சொல்
|
அருஞ்சொற்பொருள் |
சுதேசம் | சொந்த நாடு . |
சுதேசி | உள்நாட்டான் ; தனது நாட்டில் செய்த பண்டம் . |
சுதேசியம் | தனது நாட்டில் செய்த பொருள் . |
சுதை | தேவாமிர்தம் ; பால் ; சுவை ; சுண்ணாம்பு ; வெண்மை ; நட்சத்திரம் ; மின்னல் ; உதைகால்பசு ; கேடு ; மகள் . |
சுதைக்குன்று | சுண்ணாம்பு பூசிய செய்குன்று . |
சுந் | சனி . |
சுந்தரத்தோளுடையான் | அழகர்கோயில் திருமால் . |
சுந்தரப்பொடி | சிவப்பு நறுமணத்தூள் . |
சுந்தரம் | அழகு ; நிறம் ; நன்மை ; சிவப்பு . |
சுந்தரன் | அழகன் ; சுந்தரமூர்த்தி ; மதுரையில் கோயில்கொண்டுள்ள சிவபிரான் . |
சுந்தரி | அழகி ; துர்க்கை ; இந்திராணி ; பார்வதி ; மூஞ்சூறு ; ஒரு மரவகை . |
சுந்தரேசன் | மதுரையில் கோயில்கொண்டுள்ள சிவபிரான் . |
சுந்து | நீர் . |
சுந்தோபசுந்தநியாயம் | சுந்தன் , உபசுந்தன் என்ற இருவரும் திலோத்தமையை விரும்பி அவள் பொருட்டு மாய்ந்தாற்போல் ஒன்றனை ஒன்று கெடுக்கும் நெறி . |
சுப்பல் | சுள்ளிவிறகு . |
சுப்பி | சுள்ளிவிறகு . |
சுப்பியம் | காண்க : மாவிலிங்கம் ; விளாமரம் ; பாம்புகொல்லி ; மாவிலிங்கமரப்பட்டை . |
சுப்பிரசன்னம் | தெளிவு ; அருள் . |
சுப்பிரசுதை | காட்டெருமைப் பால் |
சுப்பிரதந்தி | வடமேற்றிசைப் பெண்யானை . |
சுப்பிரதீபம் | மிக்க வொளி ; கூர்மையான அறிவு ; வடகீழ்த்திசை யானை . |
சுப்பிரதீபன் | சீர்த்தி பெற்றோன் . |
சுப்பிரபாதம் | திருப்பள்ளியெழுச்சி . |
சுப்பிரம் | வெண்மை ; தூய்மை ; மிக்கவொளி ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று ; முத்துக் குற்றத்துள் ஒன்று ; சந்தனம் ; வெண்மை ; வெள்ளி . |
சுப்பிரமணியன் | முருகக்கடவுள் . |
சுப்பிரமதுவா | கூவைநீறு . |
சுப்பிரயோகம் | மன்மதனின் ஐந்து மலரம்புத் துன்பத்துள் காதலரைக் குறித்தே நினைவும் பேச்சுமாயிருக்கும் நிலை . |
சுப்பிராங்கி | இந்திரன் குதிரை . |
சுப்பிரி | நான்முகன் . |
சுப்பிவிறகு | சுள்ளிவிறகு . |
சுப்பு | வேற்றுமையுருபு . |
சுப்பெனல் | நீர்வற்றல் . |
சுபக்கம் | வாதத்தில் தன் கொள்கை ; சிவஞான சித்தியாரில் சைவ சமயத்திற்குரிய கொள்கையை உணர்த்தும் பகுதி . |
சுபக்கிரகம் | நற்கோள் ; வளர்பிறைச் சந்திரன் ; புதன் ; குரு , சுக்கிரன் ஆகிய நற்கோள் . |
சுபகரம் | நன்மைசெய்வது . |
சுபகருமம் | மங்கலச்செயல் . |
சுபகன்மம் | மங்கலச்செயல் . |
சுபகிருது | அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்தாறாம் ஆண்டு |
சுபங்கரி | மங்கலத்தைச் செய்பவளான பார்வதி . |
சுபசரிதம் | நன்னடக்கை . |
சுபசரிதை | மங்கலவரவு . |
சுபசூசகம் | மங்கலத்தைக் காட்டுங் குறி . |
சுபசூசனம் | மங்கலத்தைக் காட்டுங் குறி . |
சுபசோபனம் | மங்கலச் செய்தி . |
சுபட்சம் | தன் கொள்கை ; சிவஞான சித்தியில் சைவசமயக் பகுதி . |
சுபத்திரை | அருச்சுனன் மனைவி ; கறுப்புப் பசு . |
சுபதம் | நன்மை தருவது ; அரசமரம் . |
சுபந்தம் | உருபு ஏற்ற பெயர்ச்சொல் . |
சுபம் | மங்கலம் ; நன்மை ; பேறு ; முத்தி ; மங்கலச் செயல் ; அழகு ; வெண்மை ; இருபத்தேழு யோகத்துள் ஒன்று . |
சுபமங்களம் | வாழ்த்துப்பாட்டு ; முதிர்ந்த பருவத்தில் நேரும் நல்ல சாவு . |
சுபமுகூர்த்தம் | நல்வேளை . |
சுபர்ணன் | அழகிய சிறகுகளையுடைய கருடன் . |
சுபன்னன் | அழகிய சிறகுகளையுடைய கருடன் . |
சுபா | நாட்டின் பகுதி . |
சுபாங்கி | அழகிய உறுப்புள்ளவள் . |
சுபாங்கை | அழகிய உறுப்புள்ளவள் . |
சுபாசுபம் | நன்மை தீமைகள் . |
சுபாலிகை | அடுப்பு . |
சுபாவக்காரன் | நல்லவன் ; மூடன் . |
சுபாவங்காட்டுதல் | இயல்பைக் காட்டுதல் ; இழிகுணம் காட்டுதல் ; நடித்தல் . |
சுபாவசித்தம் | இயற்கையாகவே அமைந்திருப்பது . |
சுபாவப்பேச்சு | கபடமற்ற பேச்சு . |
சுபாவம் | இயல்பு ; இயற்கையுணர்வு ; உண்மை ; இயற்கை ; கலப்பற்றது ; கபடின்மை ; மூடத்தன்மை . |
சுபாவி | காண்க : சுபாவக்காரன் . |
சுபாவிகம் | இயற்கைத் தன்மை . |
சுபானு | அறுபதாண்டுக் கணக்கில் பதினேழாம் ஆண்டு |
சுபிட்சம் | காலமழை முதலியவற்றால் உண்டாகுஞ் செழிப்பு . |
சுபுகம் | மோவாய் . |
சுபுட்பம் | காண்க : இலவங்கம் ; பவளமல்லிகை . |
சுபேதார் | ஓர் இராணுவ அதிகாரி . |
சுபை | நாட்டுப்பகுதி . |
சுபையதார் | காண்க : சுபேதார் . |
சுபோதம் | மெய்யறிவு . |
சும்பகம் | ஊசிக்காந்தம் . |
சும்பகன் | காமவேட்டைக்காரன் . |
![]() |
![]() |
![]() |