கூத்தி முதல் - கூர்மிகை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கூர் மிகுதி ; கூர்மை ; கூர்நுனி ; குயவன் சக்கரத்தைத் தாங்கும் ஓர் உறுப்பு ; இலையின் நடுநரம்பு ; கதிர்க்கூர் ; காரம் ; குத்துப் பாடான பேச்சு ; மிக்க ; சிறந்த .
கூர்க்கறுப்பன் ஒருவகை உயர்ந்த நெல் .
கூர்கெடுதல் நுனி மழுங்குதல் ; அறிவு மழுங்குதல் .
கூர்கேவு வெண்கடுகு .
கூர்ங்கண் ஊடுருவிப் பார்க்குங் கண் .
கூர்ச்சகன் நெய்வோன் .
கூர்ச்சம் கட்டடத்திற்கு உதவுஞ் சிறுகால் ; தருப்பை ; தருப்பைக்கொத்து .
கூர்ச்சரி ஒரு பண்வகை .
கூர்ச்சி கூர்மை .
கூர்ச்சிகை எழுதுகோல் .
கூர்ச்சு கூர்மை ; கூருள்ள தடி .
கூர்ச்சேகரம் தென்னைமரம் .
கூர்ச்சீட்டு கூறுசீட்டு ; பாகபத்திரம் .
கூர்சீவுதல் கூராக்குதல் ; சீவுதல் ; பகை மூட்டுதல் .
கூர்த்தல் மிகுதல் ; கூர்மையாதல் ; அறிவு நுட்பமாதல் ; உவர்த்தல் : சினத்தல் .
கூர்த்திகை மட்டிப் படைக்கலம் ; ஆயுதப்பொது .
கூர்தல் மிகுதல் ; விரும்புதல் ; வனைதல் ; குளிரால் உடம்பு கூனிப்போதல் .
கூர்ந்தபஞ்சமம் மருத யாழ்த்திறவகை .
கூர்ப்பது உள்ளது சிறத்தல் ; உறைப்பு ; கூர்மை ; மிகுதி .
கூர்ப்பம் புருவமத்தி .
கூர்ப்பரம் முழங்கை .
கூர்ப்பிடுதல் தீட்டிக் கூர்மையாக்குதல் .
கூர்ப்பு உள்ளது சிறத்தல் ; கூர்மை ; அறிவு நுட்பம் ; உவர்ப்பு .
கூர்மக்கை பெருவிரலை நீட்டி மற்றை விரல்களை வளைத்துக் கீழ்நோக்கிப் பிடிக்கும் அபிநயக் கைவகை .
கூர்மம் ஆமை ; திருமால் பிறப்புள் ஒன்று : கூர்மபுராணம் .
கூர்மயோகம் ஒருவன் பிறக்குங் காலத்து அவனுக்கு உயர்ந்த நிலையைக் கொடுக்குமாறு கோள்கள் சேர்ந்த ஒரு யோகம் .
கூர்மன் தசவாயுக்களுள் இமைத்தல் விழித்தல்களைச் செய்யும் வாயு .
கூர்மாதனம் கால் மடித்து உட்காருகை , ஒரு வகை இருக்கை .
கூர்மிகை வீணைவகை .
கூத்தி நாடகக் கணிகை ; வேசி .
கூத்து நடனம் ; பதினொருவகைக் கூத்து ; நாடகம் ; தெருக்கூத்து ; வியத்தகு செயல் ; கேலிக்கூத்து ; குழப்பம்: நாடகம்பற்றி அமைந்த ஒரு கடைச்சங்க நூல் .
கூத்துக்களரி நடனசாலை .
கூத்துக்காரன் கூத்தாடுவோன் ; கூத்தாட்டுவோன் ; விகடக்காரன் .
கூத்துப்பண்ணுதல் வேடிக்கை பண்ணுதல் ; குழப்பஞ்செய்தல் .
கூத்துப்பாட்டு நாடகப் பாடல் .
கூத்துள்படுவோன் ஆடல் ஆசிரியன் .
கூதல் குளிர் ; காய்ச்சற் குளிர் .
கூதளம் கூதாளிச்செடி ; வெள்ளரிக்கொடி ; தூதுளைக்கொடி .
கூதறை இழிந்தது ; இழிந்த குணமுடையவன் ; கிழியல் .
கூதனம் இடக்கர்ச்சொல் ; மறைத்த சொல் .
கூதாரி வெள்ளரிக்கொடி .
கூதாளம் தூதுளைக்கொடி ; செடிவகை .
கூதாளி தூதுளைக்கொடி ; செடிவகை .
கூதிர் பனிக்காற்று ; ஒரு பெரும்பொழுது , ஐப்பசி கார்த்திகை சேர்ந்த பருவம் ; காற்று ; குளிர் .
கூதிர்ப்பாசறை போர்மேற் சென்ற அரசன் கூதிர்காலத்தில் தங்கும் படைவீடு .
கூதுளம் காண்க : கூதாளம் .
கூதை காற்று ; பனிக்காற்று .
கூதைசெய்தல் காதை மூளியாக்குதல் .
கூந்தல் மயிற்றோகை ; பெண்மயிர் ; மயிற்பீலி ; யானைக் கழுத்தின் அடிமயிர் ; குதிரைப் பிடரிமயிர் ; கமுகு , பனை இவற்றின் ஒலை ; கூந்தற் பனைமரம் ; பூ முதலியவற்றின் மெல்லியதோர் உறுப்பு .
கூந்தல்கொள்ளுதல் மகளிரைத் தழுவுதல் .
கூந்தல்தொடுதல் மகளிரைத் தழுவுதல் .
கூந்தலாற்றுதல் ஈரமயிரைக் கோதி உலர்த்துதல் .
கூந்தளம்பாவை பூவகை .
கூந்தற்கமுகு ஒருவகைக் கமுகு ; தாளிப்பனை .
கூந்தற்பனை தாளிப்பனைமரம் ; திப்பிலிப் பனைமரம் .
கூந்தன்மா குதிரை .
கூந்தாலம் கடப்பாரை .
கூந்தாலி கடப்பாரை .
கூந்து கூந்தல் ; குதிரைப் பிடரிமயிர் ; யானைக் கழுத்து மயிர் .
கூப்பாடு கூப்பிடுதல் ; முறையிடுதல் ; பேரொலி .
கூப்பிடு முறையீடு ; கூப்பிடு தொலைவு .
கூப்பிடுதல் அழைத்தல் ; வரவழைத்தல் ; அச்சம்: துயரம் முதலியவற்றால் கத்துதல் ; பேரொலி செய்தல் ; தொழுதற்குக் குவித்தல் .
கூப்பிடுதூரம் கூப்பிட்ட சத்தம் கேட்குமெல்லை , குரோசம் .
கூப்பீடு கூப்பிடுதல் ; முறையீடு ; கூப்பிடு தொலைவு .
கூப்பு குவியச்செய்கை .
கூப்புதல் கைகுவித்தல் ; குவித்தல் ; சுருக்குதல் .
கூபகம் இடுப்பிலுள்ள குழிவிடம் ; ஒரு நாடு .
கூபம் கிணறு .
கூபரம் முழங்கை .
கூபரி தேர் .
கூபாரம் கடல் .
கூம்பல் குமிழமரம் .
கூம்பு பாய்மரம் ; தேர்மொட்டு ; பூவரும்பு ; சேறு .
கூம்புதல் குவிதல் ; ஒடுங்குதல் ; ஊக்கம் குறைதல் .
கூம்புவிடல் தளையவிழ்தல் .