சித்திரித்தல் முதல் - சிதேதரம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
சித்திரித்தல் அலங்காரமாய்ப் பேசுதல் ; ஓவியந்தீட்டல் ; அலங்கரித்தல் ; கற்பனைசெய்தல் .
சித்திரை ஒரு நட்சத்திரம் ; தமிழாண்டின் முதல் மாதம் ; அம்மான்பச்சரிசிப்பூண்டு ; நாகணவாய்ப்புள் .
சித்திரைக்கருந்தலை சாகுபடி முற்றுப் பெற்றதும் பின்ஏற்பாடுகளை நடத்தற்குரிய சித்திரைமாத முடிவு .
சித்திரோடாவி கல்லில் உருவம் சமைக்கும் சிற்பி .
சித்திலி சிற்றெறும்பு .
சித்திலிகை வேலைப்பாடுள்ள ஆடைவகை .
சித்தின்பம் ஞானத்தால் உண்டாகும் பேரின்பம் .
சித்தினி நால்வகைப் பெண்டிருள் ஒருத்தி , பதுமினி வகைக்கு அடுத்த தரத்தவள் .
சித்து அறிவு ; அறிவுப்பொருள் ; ஆன்மா ; அட்டமாசித்தி ; கலம்பக உறுப்பு ; வேள்வி ; வெற்றி ; ஒரு வரிக்கூத்து வகை ; எழுத்தடிப்பு ; கொத்தனுக்கு உதவிசெய்யும் சிற்றாள் .
சித்துக்காரன் சாலவித்தை கற்றவன் .
சித்துடு நேர்வாளம் ; கிலுகிலுப்பைச்செடி .
சித்துநீர் இரசம் .
சித்துப்பறத்தல் ஆகாசகமனஞ்செய்தல் ; விரைவில் மறைதல் ; செருக்குக் காட்டுதல் .
சித்துப்பொருள் அறிவுமயமான பொருள் .
சித்துரு கடவுள் .
சித்துரூபம் நேர்வாளக்கொட்டை .
சித்துவித்தை மாயவித்தை .
சித்துவிளையாடுதல் சித்திகள் செய்தல் ; மாயவித்தை செய்தல் .
சித்தேசன் பிறைச்சந்திர உருவமுள்ள தலைக்குட்டை அணிந்த ஒருவகைப் பிச்சைக்காரன் .
சித்தேரி சிறிய நீர்நிலை .
சித்தை எண்ணெய்த் துருத்தி ; பார்வதி ; தகரக்கலம் .
சிதகம் தூக்கணாங்குருவி .
சிதகன் சுக்கிரன் .
சிதகு குற்றம் .
சிதகுஞ்சரம் ஐராவதம் .
சிதகுதல் உருவுதல் ; எழுதினதை அழித்தல் .
சிதசத்திரம் வெண்குடை .
சிதசிந்து கங்கை .
சிதடன் குருடன் ; அறிவில்லான் ; பித்தன் .
சிதடி சிள்வண்டு ; அறிவில்லாதவள் ; பேதைமை .
சிதடு குருடு ; பேதமை ; அறியாமை ; உள்ளீடின்மை .
சிதப்பூரம் பொன்னாங்காணிக்கீரை .
சிதம் வெண்மை ; வெள்ளி ; வெற்றிகொள்ளப்பட்டது ; மனைவாயில் ; அறிவு ; விண்மீன் ; புளியாரை ; வெண்சிவதை ; சாதிக்காய் ; மீன் ; விண் ; விஷ்ணுக் கரந்தை .
சிதம்பர் இழிந்தோர் .
சிதம்பல் பதனழிதல் , கெட்டுப்போதல் .
சிதம்பு பதனழிவு ; இழிவு ; தன்மையின் அழிவு .
சிதம்புதல் பதனழிதல் ; நீரில் அதிக நேரம் கிடத்தலால் கைகால்கள் வெளுத்தல் ; நீர்ச் சாவியாதல் .
சிதமருசம் வெண்மிளகு .
சிதமை வெள்ளாடு .
சிதர் மழைத்துளி ; பூந்தாது ; பொடி ; துணி ; சீலை ; கந்தைத்துணி ; உறி ; வண்டு ; மெத்தெனவு ; சிந்துகை ; சிச்சிலிப்பறவைவகை .
சிதர்த்தல் பிரித்தல் ; வெட்டுதல் ; சிந்துதல் .
சிதர்தல் சிதறுதல் ; பரக்கச் சொல்லுதல் ; படுத்தல் ; சிதறி வீழ்தல் ; நைதல் ; காலால் கிளைத்தல் .
சிதர்வை நைந்து கிழிந்துபோன துணி .
சிதரம் மழைத்துளி ; உறி .
சிதல் கறையான் ; ஈசல் .
சிதலை கறையான் ; துணி ; நோய் .
சிதவல் சீலைத்துணி ; கந்தைத்துணி ; கிழிந்ததுண்டு ; வெட்டுகை ; குறைவுபட்டது ; சிதறுதல் ; படுக்கை ; தேரின் கொடி ; புரையோடிய புண் .
சிதவலிப்பு மனவுறுதி .
சிதள் மீன்செதில் ; புண்ணின் அசடு ; எலும்பு முதலியவற்றின் துண்டு .
சிதறடித்தல் முறியடித்தல் ; கலங்கச் செய்தல் .
சிதறவடித்தல் முறியடித்தல் ; கலங்கச் செய்தல் .
சிதறி மழை ; பாதிரிமரம் .
சிதறுதல் இறைத்தல் ; சிந்துதல் ; மிகுதியாகக் கொடுத்தல் ; கலைதல் ; அழிதல் ; பயன்றறதாதல் .
சிதன் சுக்கிரன் ; அச்சமுடையவன் .
சிதனம் கோடகசாலைப்பூண்டு .
சிதாகாசம் அறிவுவெளி , ஞானவெளி .
சிதாகாயம் அறிவுவெளி , ஞானவெளி .
சிதாத்துமா கடவுள் .
சிதாப்பிரம் வெள்ளைமுகில் .
சிதாபாசம் மயக்கு .
சிதாம்புசம் வெண்டாமரை .
சிதாம்போசம் வெண்டாமரை .
சிதார் சீலை ; மரவுரி ; ஒரு வாத்தியவகை .
சிதாரம் தேர்க்கொடி .
சிதாரி தூபப்பண்டம் .
சிதானந்தம் அறிவின்பம் , ஞானானந்தம் .
சிதானனன் கருடன் .
சிதி ஈமவிறகு ; கறுப்பு ; வெண்மை ; கோடரி .
சிதிரம் கோடரி ; தீ ; வாள் .
சிதிலம் சிதைவு .
சிதிமலர் தண்ணீர்விட்டான்கிழங்கு .
சிதுரம் நேர்வாளக்கொட்டை .
சிதுரன் பகைவன் ; தீயவன் .
சிதேகி கடுக்காய்மரம் .
சிதேதரம் கருமை .