சொல்
|
அருஞ்சொற்பொருள் |
செம்மலை | ஆவிரைச்செடி . |
செம்மலைப்பாலை | பாலைப் பண்வகை . |
செம்மறி | ஓர் ஆடுவகை . |
செம்மறிப்புருவை | பெண்ணாடு ; செம்மறியாட்டுக்குட்டி . |
செம்மாத்தல் | இறுமாந்திருத்தல் ; மிகக் களித்தல் ; வீறுபெறுதல் . |
செம்மாத்தி | சக்கிலியச் சாதிப்பெண் . |
செம்மாப்பு | அகமலர்ச்சி ; இறுமாப்பு ; வீற்றிருக்கை . |
செம்மாளி | செம்படவர் தரிக்கும் செருப்பு வகை . |
செம்மான் | சக்கிலியன் . |
செம்மானம் | செவ்வானம் ; மழை பெய்தலைக் குறிக்கும் வானம் . |
செம்மீன் | காண்க : அருந்ததி ; செவ்வாய் ; திருவாதிரைநாள் ; பெருந்தலைத் திமிங்கலம் . |
செம்மீன்வயிரம் | செம்மீன் வயிற்றில் காணப்படும் மீனம்பர் என்னும் மருந்துப்பண்டம் . |
செம்முதல் | மூடுதல் ; தூர்த்தல் ; பையை நிறைத்து வாயைத் தைத்தல் ; புண்ணைக் கீறிவிடுதல் ; புடைத்தல் ; கலங்குதல் ; கண் கலங்கி வீங்குதல் ; நிறம் முதலியன பரவுதல் . |
செம்முல்லை | ஒரு முல்லைவகை , தளவம் . |
செம்மேவல் | இணங்குகை . |
செம்மை | செவ்வை ; சிவப்பு ; நேர்மை ; மனக்கோட்டமின்மை ; ஒற்றுமை ; பெருமை ; தூய்மை ; அழகு ; கந்தகம் . |
செம்மைப்படுத்துதல் | ஒழுங்குபடுத்துதல் ; தூய்மைசெய்தல் ; முடித்தல் ; அலங்கரித்தல் . |
செம்மைபண்ணுதல் | ஒழுங்குபடுத்துதல் ; தூய்மைசெய்தல் ; முடித்தல் ; அலங்கரித்தல் . |
செம்மையாதல் | நேராதல் ; சீராதல் ; நிறைதல் . |
செம்மொழி | நற்சொல் ; தொகைமொழி அல்லாத ஒருமொழி . |
செம்மொழிச்சிலேடை | பிரிவின்றியே பல பொருள் தரும் சொற்றொடர் . |
செமித்தல் | செரித்தல் ; பிறத்தல் ; பொறுத்தல் . |
செய் | வயல் ; ஒன்றே முக்கால் ஏக்கர் கொண்ட நன்செய் நிலவளவு ; 100 சிறுகுழிகொண்ட நிலவளவு . |
செய்க்கடன் | நிலவரி . |
செய்கடன் | கடமைச்செயல் ; பிதிரர் படன் ; நேர்த்திக்கடன் . |
செய்கரை | செயற்கைக் கரை ; வரப்பு ; பாலம் . |
செய்காரியம் | செய்யப் பட்ட வேலை ; சமாளிப்பு . |
செய்கால் | பயிரிடப்படும் நிலம் ; சோலை ; நற்காலம் ; பயிர் செய்வதற்கு வேண்டும் உழைப்பு . |
செய்கால்சாகுபடி | நன்செய் நிலத்தில் புன்செய்ப் பயிர்செய்கை . |
செய்காற்கரம்பு | தரிசாக விடப்பட்ட நிலம் . |
செய்குறை | பிழை ; அரைகுறை வேலையாயிருப்பது . |
செய்குன்றம் | செல்வமக்கள் விளையாடற் பொருட்டு அமைக்கப்படும் மலை . |
செய்குன்று | செல்வமக்கள் விளையாடற் பொருட்டு அமைக்கப்படும் மலை . |
செய்கூலி | செய்த வேலைக்குப் பெறும் கூலி . |
செய்கை | தொழில் ; செயல் ; மன உடல் செய்கைகள் ; வேலைப்பாடு ; ஒழுக்கம் ; உடன்படிக்கை ; செயறகைப் பொருள் ; காண்க : செய்கைச்சூத்திரம் ; பில்லிசூனியம் ; வேளாண்மை ; அரசாங்க அனுமதிபெற்றுப் புதிதாகப் பண்படுத்திய நிலம் . |
செய்கைக்காணி | பற்றடைப்பு நிலம் ; சாசனக்காணி . |
செய்கைக்காரன் | குடித்தனக்காரன் ; நல்ல உழவன் ; மாந்திரிகன் . |
செய்கைச்சரக்கு | வைப்புச்சரக்கு ; செயற்கைப் பொருள் . |
செய்கைச்சூத்திரம் | புணர்ச்சிவிதி முடிபுவிதி முதலியவற்றை முடித்துக்காட்டும் விதிச்சூத்திரம் . |
செய்கைச்சூழ்ச்சி | தந்திரச்செயல் . |
செய்கைத்தளை | பண்படுத்தப்பட்ட நிலம் ; பட்டயக்காணி . |
செய்கைத்தாழ்ச்சி | மேற்பார்வைக் குறைவு ; தொழிற்குறைவு ; வயலின் செம்மைக் குறை . |
செய்கையொப்பம் | பட்டா . |
செய்சுனை | அகழ்ந்து உண்டாக்கப்பட்ட நீர்நிலை . |
செய்தல் | இயற்றுதல் ; உண்டாக்கல் ; சம்பாதித்தல் ; ஒத்தல் . |
செய்தி | சமாசாரம் ; செயல் ; தொழில் ; ஒழுக்கம் ; செய்நன்றி ; தன்மை . |
செய்திகொல்லுதல் | காண்க : செய்நன்றிகொல்லுதல் . |
செய்திறம் | மருத யாழ்த்திறத்துள் ஒன்று . |
செய்தொழில் | செய்கை . |
செய்நன்றி | நன்றியறிவு ; உதவி . |
செய்நன்றிக்கேடு | பிறன் செய்த உதவியை மறத்தல் . |
செய்நன்றிகொல்லுதல் | பிறன் செய்த உதவியை மறத்தல் . |
செய்பவன் | கருத்தா . |
செய்பாகம் | மருந்து செய்யும்முறை ; ஒழுங்குமுறை ; கருத்து முற்றுதற்கு ஏற்ற முறை . |
செய்பாவை | திருமகள் . |
செய்பொருள் | செயப்படுபொருள் ; அறம் , பொருள் , இன்பம் , வீடு என நால்வகைப்பட்ட உறுதிப்பொருள் . |
செய்ய | சிவந்த ; செப்பமான . |
செய்யல் | ஒழுக்கம் ; காவல் ; சேறு ; செய்தொழில் ; செய்தல் . |
செய்யவள் | காண்க : செய்யாள் . |
செய்யவன் | சூரியன் ; செவ்வாய் ; சிவந்த மேனியன் . |
செய்யன் | சிவந்தவன் ; நேர்மையானவன் ; பாம்புவகை . |
செய்யாக்கோலம் | இயற்கையழகு . |
செய்யாமொழி | செய்யப்படாத மொழியாகிய வேதம் . |
செய்யார் | பகைவர் . |
செய்யாள் | செந்நிறமுடைய திருமகள் ; தாயின் தங்கையான சிறிய தாயார் . |
செய்யான் | சிவந்தவன் ; ஒரு பூரான்வகை . |
செய்யுட்கலம்பகம் | பலவகைப் பாடற்றிரட்டு . |
செய்யுட்கிழமை | ஆறாம் வேற்றுமைப் பொருள்களுள் இன்னாரது பாட்டு என ஆக்கியோனுக்கும் அவன் பாட்டுக்கும் உள்ள உரிமையாகிய பொருள் . |
செய்யுட்கோவை | காண்க : செய்யுட்கலம்பகம் . |
செய்யுட்சொல் | செய்யுளில்மட்டும் வழங்கும் சொல் . |
செய்யுட்பொருத்தம் | மங்கலம் , சொல் , எழுத்து , தானம் , பால் , உண்டி , வருணம் , நாள் , கதி , கணம் என்று பத்து வகையாய்க் காப்பியத்தின் முதல் செய்யுள் முதன்மொழியில் பாரத்தற்குரிய பொருத்தம் . |
செய்யுட்போலி | உரைநடைவகையுள் ஒன்று . |
செய்யுண்முடிபு | செய்யுளில் மட்டும் வழங்குஞ் சொல்வழக்கு . |
செய்யுணடை | செய்யுளில் வழங்கும் நடை . |
செய்யுள் | பாட்டு ; காவியம் ; உரை ; விளைநிலம் ; செய்கை . |
![]() |
![]() |
![]() |