சார்பின்சார்பு முதல் - சால் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
சார்பின்சார்பு குறுகிய சார்பெழுத்து .
சார்பு இடம் ; பக்கம் ; அடைக்கலம் ; பற்று ; பிறப்பு ; பௌத்தர் கூறும் பன்னிரண்டு நிதானங்கள் ; ஒருதலை நிற்றல் ; அண்மை ; கூட்டுறவு ; பொருத்தம் ; சார்ப்புக்கூரை ; புகலிடம் ; கிட்டுகை .
சார்புநூல் முதல் நூல் வழிநூல்களது பொருட்கூட்டத் திரிபு வேறுடைய நூல் .
சார்பெழுத்து குற்றியலிகரம் , குற்றியலுகரம் முதலிய சார்பில் தோன்றும் எழுத்து .
சார்மணை சாய்ந்துகொள்ளுதற்காகத் திண்ணைகளில் அமைக்கப்படும் சாய்மானத்திண்டு .
சார்மானம் காண்க : சாய்மானம் .
சார்வணை சாய்ந்திருத்தற்குரிய அணை .
சார்வபௌமம் வடதிசை யானை .
சார்வபௌமன் ஒருவனைப் பணியாது உலகாள்வோனாகிய பேரரசன் .
சார்வரி அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்து நான்காம் ஆண்டு .
சார்வாரம் கச்சின் தலைப்பு .
சார்வு இடம் ; ஒட்டுத்திண்ணை ; புகலிடம் ; ஆதாரம் ; துணை ; வழிவகை ; பற்று ; இழவோலை ; அயலிடம் ; ஒருதலைப்பட்சம் .
சார்வோலை முதிர்ந்த குருத்தோலை .
சாரகம் தேன் ; இந்துப்பு .
சாரங்கபாணி சாரங்கத்தைக் கையிலுடைய திருமால் .
சாரங்கம் மான் ; வானம்பாடி ; யானை ; மேகம் ; குயில் ; வில் ; வண்டு ; ஒரு பண் ; திருமால் வில் ; குறிஞ்சாக்கொடி ; சிறுகுறிஞ்சாக்கொடி .
சாரங்கன் திருமால் ; குதிரைவகை .
சாரங்கி நரம்பு வாத்தியவகை .
சாரசம் தாமரை ; கொக்கு ; வெண்ணாரை ; இனியவோசை ; சீமைநன்னாரி .
சாரசன் சோரபுத்திரன் .
சாரசனம் மாதர் இடையணிவகை .
சாரசியம் இனிமை .
சாரணர் ஒற்றர் ; தூதுவர் ; சமண பௌத்தருள் சித்திகளடைந்தோர் ; தேவகணத்தாருள் ஒரு சாரார் ; நாட்டுத்தொண்டர் .
சாரணை ஒரு பூடுவகை .
சாரத்தியம் தேரோட்டுந் தொழில் .
சாரத்தின்சத்துரு முட்டை .
சாரத்துவம் விபசாரம் .
சாரத்துளை சாரக்கட்டை வைக்கும் சுவர்த்துளை .
சாரதம் பூதம் ; இனியவோசை ; ஓர் இசைப் பாட்டுவகை .
சாரதர் பூதகணத்தார் .
சாரதா கலைமகள் .
சாரதி தேரோட்டி ; புலவன் .
சாரதை காண்க : சாரதா .
சாரப்பருப்பு காட்டுமாவிரை .
சாரம் மேலேறக் கட்டும் மரம் ; மேடு ; கோளின் இயக்கம் ; சாறு ; இனிமை ; மருந்து ; சிறந்தது ; பயன் ; ஆற்றல் ; மரவயிரம் ; இலுப்பை ; கொட்டைமுந்திரிகைமரம் ; சித்திரப் பாலாடைப் பூடு ; நவச்சாரம் ; வண்ணான்காரம் ; காரச் சாம்பல் ; விபசாரம் ; வடித்தெடுத்த பகுதி ; மரவகை .
சாரமாக்குதல் பொருட்படுத்துதல் .
சாரமிறக்குதல் சாறுபிழிதல் ; சாற்றை உட்செலுத்துதல் ; கட்டடச் சாரத்தைப் பிரித்தல் .
சாரமேயன் நாய் .
சாரல் கிட்டுகை ; பக்கம் ; பக்கமலை ; மலை ; தூவானம் ; மருதயாழிசை ; தூற்றல் .
சாரலம் எள் .
சாரற்கட்டு மலையில் கோடைக்காலத்தில் மேகம் நிறைந்திருத்தல் .
சாரன் ஒற்றன் ; குதிரைவகை ; சோர நாயகன் .
சாராம்சம் வடித்தெடுத்த பகுதி ; பயன் .
சாராயம் காய்ச்சி வடித்த மது .
சாரி வட்டமாயோடுகை ; நடை ; ஊர்திமீது செல்லுகை ; உலாவல் ; கூட்டம் ; இசைக்கருவிவகை ; பக்கம் ; சூதாடுகாய் ; தடவை ; மாதர் சீலைவகை ; அஞ்சனபாடாணம் .
சாரிகை வட்டமாயோடல் ; வையாளி ; கதி ; சுழற்காற்று ; நாகணவாய்ப்பறவை ; கவசம் ; சுங்கம் ; பக்கம் .
சாரிகொள்ளுதல் நாட்டியத்தில் இடவலமாக ஆடுதல் .
சாரிசம் கறியுப்பு .
சாரிசெய்தல் வரியினின்று நீக்குதல் ; நிலம் முதலியவற்றைச் சாசனம்மூலம் உதவுதல் ; இழந்த அலுவலைத் திரும்பக் கொடுத்தல் ; ஆணையை உரியோர்க்குச் சேர்த்தல் .
சாரித்தல் கீழே விழச்செய்தல் .
சாரித்திரம் ஒழுக்கம் ; வரலாறு .
சாரிதம் இனிய குரல் .
சாரிநாதன் கத்தூரி விலங்கு .
சாரிபம் காண்க : நன்னாரி .
சாரிபை காண்க : நன்னாரி .
சாரியம் எட்டிமரம் ; நன்னாரி .
சாரியல் இந்துப்பு .
சாரியன் ஒழுக்கமுடையவன் .
சாரியை சார்ந்துவரும் இடைச்சொல் ; குதிரையின் சுற்றுவரவு ; வீரனுடைய நடைவகை ; ஆடல்வகை .
சாரீரகம் உடலோடு சம்பந்தப்பட்டது , சாரீர சம்பந்தமானது ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று ; காண்க : பிரம்மசூத்திரம் .
சாரீரம் உடலோடு தொடர்புடையது ; இனியகுரல் .
சாரு அழகு ; கிளி .
சாருகம் கொலை .
சாருகன் கொலையாளன் .
சாருசம் கல்லுப்பு .
சாரூப்பியம் கடவுளைப்போல் உருப்பெற்றிருத்தல் .
சாரூபம் கடவுளைப்போன்ற வடிவம் பெறுதல் ; இணக்கம் ; பொன்வகை .
சாரூரகம் காண்க : சாருசம் .
சாரூரசம் காண்க : சாருசம் .
சாரை ஒரு பாம்புவகை ; நீளமான கோடு .
சாரையோட்டம் சாரைப்பாம்பின் போக்கு ; நேரே ஓடும்வகை .
சாரைவாலன் நீண்ட வாலுள்ள எருது ; புகையிலைவகை .
சாரோசி நவச்சாரம் .
சாரோலை காண்க : சார்வோலை .
சால் நிறைவு ; நீர்நிரப்பும் பானை ; நீர் இறைக்கும் கலம் ; உழவுசால் ; கும்பராசி ; ஆண்டு .