சொல்
|
அருஞ்சொற்பொருள் |
கீழிதழ் | கீழுதடு . |
கீழிருத்தல் | உட்பட்டிருத்தல் . |
கீழுக்குப் போதல் | தாழ்நிலைக்கு வருதல் . |
கீழுலகு | பூமியின் கீழுள்ள ஏழுலகங்கள் ; அவை , அதலம் , விதலம் , சுதலம் , தராதலம் ; இரசாதலம் , மகாதலம் , பாதலம் . |
கீழேழுலகம் | பூமியின் கீழுள்ள ஏழுலகங்கள் ; அவை , அதலம் , விதலம் , சுதலம் , தராதலம் ; இரசாதலம் , மகாதலம் , பாதலம் . |
கீழைத்திசை | கீழ்த்திசை . |
கீழைநாள் | விடியற்காலம் . |
கீழோங்கி | செம்படவரில் கீழ்வகுப்பார் . |
கீழோசை | கீழிசை . |
கீழோர் | தாழ்ந்தோர் , உழவர் ; சண்டாளர் . |
கீள் | கூறு ; இடுப்பிற் கட்டும் துணியாலாகிய அரைஞாண் . |
கீள்தல் | கிழித்தல் ; உடைதல் . |
கீள்ளுதல் | கிழித்தல் ; உடைதல் . |
கீளி | கடல்மீன்வகை . |
கீளுடை | கோவணம் , இலங்கோடு . |
கீற்கதவு | கீல் தைக்கப்பட்ட கதவு . |
கீற்கொண்டை | மயிர் முடித்தலின்வகை . |
கீற்பாய் | தார் பூசின துணி . |
கீற்பிடிப்பு | வாதப்பிடிப்பு நோய் . |
கீற்றன் | குறுக்குக் கோடுள்ள புடைவை . |
கீற்று | வரி ; துண்டு ; கூரைவேயும் தென்னங்கீற்று ; கிடுகு ; வயிரக்குற்றம் பன்னிரண்டனுள் ஒன்று ; மரகதக் குற்றம் எட்டனுள் ஒன்று . |
கீற்றுக்கால் | வெடிப்புள்ள பாதம் . |
கீற்றுமதி | மூன்றாம் பிறைச்சந்திரன் . |
கீறல் | பிளவு ; வரிவரைகை ; எழுதுகை ; கீற்றுக்கையெழுத்து ; கையெழுத்திடத் தெரியாதவன் . |
கீறிக் காயவைத்தல் | உப்புக்கண்டம் உலர்த்துதல் . |
கீறிப்பார்த்தல் | ஆய்ந்தறிதல் . |
கீறியாற்றுதல் | உட்கருத்தை வெளிப்படுத்தி மனத்தாங்கலை நீக்கிக்கொள்ளுதல் . |
கீறு | வரி ; பிளப்பு ; துண்டம் ; எழுத்து ; தென்னமட்டை அல்லது பனங்கிழங்கின் பாதி . |
கீறுதல் | வரி கீறுதல் ; எழுதுதல் ; கிறுக்குதல் ; கிழித்தல் ; பறண்டுதல் ; அறுத்தல் ; வகிர்தல் ; குறிப்பித்தல் ; கடத்தல் . |
கீன்றல் | கீறுதல் . |
கீனம் | இழிவு ; குறைவு . |
![]() |
![]() |