சொல்
|
அருஞ்சொற்பொருள் |
சீமாட்டி | செல்வமுடையவள் ; தலைவி . |
சீமாவிவாதம் | எல்லைகுறித்த வழக்கு . |
சீமாள் | காண்க : சீமாட்டி |
சீமான் | செல்வன் ; குபேரன் ; சிவபிரான் ; தலைவன் ; திருமால் ; அருகன் . |
சீமுக | அறுபதாண்டுக் கணக்கில் ஏழாம் ஆண்டு . |
சீமுகம் | குரு , அரசன்போன்ற பெரியாரின் திருமுகம் . |
சீமுதகூடம் | மலை . |
சீமூதம் | நீருண்ட மேகம் ; ஊக்கம் ; பெண் யானை . |
சீமூதவாகனன் | மேகத்தை ஊர்தியாகக் கொண்ட இந்திரன் . |
சீமூதவாகி | புகை ; ஆவி ; அரி ; தூபம் . |
சீமூதன் | இந்திரன் ; உழவன் ; சிவன் . |
சீமூதை | திராட்சை . |
சீமை | எல்லை ; நாடு ; மேலைநாடு ; அதிகப்பிரசங்கி . |
சீமைக்கள்ளி | காண்க : சாதிக்காய் . |
சீமைச்சரக்கு | வெளிநாட்டுச் சரக்கு ; அரிதிற்கிடைக்கும் சரக்கு . |
சீமைச்சுண்ணாம்பு | எழுதப் பயன்படும் சுண்ணாம்புக்கட்டி . |
சீமைநிலாவிரை | சூரத்து நிலாவிரைச்செடி . |
சீமைப்பிரதானி | நாட்டை ஆளும் அதிகாரி . |
சீய்த்தல் | பெருக்குதல் ; கிளறுதல் ; வெட்டுதல் ; போக்குதல் ; உரைசுதல் . |
சீயக்காய் | சீயக்காய்மரம் . |
சீயம் | சிங்கம் ; சிம்மராசி ; எருக்கம்பால் ; ஒரு நாடு . |
சீயர் | வைணவத் துறவி ; பெரியோர் . |
சீயன் | திருமால் ; செல்வன் ; மூன்றாம் பாட்டன் ; ஒரு நாடு ; மட்டக்கெம்பு . |
சீயாள் | மூன்றாம் பாட்டி . |
சீயான் | மூன்றாம் பாட்டன் ; ஒரு பூரான்வகை . |
சீயெனல் | வெறுப்புக்குறிப்பு . |
சீர் | செல்வம் ; அழகு ; நன்மை ; பெருமை ; தலைமை ; மதிப்பு ; புகழ் ; இயல்பு ; நேர்மை ; செம்பொருள் ; சமம் ; துலாம் ; அளவு ; கனம் ; துலாராசி ; கதவுதண்டு ; தண்டாயுதம் ; தாளம் ; பாட்டு ; செய்யுளின் ஓருறுப்பு ; வாத்தியவோசை ; ஓசை ; சீர்சிறப்பு ; காலிலணியும் தண்டை ; தளர்வு . |
சீர்க்கம் | அலங்கார மண்டபத்தில் அமைக்கப்படும் சிற்பவகை . |
சீர்க்காரம் | எதிரொலி . |
சீர்குலைத்தல் | ஒழுங்கு கெடுதல் ; நிலைகெடுதல் ; ஒழுக்கம் கெடுதல் . |
சீர்கெடுதல் | ஒழுங்கு கெடுதல் ; நிலைகெடுதல் ; ஒழுக்கம் கெடுதல் . |
சீர்கேடி | மூதேவி . |
சீர்கேடு | ஒழுங்கீனம் ; நிலைகுலைவு ; அழகின்மை . |
சீர்கோடிகம் | பாலைப்பண்ணின் திறங்களுள் ஒன்று . |
சீர்சிறப்பு | மிகு செழிப்பு ; சீதன வரிசை . |
சீர்செய்தல் | ஒழுங்குபடுத்தல் , வரிசைப்படுத்தல் ; திருமணம் முதலியவற்றில் பெண்ணுக்குச் சீர் கொடுத்தல் . |
சீர்ணபத்திரம் | வேம்பு . |
சீர்த்தல் | கோபித்தல் ; சிறத்தல் ; சமயம் வாய்த்தல் ; ஓசை இலயம்பட நிற்றல் . |
சீர்த்தி | மிகுபுகழ் . |
சீர்த்துழாய் | துளசிச்செடி . |
சீர்தட்டுதல் | அழுக்குடையோர் நெருங்குதலாலேனும் தொடுதலாலேனும் குழந்தைக்குநோய் மிகுகை . |
சீர்திருத்தம் | செம்மைப்பாடு . |
சீர்திருத்துதல் | செவ்வைப்படுத்துதல் . |
சீர்திருந்துதல் | செப்பமாதல் . |
சீர்தூக்குதல் | ஆராய்தல் ; ஒப்புநோக்குதல் ; வரையறுத்தல் . |
சீர்தைத்தல் | காண்க : சீர்தட்டுதல் . |
சீர்ப்படுத்துதல் | குணப்படுத்துதல் . |
சீர்ப்படுதல் | ஒழுங்குபடுதல் ; குணப்படுதல் ; செம்மைப்படுதல் ; அளவிற்படுதல் . |
சீர்ப்பாடு | மேம்பாடு . |
சீர்ப்பிழை | குற்றம் ; தடை . |
சீர்ப்பு | சிறப்பு . |
சீர்பண்ணுதல் | ஆயத்தப்படுத்தல் ; ஒழுங்குபடுத்தல் . |
சீர்பதி | கடவுள் . |
சீர்பாதம் | திருவடி ; கோயிலில் கடவுளுக்குரிய ஊர்தியைத் தாங்கிச்செல்வோர் . |
சீர்மடக்கு | செய்யுளில் சீர் இடைமடக்கிவருதல் . |
சீர்மரம் | படமரம் என்னும் நெசவுக்கருவி . |
சீர்மை | சிறப்பு ; புகழ் ; கனம் ; அளவிற்படுகை ; வழவழப்பு ; காண்க : சீமை ; நன்னடை . |
சீர்வண்டு | நெய்வார் கருவியுள் ஒன்று . |
சீர்வரிசை | சீதனம் . |
சீரகச்சம்பா | ஒரு செந்நெல்வகை , சம்பா நெல்வகை . |
சீரகத்தாரோன் | வணிகன் ; சீரகமாலை அணிந்த குபேரன் . |
சீரகத்தாமன் | வணிகன் ; சீரகமாலை அணிந்த குபேரன் . |
சீரகம் | செடிவகை ஒரு நிறையளவு ; பன்றி . |
சீரகர் | மரப்பட்டை தரித்த பௌத்தர் . |
சீரணம் | உண்டது செரிக்கை ; பழுது . |
சீரணி | காடு ; ஓமச்செடி ; கூடத்தின் வேறுபாடு ; பந்தத்தில் எரிதற்குச் சுற்றும் துணி ; ஒரு பணிகாரம் . |
சீரணித்தல் | காண்க : சீரணம் . |
சீரணை | பழக்கம் . |
சீரந்தாதி | பாட்டில் ஓரடியின் இறுதிச்சீர் அடுத்த அடியின் முதற்சீரோடு தொடுத்து வருவது . |
சீரம் | பால் ; மரவுரி ; கலப்பை ; இலாமிச்சை ; சீரகம் . |
சீரமோடா | விழுதிச்செடி ; நார்ச்சீலை ; காட்டெருமைப்பால் . |
சீரழிதல் | காண்க : சீர்குலைதல் . |
சீரா | தலைச்சீரா ; பலாசு ; கவசம் ; சிற்றுண்டி வகை . |
சீராகம் | ஒரு பண்வகை . |
சீராட்டு | செல்லம் பாராட்டுகை ; சிறு சண்டை . |
![]() |
![]() |
![]() |