சாத்தாவாரி முதல் - சாதாரணம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
சாதகங்கணித்தல் ஒருவனது பிறந்தநாட்குறிப்பைக் கோள் நிலையைக் கணக்கிட்டு அறிந்து எழுதுதல் .
சாதகஞ்செய்தல் ஒருவனது பிறந்தநாட்குறிப்பைக் கோள் நிலையைக் கணக்கிட்டு அறிந்து எழுதுதல் .
சாதகப்பட்டிகை சாதகம் எழுதிய பத்திரம் .
சாதகப்புள் காண்க : சாதகபட்சி
சாதகப்பொருத்தம் மணமக்களுடைய சாதகங்கள் தம்முள் பொருந்துகை .
சாதகபட்சி வானத்திலிருந்து விழும் மழைத்துளியைப் பருகி வாழும் ஒரு பறவைவகை .
சாதகபலன் சாதகத்தின்படியுள்ள நிகழ்ச்சிகள் .
சாதகபுட்பம் காண்க : கடனுரை .
சாதகபுடம் சாதகம் கணித்தல் .
சாதகம் பிறப்பு ; பிறவிக்குணம் ; சாதகப்பத்திரிகை ; ஒரு நூல்வகை ; பயிற்சி ; துணைக்காரணம் ; உதவி ; ஏந்து ; முடிக்கவேண்டியது ; அனுகூலம் ; பிரமாணம் ; பூதம் ; சாதகப்புள் ; மறைப்பு ; எருக்கு .
சாதகராகத்தி கோழித்தலைக் கந்தகம் .
சாதகருமம் காண்க : சாதகன்மம்
சாதகன் பயிற்சியுள்ளவன் ; யோகவழி நிற்போன் ; நிருவாணதீட்சை பெற்றவன் ; மாணாக்கன் ; இறப்புவரை இல்லற ஒழுக்கத்தில் நிற்பவன் ; உதவியாளன் ; பூதம் ; சாதகத்துக்குரியவன் .
சாதகன்மம் பிள்ளை பிறந்த காலத்தில் செய்யும் சடங்கு .
சாதகும்பம் பொன் .
சாதங்காண்தல் உலையிலிட்ட அரிசி அளவுக்குமேல் சோறாகத் தோன்றுதல் .
சாதங்காணுதல் உலையிலிட்ட அரிசி அளவுக்குமேல் சோறாகத் தோன்றுதல் .
சாதம் பிறப்பு ; தோன்றுவது ; இளமையுடையது ; உண்மை ; கூட்டம் ; சோறு ; பூதம் .
சாதர் பிறந்தவர் ; உயர்ந்த சால்வை .
சாதரா உயர்ந்த சால்வை .
சாதரூபம் நால்வகைப் பொன்களுள் ஒன்று
சாதரூபி பொன்னிறமுடைய அருகன்
சாதல் இறத்தல்
சாதலம் திராய் என்னும் துலாக்கட்டை .
சாதவண்டு ஒரு வண்டுவகை
சாதவாகனன் ஐயனார் ; சாதவாகன மரபிலுள்ள ஓர் அரசன் .
சாதவேதா நெருப்பு ; கொடிவேலி .
சாதன்மியம் ஒப்புமை .
சாதனக்காணி அரசனால் விடப்பட்ட உரிமை நிலம் .
சாதனசாத்தியம் காரணகாரியம்
சாதனப்படிசெலுத்துதல் உயில் எழுதுதல் .
சாதனப்பத்திரிகை விருப்ப ஆவணம் , உயில் ; பத்திரம் .
சாதனப்பத்திரம் உரிமைப்பத்திரம் ; விலை ஆவணம்
சாதனம் கருவி ; துணைக்காரணம் ; பயிற்சி ; அனுமான உறுப்புகளுள் ஒன்றாகிய ஏது ; உருத்திராக்கம் முதலிய சின்னம் ; இலாஞ்சனை ; இடம் ; நகரம் ; ஆதாரபத்திரம் .
சாதனம்பண்ணல் பழகல் ; உறுதிசெய்தல் .
சாதனன் பிறந்தவன் .
சாதனை செயல்முடிக்கை ; விடாத முயற்சி ; பிடிவாதம் ; சலஞ்சாதிக்கை ; நடித்துக்காட்டுகை ; பொய் .
சாதா சாதாரணமான ; பகட்டில்லாத .
சாதாக்கொப்பு மாதர் காதணிவகை .
சாதாரண அறுபதாண்டுக் கணக்கில் நாற்பத்து நான்காம் ஆண்டு .
சாதாரணதருமம் எல்லாச் சாதியாருக்கும் பொதுவான ஒழுக்கம் ; உவமான உவமேயங்களின் பொதுத்தன்மை .
சாதாரணப்படுதல் எலலோராலும் அறியப்படுதல் .
சாதாரணம் பொதுவானது ; எளிது ; தாழ்வானது ; ஏதுப்போலி .
சாத்தாவாரி தண்ணீர்விட்டான் கொடிவகை .
சாத்தான் பிசாசநாதன் .
சாத்தானி கோயிலில் பூமாலைத் தொண்டு புரிந்துவரும் பார்ப்பனனல்லாத வைணவன் .
சாத்திக்கொள்ளுதல் பகட்டாக மாலை முதலியன அணிதல் .
சாத்திகம் முக்குணத்துள் ஒன்றான சாத்து விகம் சிற்பநூலுள் ஒன்று .
சாத்தியந்தன் பிறவிக்குருடன் .
சாத்தியம் முடிக்கத்தக்கது , சாதிக்கத்தக்கது ; அனுமான உறப்புள் துணியப்பட வேண்டும் பொருள் ; இருபத்தேழு யோகத்துள் ஒன்று ; தீர்க்கக்கூடியது .
சாத்தியர் தேவருள் ஒரு பகுதியார் .
சாத்தியரோகம் தீர்க்கக்கூடிய நோய்
சாத்திரக்காரன் குறி சொல்பவன் ; சோதிடன் .
சாத்திரம் நூல் ; வேதாந்தம் , தருக்கம் முதலிய நூல் .
சாத்திரம்பார்த்தல் குறிபார்த்தல் ; சோதிட நூலால் நன்மை தீமை பார்த்தல்
சாத்திரவேரி காண்க : சாத்தாவாரி .
சாத்திரி சாத்திரங் கற்றவன் .
சாத்து சாத்துகை ; காண்க : சாத்துமுறை ; அடி ; பெயர்த்து நடப்பெற்ற நாற்று ; வாணிகர் கூட்டம் ; கூட்டம் ; கைம்மரம் .
சாத்துக்கவி நூல்செய்தோன் பெருமை முதலியவற்றை விளக்கும் சிறப்புப் பாயிரம் .
சாத்துக்குடி கிச்சிலிவகை ; தித்திப்பெலுமிச்சை .
சாத்துதல் அணிதல் ; தரித்தல் ; பூசுதல் ; அடைத்தல் ; நூலைப் படித்து முடித்தல் ; அடித்தல் ; பெயர்த்து நடுதல் .
சாத்துப்படி கோயில் சிலைகளுக்கு மாலை முதலியன சாத்தி அலங்கரித்தல் ; சந்தனம் .
சாத்துப்பயிர் பிடுங்கி நடப்பெற்று வளர்ந்த பயிர் .
சாத்துமாலை அணிதற்குறிய பூமாலை .
சாத்துமுறை கோயில் முதலிய இடங்களில் வைணவர் திவ்வியப் பிரபந்தத்தை ஓதியபின் இறுதியில் சில பாசுரங்களைச் சிறப்புத் தோன்றத் தனியே ஓதுகை ; ஆழ்வாராதியர் திருவிழாவின் முடிவு ; தெய்விக நூல்கள் பற்றிய உரைக்கோவையின் முடிவு .
சாத்துலம் புலி .
சாத்துவதி அறம் பொருளாகவும் , தெய்வமானிடர் தலைவராகவும் வரும் நாடக விருத்தி .
சாத்துவம் சாத்துவிகம்
சாத்துவி சாத்துவ வடிவமாயுள்ள சிவபெருமான் .
சாத்துவிகம் முக்குணத்துள் ஒன்றாகிய உயர்ந்த நற்குணம் , அஃது அருள் , ஐம்பொறியடக்கல் , ஞானம் , தவம் , பொறை , மேன்மை , மோனம் , வாய்மை என எண்வகைப்படும் .
சாத்துவிகன் சாந்தகுணமுடையவன் .
சாத்துறி உறிவகை .
சாத்தெறிதல் வாணிகக் கூட்டத்தைக் கொள்ளையிடுதல் .
சாதகக்குணசலம் கந்தகம் .
சாதகக்குறிப்பு பிறந்த ஆண்டு , மாதம் , நாள் , இராசி முதலியவற்றின் குறிப்பு .