சொல்
|
அருஞ்சொற்பொருள் |
குண்டுக்காளை | பொலியெருது . |
குண்டுக்குதிரை | ஆண்குதிரை . |
குடோரி | கீறுகை ; பாம்புக்கடிக்கு மருந்து இடுகை ; வங்கமணல் ; வெங்காரம் ; வெள்ளைப்பாடாணம் . |
குடோரிவைத்தல் | மண்டையைக் கீறி மருந்து பதித்தல் . |
குண்டக்கணிகை | கற்பழிந்து வேசையானவள் . |
குண்டக்கம் | கோள் ; வஞ்சனை . |
குண்டக்கிரியை | ஒரு பண்வகை . |
குண்டகம் | மண்பறிக்கும் கருவிவகை . |
குண்டகன் | சோரநாயகனுக்குப் பிறந்தவன் . |
குண்டடித்தல் | கோலி இரும்புக்குண்டு முதலியவற்றால் விளையாடுதல் ; கஞ்சாக் குடித்தல் ; தேர்வு முதலியவற்றில் தவறுதல் . |
குண்டடியன் | ஆண்சிவிங்கி . |
குண்டடுப்பு | ஒருவகைக் குழியடுப்பு . |
குண்டணி | குறளைச்சொல் . |
குண்டப்பணிவிடை | கீழ்த்தரமான ஊழியம் . |
குண்டம் | வேள்விக்குண்டம் ; குழி ; வாவி ; குடுவை ; பானை ; கற்பழிந்துபோனவள் ; பன்றி . |
குண்டம்பாய்தல் | வேண்டுதலுக்குத் தீக்குழியில் நடத்தல் . |
குண்டலப்புழு | வளைந்து சுருண்டுகொள்ளும் புழுவகை . |
குண்டலப்பூச்சி | வளைந்து சுருண்டுகொள்ளும் புழுவகை . |
குண்டலம் | ஆடவர் காதணிவகை ; வானம் ; வட்டம் ; சுன்னம் . |
குண்டலமண்டலம் | சுருண்டு வளைகை . |
குண்டலன் | குண்டலந்தரித்தவன் . |
குண்டலி | நாபித்தானம் ; கருவாய்க்கும் எருவாய்க்கும் நடுவிலிருப்பதாகக் கருதப்படும் மூலாதாரம் ; சீந்திற்கொடி ; சங்கஞ்செடி ; சுத்தமாயை ; பாம்பு ; மயில் ; மான் ; தாளகம் . |
குண்டலிசத்தி | சுத்தமாயை . |
குண்டலினி | மகாமாயை ; மூலாதாரத்திலுள்ள பாம்பின் வடிவமைந்த ஒரு சக்தி . |
குண்டன் | விபசாரத்திற் பிறந்த மகன் ; பருத்து வலுத்தவன் ; இழிந்தவன் ; அடிமை ; வளைந்தது ; குண்டுணி சொல்வோன் . |
குண்டனி | காண்க : குண்டணி . |
குண்டாக்கன் | தலைவன் . |
குண்டாஞ்சட்டி | வாயகன்ற பாண்டம் . |
குண்டாணிக்கொடி | ஒரு கொடிவகை . |
குண்டாந்தடி | பருத்துக் குறுகிய கைத்தடி . |
குண்டா | வாயகன்ற பாண்டம் . |
குண்டான்சட்டி | வாயகன்ற பாண்டம் . |
குண்டி | ஆசனப்பக்கம் ; அடிப்பக்கம் ; இதயம் ; மீன்சினை ; மூத்திரப்பை . |
குண்டிக்காய் | மூத்திரப் பிருக்கம் ; இதயம் . |
குண்டிக்காயெரிச்சல் | மூத்திரப்பையிற் காணும் ஒரு நோய் . |
குண்டிக்கொழுப்பு | ஆணவம் , இறுமாப்பு . |
குண்டிகாய்தல் | உணவின்மையால் வயறு காய்தல் . |
குண்டிகை | கமண்டலம் ; குடம் ; குடுக்கை ; நூற்றெட்டு உபநிதடங்களுள் ஒன்று . |
குண்டித்துணி | அரைத்துணி . |
குண்டியம் | குறளை ; மறைவை வெளிப்படுத்துகை ; பொய் . |
குண்டில் | சிறுசெய் ; முதுகு . |
குண்டீரம் | தத்துவம் ; வல்லமை . |
குண்டு | பந்துபோல் உருண்டு கனப்பது ; நிறைகல் வகை ; துலாக்கோல் ; உருண்டை வடிவான ஒருவகைப் பாண்டம் ; பீரங்கிக் குண்டு ; உருண்டையான பொன்மணி ; கஞ்சா முதலியவற்றில் செய்த திரளை ; விலங்குகளின் விதை ; ஆண்குதிரை ; ஆழம் ; குழி ; குளம் ; தாழ்வு ; சிறுசெய் ; உரக்குழி . |
குண்டுக்கட்டு | திரளச் சேர்த்துக்கட்டுங் கட்டு ; ஒருவனுடைய கழுத்தையும் காலையும் ஒன்று சேர்த்துத் திரளாகக் கட்டுங் கட்டு . |
குண்டுக்கட்டை | பிளக்காத உருண்டை விறகு . |
குண்டுக்கல் | தராசின் நிறைகல் ; வேலை செய்து செப்பனிடப்படாத கல் . |
குண்டுக்கலம் | இருபத்துநான்கு மரக்கால் கொண்ட ஒரளவு . |
குண்டுக்கழுதை | ஆண்கழுதை . |
குண்டுக்காயம் | துப்பாக்கிக்குண்டு படடதால் உண்டான புண் . |
குடுவை | வாய்குறுகிய குண்டுப் பாத்திரம் ; கமண்டலம் ; கள்ளிறக்கும் சிறுகலம் ; ஒரு வகைச் சீட்டாட்டம் . |
குடை | கவிகை ; அரசாட்சி ; குடைக்கூத்து ; பாதக்குறட்டின் குமிழ் ; நீருண்ணும் ஒலைப் பட்டை ; குடைவேல் ; உட்டுளைப்பொருள் . |
குடைக்கல் | கல்லறையின் மூடுகல் . |
குடைக்காம்பு | குடையின் கைப்பிடி . |
குடைக்காளான் | நாய்க்குடை . |
குடைக்கிழங்கு | சிற்றரத்தைச் செடி . |
குடைக்கூத்து | குடையையே திரையாகக் கொண்டு ஆடிய முருகனின் ஆடல் . |
குடைக்கொள்ளுதல் | மேலெழுதல் ; குடஞ்சாய்தல் . |
குடைகரி | பொன்னுருக்கும் கரிக்குகை . |
குடைகவிழ்தல் | காண்க : குடஞ்சாய்தல் . |
குடைச்சல் | வாயுவால் உண்டாகும் குடைச்சல் , நோவு . |
குடைச்சூல் | சிலம்பு ; உள்ளிடங் குடைவு படுகை . |
குடைச் செலவு | ஒரு காஞ்சித்திணைத் துறை , பகையைத் தடுத்துக் காக்கப் புறப்படுமுன் கொற்றக்குடையை நல்லவேளையில் புறவீடு செய்தல் . |
குடைச்செவி | சினம் முதலிய காரணங்களால் வளைவுபட்ட விலங்குகளின் செவி . |
குடைதல் | கிண்டுதல் ; துளைத்தல் ; மிக வருத்துதல் ; கடைதல் ; வேண்டாதவற்றில் தலையிடுதல் ; துருவுதல் ; உட்புகுதல் ; நீரில் மூழ்குதல் ; உளைவு ; அராவுதல் . |
குடைந்தாடுதல் | அமிழ்ந்து நீராடுதல் . |
குடைநாட்கோள் | பகையரணைக் கொள்ள நினைத்து மேற்சென்ற வேந்தன் தன் குடையை நல்ல வேளையில் புறவீடு விடும் உழிஞைத்திணைத் துறை . |
குடைநிலை | பகைமேல் செல்லும் அரசன் தன் குடையை நல்ல வேளையில் புறவீடு விடும் வஞ்சித்திணைத் துறை . |
குடைமங்கலம் | நான்கு திக்கும் புகழ்மிக வீற்றிருந்த அரசனது குடையைப் புகழந்து கூறும் பாடாண் துறை . |
குடைமிளகாய் | காப்பிரி மிளகாய் . |
குடைமுல்லை | போரில் வெற்றிகண்ட அரசனது குடையைப் புகழ்ந்து கூறும் வாகைத் துறை . |
குடையாணி | தலையிடம் உருண்டையான ஆணி ; கோயிற் குடையில் செருகும் ஆணி . |
குடைவண்டு | துளைக்கும் வண்டு . |
குடைவிருத்தி | விழாக் காலத்தில் சுவாமிக்குக் குடைபிடிப்பதற்காக ஏற்பட்ட மானியம் . |
குடைவு | பொந்து ; குகை . |
குடைவேல் | உடை ; நீருடை மரம் . |
![]() |
![]() |
![]() |