சொல்
|
அருஞ்சொற்பொருள் |
கொல்லுதல் | வதைத்தல் ; அழித்தல் ; வெட்டுதல் ; கதிரறுத்தல் ; துன்பப்படுத்துதல் ; கெடுத்தல் . |
கொல்லுலை | கொல்லனின் உலைக்கூடம் ; கம்மாளர் உலைமுகம் . |
கொல்லெனல் | ஓர் ஒலிக்குறிப்பு ; ஒலியடங்குதற் குறிப்பு . |
கொல்லை | முல்லைநிலம் ; புன்செய்நிலம் ; தரிசு ; தினைப்புனம் ; தோட்டம் ; புழைக்கடை ; மலங்கழிக்குமிடம் ; மலம் ; வரம்புகடந்து ஒழுகுவோர் . |
கொல்லைக்காரன் | தோட்டம் , வயல் முதலியவற்றில் வேலைசெய்பவன் ; குப்பையெடுப்பவன் . |
கொல்லைக்குப்போதல் | மலங்கழித்தல் . |
கொல்லைப்பயிர் | மேட்டுநிலப் பயிர் . |
கொல்லைமை | வரம்புகடந்து நடத்தல் . |
கொல்லைவிளைவித்தல் | தோட்டம் பயிரிடுதல் . |
கொல்லிவெற்பன் | காண்க : கொல்லிச்சிலம்பன் . |
கொம்மை | வட்டம் ; பெருமை ; திரட்சி ; இளமை ; அழகு ; மார்பு ; இளமுலை ; வலிமை ; மேடு ; வீடு ; கொத்தளம் ; அடுப்புக்குமிழ் ; கதவுக்குடுமி ; அழுக்குத் துணியிடும் பெட்டி ; கைகுவித்துக் கொட்டுகை ; கொம்மட்டிக் கொடி ; கம்புவகை ; பதர் . |
கொம்மைகொட்டுதல் | கும்மியடித்தல் ; தட்டியழைத்தல் ; முதுகைத் தட்டிக்கொடுத்தல் . |
கொய் | மீன்வகை . |
கொய்சகம் | ஓரம் கொய்து அடுக்கப்பட்ட உடை . |
கொய்தல் | பறித்தல் ; அறுத்தல் ; கத்தரித்தல் ; தெரிந்தெடுத்தல் ; சீலை கொய்தல் ; சிலிர்த்தல் . |
கொய்யகம் | கொய்சகம் ; மண்டபத்தில் அலங்காரமாக ஒரம் சுருக்கி அமைத்துத் தொங்கவிடப்படும் ஆடை . |
கொய்யடி | வண்டானம் என்னும் நாரை வகை . |
கொய்யடிநாரை | வண்டானம் என்னும் நாரை வகை . |
கொய்யல் | ஒரு பழமரவகை . |
கொய்யா | ஒரு பழமரவகை . |
கொய்யாக்கட்டை | இடுக்கிச்சட்டம் ; அச்சின் மீது இரண்டு அருகுகளிலும் வண்டிச் சட்டத்தைத் தாங்கம்படி குறுக்காக வைக்கப்படும் கட்டைகள் ; கொய்யாமரத்தின் கட்டை . |
கொய்யுளை | குதிரைப் பிடரிமயிர் ; குதிரை . |
கொரடா | குதிரைச் சவுக்கு ; இடுக்கி . |
கொரலி | தினை ; வெண்தினை . |
கொரி | கன்றின் வாய்ப்பூட்டு . |
கொரிக்கம் | எழுத்தாணிப் பூண்டு . |
கொருடன் | கொவ்வைக்கொடி . |
கொல் | இரும்பு ; உலோகம் ; கொலைத் தொழில் ; வருத்தம் ; கொல்லன் ; கொல்லன் தொழில் ; கதவில் தைக்கும் இரும்பு ; குறுக்குத் தாழ் ; ஐயப்பொருள் தரும் ஓர் இடைச்சொல் ; ஓர் அசைநிலை . |
கொல்குறும்பு | கொல்லும் வேடர் ஊர் , பாலை நிலத்தூர் . |
கொல்லங்கோவை | காக்கணங்கொடி ; ஆகாசகருடன் . |
கொல்லத்துக்காரன் | கொத்துவேலை செய்பவன் . |
கொல்லம்பாகல் | ஒரு பாகல்வகை . |
கொல்லமா | கொட்டை முந்திரிமரம் . |
கொல்லமிளகு | மிளகாய்வகை . |
கொல்லர் | கம்மாளர் ; அரண்மனை வாயில்காப்போர் . |
கொல்லற்றுவேலை | காண்க : கொத்துவேலை . |
கொல்லறு | காண்க : கொத்துக்கரண்டி . |
கொல்லன் | கம்மாளன் ; இரும்புவேலை செய்பவன் ; அரண்மனை வாயிற்காவலன் . |
கொல்லன்கம்மாலை | காண்க : கொல்லன்பட்டரை . |
கொல்லன்கோவை | காண்க : கொல்லங்கோவை . |
கொல்லன்பகை | அஞ்சன நஞ்சு . |
கொல்லன்பட்டடை | அடைகல் . |
கொல்லன்பட்டரை | கொல்லன் உலைக்கூடம் . |
கொல்லா | கருவூலவறையில் வேலைபார்க்கும் நம்பிக்கையான வேலையாள் . |
கொல்லாக்கொலை | சித்திரவதை . |
கொல்லாமை | உயிர்க்கொலை செய்யாமை . |
கொல்லாவண்டி | உயர்ந்தோர் ஏறிச் செல்கின்ற மாட்டுவண்டி . |
கொல்லாவிரதம் | உயிர்க்கொலை செய்யாமையாகிய நோன்பு . |
கொல்லாவிரதியர் | கொல்லாமையை நோன்பாக உடையவர் ; சமணர் . |
கொல்லாவேதம் | சைனாகமம் . |
கொல்லாவேதன் | கொல்லாவேதத்தை அருளிய அருகன் . |
கொல்லி | கொல்லும் தன்மையது ; சேலம் மாவட்டத்திலுள்ள மலை ; மருத யாழ்த்திறவகை , பண்வகையுள் ஒன்று ; கொல்லிப்பாவை . |
கொல்லிக்கௌவாணம் | முற்காலத்து வழங்கிய ஒரு சிறுபண்வகை . |
கொல்லிச்சி | கொல்லச் சாதிப்பெண் . |
கொல்லிச்சிலம்பன் | கொல்லிமலைத் தலைவனாகிய சேரன் . |
கொல்லித்திறம் | முற்காலத்து வழங்கிய ஒரு பண்வகை . |
கொல்லிப்பாவை | கொல்லிமலையில் தேவரால் அமைக்கப்பெற்று நோக்குவோரைத் தன்வயப்படுத்தும் மோகினிப் படிமை . |
கொல்லிமலை | சேரன்மலை . |
கொல்லிவாடி | பாலை யாழ்த்திறவகை . |
கொம்புச்சுழி | சுழிவகை . |
கொம்புசீவிவிடுதல் | கொம்பைப் கூராக்கி விடுதல் ; சண்டைமூட்டி விடுதல் ; உற்சாகப்படுத்துதல் . |
கொம்புத்தேன் | மரக்கிளையிலுள்ள தேனடையிலிருந்து எடுத்த தேன் ; தூய தேன் . |
கொம்புத்தேனீ | தேனீவகை . |
கொம்புதல் | முயலுதல் ; சினத்தல் . |
கொம்புப்பாகல் | நீண்ட பாகல்வகை . |
கொம்புப்பிடி | கத்தி முதலியவற்றிற்குத் கொம்பால் செய்த பிடி . |
கொம்புபிடித்தல் | கொம்பை ஊதுதல் . |
கொம்புமுளைத்தல் | பிறர்க்கில்லாத சிறப்புண்டாயிருத்தல் ; ஆடு மாடு முதலியவற்றிற்குக் கொம்பு முளைத்தல் . |
கொம்பூதி | கொம்பூதுவோன் ; நத்தை . |
கொம்பேறிமூக்கன் | பச்சைப்பாம்பு , மரப் பாம்புவகை . |
கொம்பேறிமூர்க்கன் | பச்சைப்பாம்பு , மரப் பாம்புவகை . |
கொம்மட்டி | கொடிவகை ; தும்மட்டிக்காய் . |
கொம்மட்டிமாதுளை | ஒரு மாதுளை மரவகை . |
கொம்மி | மகளிர் கைகொட்டிப் பாடியாடும் விளையாட்டு . |
கொம்மெனல் | ஒலிக்குறிப்பு ; பெருக்கக்குறிப்பு ; விரைவுக்குறிப்பு . |
![]() |
![]() |
![]() |