சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| சகுணத்தியானம் | கடவுளைக் குண உருவங்களுடையவராக மனத்தால் வழிபடுதல் . |
| சகமீன்றவள் | உலகங்களைப் பெற்றவளாகிய பார்வதி . |
| சகர்ப்பபிராணாயாமம் | மந்திரத்தோடு செய்யப்படும் மூச்சுப் பயிற்சி . |
| சகரச்சாரி | சத்திசாரம் . |
| சகரநீர் | சகரர் தோண்டிய கடல் . |
| சகரர் | கடலுண்டாக்குமாறு பூமியைத் தோண்டியவர்களான சகரபுத்திரர் . |
| சகரிகம் | நாயுருவிச்செடி . |
| சகரையாண்டு | சகாப்த வருடம் . |
| சகல் | கொசு . |
| சகலகம் | வெள்ளாட்டுக்கடா . |
| சகலகலாவல்லவன் | கலையறிவு அனைத்தையும் அறிந்தவன் . |
| சகலகலாவல்லி | கலைகள் அனைத்திற்கும் உரியவளான கலைமகள் . |
| சகலகுண சம்பன்னன் | நற்குணங்கள் எல்லாம் நிறைந்தவன் . |
| சகலத்திராள் | எல்லாரும் . |
| சகலபாசனம் | அருகன் முக்குடையுள் ஒன்று . |
| சகலபாடி | காண்க : சகலன் . |
| சகலம் | எல்லாம் ; சகலாவத்தை ; துண்டு . |
| சகலமங்கலை | பார்வதி . |
| சகலமோகினி | உலகத் தோற்றத்திற்குக் காரணமான மாயா சக்தி . |
| சகலர் | ஆணவமலம் , கன்மமலம் , மாயாமலம் , என்னும் மும்மலத்தையும் உடைய உயிர்கள் . |
| சகலன் | மனைவியின் உடன்பிறந்தாள் கணவன் . |
| சகலாத்தன் | அருகருள் நிகண்டவாதிகளால் கடவுளென்று கொள்ளப்படுபவர் . |
| சகலாத்து | ஒரு கம்பளித் துணிவகை . |
| சகலாவத்தை | ஓரவத்தை , மேலாமவத்தை ; ஆன்மாக்கள் உடல் எடுத்துப் பிறப்பு இறப்புகளுக்கு உட்படும் காரணாவத்தை . |
| சகலி | ஒரு மீன்வகை . |
| சகலிகரணம் | துண்டுதுண்டாக்கல் . |
| சகலை | காண்க : சகலன் . |
| சகவாசம் | நட்பு . |
| சகளத்திருமேனி | சிவனது உருவவடிவம் . |
| சகளநிட்களம் | இலிங்கமாகிய சிவனது அருவுருவத் திருமேனி . |
| சகளம் | உருவத்திருமேனி . |
| சகளன் | உருவத் திருமேனிக்கொண்ட சிவன் ; மனைவியின் உடன்பிறந்தாள் கணவன் . |
| சகளீகரித்தல் | உருவங்கொள்ளுதல் . |
| சகன் | சாலிவாகனன் ; உலகநாயகன் ; தோழன் . |
| சகன்மகதாது | செயப்படுபொருள் குன்றாத வினை . |
| சகனம் | தொடையினுட்பக்கமாகிய பிருட்டம் ; பொறுமை ; காண்க : சகாப்தம் . |
| சகா | தோழன் ; பாம்புகொல்லிப்பூண்டு ; உதவி ; துணை . |
| சகாடி | பீர்க்கங்கொடி . |
| சகாத்தம் | காண்க : சகாப்தம் . |
| சகாத்தன் | தோழன் . |
| சகாதி | பாம்புகொல்லிப்பூண்டு . |
| சகாதேவி | நிலமகள் ; நெய்ச்சிட்டிச்செடி . |
| சகாப்தம் | கி .பி . 78-ல் தொடங்குவதும் சாலி வாகனன் பெயரால் வழங்குவதும் ஆன ஆண்டுக்கணக்கு . |
| சகாமியம் | பயனை விரும்பிச் செய்யும் செயல் . |
| சகாயதனம் | உதவியாகக் கொடுக்கும் பணம் . |
| சகாயம் | துணை , உதவி , விலைநயம் , மலிவு ; நலம் . |
| சகாயன் | உதவிசெய்வோன் ; தோழன் . |
| சகாயி | உதவிசெய்வோன் ; தோழன் . |
| சகாயித்தல் | உதவிசெய்தல் ; மலிவாய்க் கொடுத்தல் . |
| சகார்த்தம் | உடனிகழ்ச்சிப் பொருள் . |
| சகாரம் | ஏச்சு ; இகழ்ச்சி . |
| சகாரி | சகர்களின் பகைவனான விக்கிரமாதித்தன் . |
| சகாரித்தல் | ஏசுதல் . |
| சகானா | ஒரு பண்வகை . |
| சகி | தோழன் ; தோழி . |
| சகித்தல் | பொறுத்தல் ; மன்னித்தல் . |
| சகித்துவம் | தோழமை . |
| சகிதம் | கூட . |
| சகிதன் | சேர்ந்திருப்போன் ; அஞ்சி நடுங்குபவன் . |
| சகிப்பாளி | பொறுமையுள்ளவன் . |
| சகிப்பு | பொறுத்தல் . |
| சகியம் | நிலப்பனை ; மஞ்சள் ; மாமரம் ; காவிரியாறு தோன்றும் மலை . |
| சகுட்டகம் | ஆடுதின்னாப்பாளை . |
| சகுட்டம் | ஆடுதின்னாப்பாளை . |
| சகுடம் | நாய் ; சேம்பு . |
| சகதீசன் | உலகிற்குத் தலைவனான கடவுள் . |
| சகதேவம் | உண்கலமாகப் பயன்படாத இலையையுடைய ஒரு மரவகை . |
| சகதேவி | நிலமகள் ; நெய்ச்சிட்டிச் செடி . |
| சகந்நாதன் | உலகிற்கு இறைவனான பூரியில் கோயில் கொண்டுள்ள கடவுள் ; திருமால் . |
| சகநாதன் | உலகிற்கு இறைவனான பூரியில் கோயில் கொண்டுள்ள கடவுள் ; திருமால் . |
| சகநாயகன் | காந்தம் . |
| சகப்பிராந்தி | உலக இன்பத்தால் உண்டாகும் மயக்கம் . |
| சகபாடி | ஒரே பள்ளியிற் பயின்ற மாணாக்கன் ; கூடப் பாடுவோன் ; மனைவியின் உடன்பிறந்தாள் கணவன் . |
| சகம் | உலகம் ; சகாப்தம் ; ஆண்டுகளைக் கணிக்கும் கணக்கு ; சக ஆண்டு ; வெள்ளாடு ; பாம்புச்சட்டை ; சட்டை ; மார்கழி மாதம் . |
| சகமார்க்கம் | இறைவடிவை ஒத்த நிலை பெறுதற்குரிய யோகநெறி ; தோழமைநெறி . |
|
|
|