கோழைபடுதல் முதல் - கோனோலை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கோள்முடித்தல் புறந்தூற்றுதல் ; கோட்சொல்லி இருவருக்குள் கலகம் விளைவித்தல் .
கோள்வாய் புதுப்புண் .
கோளக்கட்டி புண்வகை .
கோளகம் மிளகு ; திப்பிலி ; தாளகம் ; மண்டலிப் பாம்பு .
கோளகை வட்டவடிவம் ; யானையின் தந்தப் பூண் ; மண்டலிப்பாம்பு ; உறை .
கோளம் உருண்டை ; உயிரிகளின் உடலுக்குள் நீர் ஊறும் தசைப்பற்று .
கோளயோகம் ஓர் இராசியிலே ஏழு கோள்கள் நிற்க வரும் யோகம் .
கோளரி சிங்கம் .
கோளரிக்கொடியோன் சிங்கக்கொடியை உடைய வீமன் .
கோளவங்கம் ஈயமணல் .
கோளன் கோள் சொல்லுவோன் ; கைம்பெண் பெற்ற மகன் .
கோளாங்கல் கூழாங்கல் .
கோளாம்பி படிக்கம் .
கோளார்த்தம் நிலவுருண்டையின் பாதி .
கோளாளன் நூற்பொருள் முதலியவற்றை மறவாது பற்றுவோன் .
கோளாறு தாறுமாறு ; குற்றம் ; சண்டை ; வழி வகை .
கோளி கொள்வோன் ; ஆலமரம் ; அத்திமரம் ; பூவாது காய்க்கும் மரம் ; கொழிஞ்சிமரம் ; நான்காம் வேற்றுமை ; கைம்பெண் பெற்ற மகன் ; குதிரை கழுதைகளின் பெட்டை .
கோளிகை குதிரை கழுதைகளின் பெட்டை .
கோளிழைத்தல் கொல்லுதல் .
கோளுரை கோட்சொல்லல் .
கோளேசம் குங்குமப்பூ .
கோளை எலி ; குவளை ; தோழி ; கோதாவரி ; மனோசிலை ; நீர்ச்சால் .
கோற்காரன் ஊர் ஊழியக்காரன் ; ஓடந்தள்ளுவோன் .
கோற்குத்து கோல்முனையால் குத்தப்படும் அளவுள்ள நிலம் .
கோற்குறிப்பு நிலவளவுக் கணக்கு .
கோற்கூத்து வரிக்கூத்துவகை .
கோற்கொடி இலந்தைமரம் ; சுரைக்கொடி .
கோற்புழு உலண்டு .
கோற்றேன் கொம்புத்தேன் .
கோற்றொடி வேலைத் திறனமைந்த கைவளையல் .
கோற்றொழில் அரசாட்சி செய்கை ; அரிய வேலைப்பாடு .
கோற்றொழிலவன் அரண்மனை வாயிலில் கோல்கொண்டு காவல் செய்பவன் .
கோற்றொழிலாளர் தண்டத்தைக் கையேந்தி அரசர்க்குமுன் வழிவிலக்குவோர் .
கோறணி கேலிக்கூத்து ; முகங்காட்டுகை ; திமிர்வாதம் ; முணுமுணுப்பு .
கோறம்பு ஒரு நெற்றியணிவகை .
கோறல் கொல்லுதல் .
கோறின்னல் கோலை மெல்லுகை ; பல் விளக்கல் .
கோறை பழுது ; சிராய்த்த காயம் ; தொளை ; மணிபதிக்குங் குழி .
கோன் அரசன் ; தலைவன் ; இடையர் ; பட்டப் பெயர் .
கோன்மை அரசாட்சி .
கோனடிதொடுதல் அரசன் அடிமேல் ஆணையிடுதல் .
கோனான் இடையர் பட்டப்பெயர் .
கோனிச்சி இடைச்சி .
கோனோலை அரசனாணை எழுதப்பட்ட திருமுகம் .
கோழைபடுதல் கீழ்மையடைதல் , தாழ்வடைதல் .
கோழைபோக்கி நறுந்தாளி .
கோழையன் மனத்திடமற்றவன் .
கோழையிருமல் கபக்கட்டால் வரும் இருமல் .
கோழைவிந்து துளசி .
கோள் கொள்ளுகை , துணிவு ; மதிப்பு ; வலிமை ; அனுபவம் ; புறங்கூறுதல் ; பொய் ; இடையூறு ; தீமை ; கொலை ; பாம்பு ; நஞ்சு ; இராகு ; கோள் ; மேகம் ; ஒளி ; பரிவேடம் ; குலை ; இயற்கை ; காவட்டம்புல் ; கொழு ; முன்னிலைப் பன்மை விகுதி .
கோள்பிராது காண்க : கோளுரை .