சொல்
|
அருஞ்சொற்பொருள் |
சேவனை | ஊழியத்தொழில் ; கோயில்தொண்டு ; விழாக்காலங்களில் மேளம் முதலியன சேவிக்கை . |
சேவனைக்காரர் | கோயில் மேளக்காரர் . |
சேவா | வாடகை . |
சேவாகாலம் | திருமால் கோயில் முதலியவற்றில் திவ்வியப் பிரபந்தம் ஓதுகை . |
சேவாலங்கொட்டை | காண்க : நேர்வாளம் . |
சேவாலிகம் | காண்க : கருநொச்சி . |
சேவித்தல் | பணிசெய்தல் ; வணங்குதல் ; காணுதல் ; திவ்வியப் பிரபந்தம் முதலியன ஓதுதல் ; மருந்து முதலியன உட்கொள்ளுதல் . |
சேவிதம் | தொண்டு . |
சேவியம் | வெள்ளை வெட்டிவேர் . |
சேவுகம் | ஊழியம் ; வீரம் . |
சேவை | தொண்டு ; வணக்கம் ; வழிபடுதல் ; காட்சி ; ஒரு மரவகை ; காட்டு மங்குஸ்தான் ; திவ்வியப் பிரபந்தம் முதலியன ஓதுகை ; ஒருவகைப் பணிகாரம் . |
சேவையூர் | சிதம்பரம் . |
சேழ் | மேலிடம் . |
சேழம் | மீதி . |
சேளம் | மீதி . |
சேற்கண்ணி | அரிதாரம் . |
சேற்பனம் | கபம் . |
சேற்றுக்கடி | காண்க : சேற்றுப்புண் . |
சேற்றுக்கால் | வயலில் தொளியடித்து நாற்று நட்டுப் பயிர்செய்யும் வேளாண்மை ; சேடையாக்கி விதைக்கும் வயல் ; களிமண் வயல் . |
சேற்றுப்புண் | சேற்றால் கால்விரலிடையில் உண்டாகும் அரிபுண் . |
சேற்றுப்புழி | உழப்பட்ட நிலம் . |
சேற்றுமம் | கபம் . |
சேறடி | வண்டிச் சக்கரத்திற்படும் சேற்றைத் தடுக்க அமைக்குங் கருவி . |
சேறடை | வண்டிச் சக்கரத்திற்படும் சேற்றைத் தடுக்க அமைக்குங் கருவி . |
சேறல் | செல்லுகை . |
சேறாடி | ஒரு விருதுவகை ; காண்க : சேறடி , சேறடை . |
சேறாடுதல் | வயலில் விதைத்தற்கச் சேறு கலக்குதல் ; துகைத்துக் குழைத்தல் . |
சேறு | சகதி ; குழம்பு ; சாரம் ; இனிமை ; கள் ; தேன் ; திருவிழா ; பாகு ; சீழ் ; பனம்பழம் ; தேங்காய் இவற்றின் செறிந்த உள்ளீடு ; விளாம்பழம் ; மணி ; நீரோட்டம் . |
சேறுகுத்தி | சேற்றைத் தள்ளற்கு உதவும் கருவி . |
சேறுஞ்சுரியுமாய் | குழைவாய் . |
சேனம் | பருந்து . |
சேனம்பாம்பு | ஒரு மீன்வகை . |
சேனன் | ஒரு பழைய பட்டப்பெயர் . |
சேனா | விலாங்குமீன் ; நிலாவிரைப்பூண்டு . |
சேனாங்கம் | படையுறுப்பு . |
சேனாசமுத்திரம் | கடல்போன்ற பெரும்படை ; பெருங்கூட்டம் . |
சேனாதிபதி | படைத்தலைவன் . |
சேனாதிபன் | படைத்தலைவன் . |
சேனாதிராயன் | முருகக்கடவுள் ; படைத்தலைவன் . |
சேனாபத்தியம் | படைத்தலைமை . |
சேனாபதி | படைத்தலைவன் ; ஒரு பண்வகை . |
சேனாமுகம் | முதற்படை ; படையின் ஒரு தொகை . |
சேனாவரையன் | படைத்தலைவன் ; தொல்காப்பிய உரையாசிரியருள் ஒருவர் . |
சேனாவு | தகரைச்செடி . |
சேனை | யானை , தேர் , குதிரை , காலாள் என்னும் நாற்படை ; ஆயுதம் ; கூட்டம் ; நண்பரும் உறவினரும் ; தெரு ; கடைத்தெரு ; சந்தை ; பல ; சேணம் ; கருணைக்கிழங்கு ; சேனைப்பால் . |
சேனைக்கணிமகன் | சேனையிலுள்ள நிமித்திகன் . |
சேனைக்கால் | கோயிற்குட தீபக்கால் . |
சேனைக்குடையார் | இலை விற்கும் ஒரு சாதியார் . |
சேனைத்தலைவர் | திருமாலின் கணத்தலைவர் ; இலை விற்கும் ஒரு சாதியார் ; படைத்தலைவர் . |
சேனைப்படைகள் | பெருங்கூட்டம் . |
சேனைப்பால் | குழந்தை பிறந்ததும் புகட்டும் இனிப்புக் கலந்த நீர்ம வடிவான உணவு . |
சேனைப்பெருங்கணி | சேனையில் அமர்ந்துள்ள சோதிடத் தலைவன் . |
சேனைப்பெருவாணிகன் | படைக்கு வேண்டிய உணவு முதலிய பண்டங்களை கொடுத்து உதவுபவன் . |
சேனைமுதலியார் | திருமால்கணத் தலைவர் ; கைக்கோளச் சாதியார் . |
சேனையர்கோன் | திருமால்கணத் தலைவர் ; கைக்கோளச் சாதியார் . |
சேனையுள்படுநன் | அரசன் ஆணையைக் காளமூதிச் சேனைக்கு அறிவிப்போன் . |
![]() |
![]() |