோலம் கொண்ட சிவபிரான் . |
கிராதன் | வேடன் ; மலைக்குறவன் ; கொடியவன் . |
கிராதி | மரத்தினாற் செய்த வேலி , அளியடைப்பு . |
கிராந்தி | சூரியவீதி ; கிரகச்சாய்வு . |
கிராந்திமண்டலம் | சூரியவீதி . |
கிராந்திவீதி | சூரியவீதி . |
கிராந்துதல் | மறைந்துகொள்ளுதல் ; இணைத்தல் . |
கிராம் | கடிவாளம் . |
கிராம்பு | இலவங்கம் . |
கிராமக்கணக்கன் | ஊர்க் கணக்குவேலை பார்ப்போன் . |
கிராமக்காவல் | ஊர்காவல் ; ஊர்காவற்காரன் . |
கிராமச்சாவடி | ஊர்ப் பொதுவிடம் . |
![]() |
![]() |
![]() |