சொல்
|
அருஞ்சொற்பொருள் |
குடிதிருத்துதல் | ஆட்சிக்குட்பட்ட குடிகளை நன்னிலையில் நிறுத்துதல் ; பிறந்த குலத்தை மேம்படுத்துதல் . |
குடிநற்கல் | ஒருவகை எடைக்கல் . |
குடிநாட்டுதல் | குடியேற்றுதல் . |
குடிநிலம் | குடியிருக்கும் மனைநிலம் ; பெண்ணுக்குச் சீர்வரிசையாகக் கொடுத்த மனை . |
குடிநிலை | வீரக்குடியின் பழைமையையும் அஞ்சாமையையும் கூறும் புறத்துறை . |
குடிநிலையுரைத்தல் | வீரக்குடியின் பழைமையையும் அஞ்சாமையையும் கூறும் புறத்துறை . |
குடிநீர் | குடித்தற்குரிய நீர் ; கழாய மருந்து . |
குடிப்படை | குடிகளாலான சேனை . |
குடிப்பழி | குலத்துக்கு ஏற்பட்ட நிந்தை . |
குடிப்பழுது | குலத்துக்கு ஏற்பட்ட நிந்தை . |
குடிப்பாங்கு | குடித்தனப்பாங்கு ; குடியானவன் பின்பற்றுதற்குரிய ஒழுங்கு ; குடிகளின் ஏற்பாடு . |
குடிப்பாழ் | குடிகள் விட்டு நீங்குதலால் ஊருக்கு உண்டான அழிவு ; குடிகளற்றுப் போன ஊர் . |
குடிப்பிறப்பாளர் | உயர்குடியிற் பிறந்தோர் . |
குடிபிறப்பு | உயர்ந்த குடியில் பிறத்தல் . |
குடிப்பெண் | மனைவி ; கற்புடையவள் . |
குடிப்பெயர் | குலத்தால் வந்த பெயர் ; பிறந்த குலம்பற்றி வழங்கும் பெயர் . |
குடிபடை | குடிமக்கள் . |
குடிபுகுதல் | வேறு வீட்டில் வாழச்செய்தல் ; புது வீட்டிற் குடிபோதல் . |
குடிபோதல் | இருக்கும் வீட்டைவிட்டு வெளியேறுதல் ; வேறுவீட்டில் குடிபுகுதல் ; புதுவீடு குடிபோதல் ; பண்டங் கரைதல் . |
குடிமக்கள் | பணி செய்தற்குரிய பதினெட்டுவகை ஊர்க் குடிகள் ; அடிமைகள் . |
குடிமக்கள் மானியம் | பணிசெய்யும் வண்ணான் , அம்பட்டன் முதலிய தொழிலாளிகளுக்கு விடப்பட்ட இறையிலி நிலம் . |
குடிமகன் | நற்குடிப் பிறந்தவன் ; வழிவழிஅடிமை ; படிவாங்கிப் பயிரிடும் குடித்தனக்காரன் ; அம்பட்டன் . |
குடிமதிப்பு | ஊர்வரித் திட்டம் . |
குடிமார்க்கம் | இல்வாழ்க்கை , குடித்தனக்கடமை . |
குடிமிராசு | வழிவழி நில உரிமை . |
குடிமுழுகிப்போதல் | குடும்பநிலை முதலியன முற்றும் அழிதல் . |
குடாக்கடல் | மூன்று பக்கம் தரைசூழ்ந்த கடல் . |
குடாக்கு | உக்கா ; புகையிலை ; பாகு ; பழம் ; சந்தனம் ; இவற்றாலான உக்கா மருந்து . |
குடாக்கை | வயலின் மூலை . |
குடாகாயம் | குடத்தினால் அளவுபடுத்தப்பட்ட வானம் . |
குடாசகம் | கபடம் ; ஏமாற்று ; தீயுரை . |
குடாசுதல் | தந்திரம் பண்ணுதல் . |
குடாது | மேற்கிலுள்ளது ; மேற்கு . |
குடாப்பு | கூடு . |
குடாரம் | கோடரி ; தயிர்கடைவதற்கு நட்ட தறி ; தயிர்கடை தாழி . |
குடாரி | கோடாலி ; யானைத் தோட்டி ; திப்பிலி . |
குடாரு | தயிர்கடை தாழி . |
குடாவடி | வளைந்த அடியையுடைய கரடி . |
குடாவு | குடைவு . |
குடான் | செம்முள்ளிச் செடி . |
குடி | பருகுகை ; மதுபானம் ; மதுவுண்ட மயக்கம் ; புருவம் ; குடியானவன் ; குடியிருப்போன் ; ஆட்சிக்குட்பட்ட குடிகள் ; குடும்பம் ; குலம் ; வீடு ; ஊர் ; வாழிடம் . |
குடிக்காசு | காண்க : குடிக்காணம் |
குடிக்காடு | ஊர் . |
குடிக்காணம் | குடிவரி . |
குடிக்காவல் | ஊர்காவல் |
குடிக்கூலி | வீட்டுவாடகை ; வாடகை . |
குடிகாரன் | கள் முதலியன குடிப்பவன் , குடியன் . |
குடிகெடுதல் | குடும்பம் அடியோடு அழிதல் . |
குடிகேடன் | தீயொழுக்கத்தால் குலத்தையழிப்போன் . |
குடிகேடி | குலத்தையழிப்பவன்(ள்) ; விபசாரி . |
குடிகேடு | குடும்ப அழிவு . |
குடிகை | இலைக்குடில் ; கோயில் ; ஏலவரிசி ; கமண்டலம் . |
குடிகொள்ளுதல் | நிலையாகத் தங்கியிருத்தல் . |
குடிகோள் | சூழ்ச்சியால் குடியைக் கெடுக்கை . |
குடிங்கு | பறவை . |
குடிச்செருக்கு | குடிப்பிறப்பாலுண்டான இறுமாப்பு ; குடிவளம் . |
குடிசரம் | நீர்ப்பன்றி . |
குடிசல் | குடிசை . |
குடிசனம் | நாட்டுமக்கள் . |
குடிசெய்தல் | பிறந்த குடியை உயர்த்துதல் ; வாழ்தல் . |
குடிசை | சிறுகுடில் ; சிறுவீடு . |
குடிசை தூக்குதல் | குடிசையை வேற்றிடத்திற்கு மாற்றுதல் . |
குடிசையெடுத்தல் | குடிசையை வேற்றிடத்திற்கு மாற்றுதல் . |
குடிஞை | ஆறு ; குடிசை ; கோட்டான் ; பறவை . |
குடிஞைக்கல் | சோழர் காலத்து வழங்கிய ஒருவகை எடைக்கல் . |
குடிஞைப்பள்ளி | கண்ணுளாளர் தங்குதற்குரிய நாடக அரங்கின் பகுதி . |
குடித்தரம் | தனித்தனியான குடித்தீர்வை . |
குடித்தல் | பருகுதல் ; உட்கொள்ளுதல் . |
குடித்தனக்காரன் | பயிரிடுவோன் ; ஊரில் செல்வாக்கு உள்ளவன் ; வீட்டுத்தலைவன் ; வாடகைக்குக் குடியிருப்போன் . |
குடித்தனப்படுதல் | இல்வாழ்க்கை நிலையை அடைதல் . |
குடித்தனப்பாங்கு | இல்வாழ்க்கையொழுங்கு . |
குடித்தனம் | இல்வாழ்க்கை ; வாடகைக்குடி ; குடிவாழ்க்கையின் ஒழுங்கு . |
குடித்தனவுறுப்பு | குடும்பத்திற்கு உறுப்புகளான இடம் ; பொருள் , ஏவல் முதலியன . |
குடித்தெய்வம் | குலதெய்வம் . |
குடிதாங்கி | குலத்தைத் தாங்குபவன் . |
![]() |
![]() |
![]() |