சொல்
|
அருஞ்சொற்பொருள் |
சூலைக்குடைச்சல் | சூலைநோயால் உண்டாகும் திருகுவலி . |
சூலைசத்துரு | காண்க : ஆமணக்கு . |
சூலைநீர் | கெட்ட நோயால் சிறுநீர்க்குழாய் வழியாக வெளிவரும் சீழ் ; காண்க : மேகநீர் . |
சூவானக்காரன் | சமையற்காரன் . |
சூவானம் | அட்டில் . |
சூவெனல் | நாயை ஏவுதற்குறிப்பு . |
சூழ் | ஆலோசனை ; ஆராய்ச்சி ; சுற்று ; தலை மாலை ; கடலைப்பருப்பு . |
சூழ்கோடை | சூறாவளி . |
சூழ்ச்சம் | சூழ்ச்சி , ஆலோசனை ; வழிவகை . |
சூழ்ச்சி | ஆலோசனை ; நுண்ணறிவு ; ஆராய்தல் ; வழிவகை ; மனத்தடுமாற்றம் . |
சூழ்ச்சித்துணைவர் | அமைச்சர்கள் . |
சூழ்த்தல் | சுற்றுதல் ; சுற்றி மொய்த்தல் . |
சூழ்த்துதல் | சூழச்செய்தல் . |
சூழ்தல் | சுற்றியிருத்தல் ; சுற்றிவருதல் ; ஆராய்தல் ; கருதுதல் ; சதியாலோசனை செய்தல் ; தேர்ந்தெடுத்தல் ; அறிதல் ; பண்ணுதல் ; எழுதுதல் ; தாக்குதல் . |
சூழ்தாழை | தாமரை . |
சூழ்ந்திடல் | வளைந்துகொள்ளல் . |
சூழ்போதல் | சுற்றிப்போதல் ; வலம்வருதல் ; வளைத்தல் ; ஆராய்தல் ; சுற்றிக்கிடத்தல் . |
சூழ்வல்லோர் | காண்க : சூழ்ச்சித்துணைவர் . |
சூழ்வளி | சுழல்காற்று . |
சூழ்வார் | காண்க : சூழ்வோர் . |
சூழ்வினை | சூழ்ச்சி , உபாயம் . |
சூழ்வு | ஆராய்கை ; வழிவகை . |
சூழ்வோர் | அமைச்சர் ; உறவினர் ; சூழ்ந்து நிற்பவர் . |
சூழல் | சூழ்கை ; சுற்றுப்புறம் ; மணற்குன்று ; கூட்டம் ; சூழ்ச்சி ; வழிவகை ; அவதாரம் . |
சூழி | உச்சி ; உச்சிக்கொண்டை ; சேணம் ; யானையின் முகபடாம் ; நீர்நிலை ; கடல் ; மேலிடம் . |
சூழிகை | கள் . |
சூழியம் | உச்சிக்கொண்டை ; உச்சிக்கொண்டையில் அணியும் நகை . |
சூழியல் | வீட்டிறப்புத் தாங்கும் கம்பு . |
சூழியற்கம்பு | வீட்டிறப்புத் தாங்கும் கம்பு . |
சூள் | ஆணை ; சபதம் ; சத்தியம் ; சாபம் ; தீவட்டி . |
சூள்தல் | காண்க : சூளுறுதல் . |
சூளறவு | காண்க : சூளுறவு . |
சூளாமணி | முடிமணி ; ஒரு செய்யுள் நூல் ; இந்திரன் அணியும் மணி . |
சூளி | உச்சிக்கொண்டை . |
சூளிகம் | அப்பவருக்கம் . |
சூளிகை | நீர்க்கரை ; செய்குன்று ; யானைச்செவியடி ; நிலாமுற்றம் ; தலையணிவகை . |
சூளுறவு | ஆணையிடுகை . |
சூளுறுதல் | ஆணையிடுதல் ; வஞ்சினங்சுறுதல் . |
சூளை | செங்கல் முதலியன சுடும் காளவாய் ; ஈமவிறகு ; விலைமகள் . |
சூற்பெண்டு | கருவுற்றவள் . |
சூறல் | தோண்டுதல் . |
சூறன் | காண்க : மூஞ்சூறு . |
சூறாவளி | சுழல்காற்று . |
சூறாவாரி | சுழல்காற்று . |
சூறு | மலவாய் . |
சூறுதல் | சூழ்தல் . |
சூறை | கொள்ளை ; சுழல்காற்று ; பனிச்சை என்னும் மயிர்முடிவகை ; சல்லடம் ; கடல் மீன்வகை : காண்க : சூறைக்குருவி ; கமுத்தின் பின்குழி ; பயிரில் விமும் நோய்வகை . |
சூறைக்காரன் | கொள்ளையடிப்பவன் . |
சூறைக்காற்று | சுழல்காற்று ; புயற்காற்று . |
சூறைக்குருவி | சோளக்கொல்லையிற் கூட்டங் கூட்டமாகக் காணப்படும் குருவிவகை . |
சூறைகொள்ளுதல் | காண்க : சூறையாடுதல் . |
சூறைகோட்பறை | வழிப்பறி செய்வோர்க்குரிய பாலைப் பறைவகை . |
சூறைச்சின்னம் | கொள்ளையிடுவோர்க்குரிய ஊதுகொம்பு . |
சூறைத்தேங்காய் | நேர்த்திக்கடனாகத் தெய்வத்தின் முன்னிலையில் உடைக்கப்படும் சிதறுதேங்காய் . |
சூறையர் | பரத்தையர் . |
சூறையாடுதல் | கொள்ளையடித்தல் ; தலைசுற்றுதல் . |
சூறைவிடுதல் | கொள்ளையிடச் செய்தல் சொத்தைப் பிறர்க்கு வாரிவிடுதல் . |
சூன் | பிதுக்கம் ; வளைவு ; குற்றம் ; கபடம் ; கைமுதலியன சூம்பியிருக்கை ; கமுக்கம் ; இரண்டு வீட்டுச் சுவர்களின் இடைச்சந்நு ; புறம்போக்கு நிலம் ; ஆங்கில ஆண்டில் ஆறாம்மாதம் . |
சூன்றல் | தோண்டுதல் . |
சூனம் | மான் ; பூமலர் ; வயிற்றுவீக்கம் . |
சூனர் | ஊன்விற்போர் . |
சூனியக்காரன் | பில்லிசூனியம் வைப்பவன் . |
சூனியதிசை | அமங்கல திசையாகக் கருதப்படும் தென்கீழ்த்திசை ; மூச்சுப்போகாத மூக்கின் துளைப்பக்கம் . |
சூனியப்பார்வை | மந்திரவாதியின் தீக்கண் . |
சூனியம் | இன்மை ; பூச்சியம் ; வறிதாயிருக்கை ; பயனற்றது ; மாயை ; இறப்பை விளைக்கச் செய்யும் கலை ; சூனியப்பொருள் ; தூய்மையின்மை . |
சூனியம்வைத்தல் | ஒருவருக்குக் கேடு உண்டாதற் பொருட்டுப் பில்லிசூனியம் செய்தல் . |
சூனியமாதல் | அழிவுறுதல் ; பயனின்றாதல் ; தவறிப்போதல் . |
சூனியமெடுத்தல் | பிறரால் வைக்கப்பட்ட பில்லிசூனியத்தை அகற்றல் . |
சூனியவாதம் | நாத்திக மதம் , கடவுள் இல்லை எனும் ஒருசமயவாதம் . |
சூனியவாதன் | நாத்திகன் . |
சூனியவாதி | நாத்திகன் ; சூனியக்காரன் . |
சூனியவித்தை | பில்லிசூனியம் . |
சூனியன் | முடவன் . |
சூனு | மகன் . |
சூனை | வயிற்றுவீக்கம் ; சொத்தை ; குற்றம் ; மகள் . |
![]() |
![]() |