சொல்
|
அருஞ்சொற்பொருள் |
சொல்லிறத்தல் | வாக்கை மீறுதல் . |
சொல்லின்பம் | சொற்சுவை . |
சொல்லின் முடிவின் அகப்பொருள் முடித்தல் | சொல் முடிந்தவிடத்து மற்ற பொருள்களையும் முடியவைக்கும் உத்திவகை . |
சொல்லுதல் | பேசுதல் ; அறிவித்தல் ; திருப்பிக் கூறுதல் ; கட்டளையிடுதல் ; புத்திகூறல் ; புகழ்தல் ; களைதல் . |
சொல்லுரிமை | அழுத்தமாய்த் திருந்திய பேச்சு . |
சொல்லுருபு | வேற்றுமையுருபுகட்குப் பதிலியாக வழங்குஞ் சொல் . |
சொல்லுரை | சொற்பயன் . |
சொல்லுறுதி | வாக்கு நிறைவேற்றுகை . |
சொல்லெச்சம் | சொல் எஞ்சி நிற்பது . |
சொல்லேருழவர் | அமைச்சர் ; புலவர் . |
சொல்வகை | சொல்லியற் பகுப்பு ; பேசுந்திறம் ; கூத்துக்குரியதாய் வரும் பாட்டு . |
சொல்வழு | சொல்லிலக்கணத்தோடு பொருந்தாமையாகிய குற்றம் . |
சொல்வளம் | சொற்பொழிவு . |
சொல்வளர்த்தல் | செய்தியைப் பலருமறியச் செய்தல் ; வீணாகச் சொல்லைப் பெருக்குதல் . |
சொல்வன்மை | பேச்சுவன்மை ; சொல்திறம் . |
சொல்விழுக்காடு | பொருளின்றி வரும் துணைச்சொல் . |
சொல்விளம்பி | பேசச் செய்யும் கள் . |
சொல்வென்றி | வாதத்தில் வெல்லுதல் . |
சொலவு | சொல்லுகை ; பழமொழி . |
சொலி | மரப்பட்டை . |
சொலித்தல் | உரித்தல் ; பேர்த்தல் ; ஒலித்தல் ; எரிதல் . |
சொலிப்பு | சுடர் , ஒளி . |
சொலியன் | காண்க : முடக்கொற்றான் . |
சொள்ளல் | சொத்தை ; ஒல்லி ; ஒன்றுக்கும் பயனற்றவன் ; அம்மைவடு ; இழுக்கு ; செயற்கேடு . |
சொள்ளை | சொத்தை ; ஒல்லி ; ஒன்றுக்கும் பயனற்றவன் ; அம்மைவடு ; இழுக்கு ; செயற்கேடு . |
சொற்காத்தல் | புகழைப் போற்றுதல் ; வாக்கை நிறைவேற்றுதல் ; அடக்கிப் பேசுதல் . |
சொற்காரி | ஏழுவகை மேகங்களுள் ஒன்று . |
சொற்குற்றம் | சொல்லிலக்கணத்திற்கு மாறான குற்றம் ; சொல்லின் தீமை . |
சொற்கேட்டல் | ஏவற்படி நடத்தல் ; வசையைப் பொறுத்தல் ; வசைபெறுதல் . |
சொற்கோ | திருநாவுக்கரசர் . |
சொற்சாதுரியம் | நாவன்மை ; பேச்சுநயம் . |
சொற்சித்திரம் | நாவன்மை ; பேச்சுநயம் . |
சொற்சிதைவு | சொல்லின் மாறுபட்ட உருவம் . |
சொற்சிமிட்டு | பொடிவைத்துப் பேசுகை ; சொல்வன்மை . |
சொற்சீரடி | அம்போதரங்க வுறுப்பு . |
சொற்சுவை | சொல்லின்பம் . |
சொற்செலவு | செல்வாக்கு ; பரிந்து பேசுகை . |
சொற்செறிவு | சொல்வளம் . |
சொற்சோதனை | சொல்லாராய்ச்சி . |
சொற்சோர்வு | சொற்பிழை ; தடுமாறிப் பேசுதல் . |
சொற்பசீவனம் | வறுமைப்பட்ட வாழ்வு . |
சொற்படுத்துதல் | இசைக்கு இணங்கப் பதமமைத்தல் . |
சொற்படுதல் | பலன்மிகுதல் . |
சொற்பத்திலேபார்த்தல் | காரியங்களை எளிதின் முடிக்க முயலுதல் ; நயமாக வாங்குதல் . |
சொற்பதம் | சொல்லளவு ; சொல்லாற் குறிக்கப்படும் நிலை . |
சொற்பபுத்தி | குறைந்த அறிவு ; இழிதன்மை . |
சொற்பம் | சிறியது . |
சொற்பவிலை | மலிவான விலை . |
சொற்பழி | பிறர் கூறும் நிந்தைமொழி . |
சொற்பழுத்தவர் | நாவன்மையுடையவர் . |
சொற்பனம் | காண்க : சொப்பனம் . |
சொற்பாடு | உடன்படிக்கை ; பழிச்சொல் . |
சொற்பானு | இராகு . |
சொற்பிரயோகம் | சொற்களை ஆளுகை . |
சொற்பிழை | சொற்குற்றம் ; எழுத்துக் குற்றம் . |
சொற்பின்வருநிலையணி | செய்யுளில் முன்வந்த சொல்லே வெவ்வேறு பொருளில் பின்னும் வரும் அணிவகை . |
சொற்பு | சொல்லுகை . |
சொற்புத்தி | புத்திமதி . |
சொற்புரட்டு | பொய் . |
சொற்புள் | பின் வருவதைத் சொல்லும் காக்கை . |
சொற்பெருக்கு | சொற்பொழிவு . |
சொற்பொருட்பின்வருநிலை | சொல்லும் பொருளும் ஒன்றே மறித்து வருவது . |
சொற்பொருள்விரித்தல் | சொற்பொருள் விளங்க உருவு முதலானவற்றை விரித்துச் சொல்லும் உத்தி . |
சொற்பொழிவு | அவையில் உரையாற்றுகை . |
சொற்போர் | ஒரு பொருள் குறித்துப் பேசி வாதிடுவது . |
சொற்றல் | சொல்லுதல் . |
சொற்றாமம் | புகழ்ச்சி ; புகழ்மாலை . |
சொற்றிரிபு | சொல்லின்கண் நிகழும் மாறுபாடு . |
சொற்றிருத்தல் | உச்சரிப்பு நேர்மை ; எழுத்துப் பிழையின் திருத்தம் . |
சொற்றொடர் | பல மொழிகள் கொண்ட வாக்கியம் முதலியன . |
சொற்றொடர்நிலைச்செய்யுள் | காண்க : அந்தாதி . |
சொறி | தினவு ; காண்க : சொறிசிரங்கு ; சுரசுரப்பு ; காஞ்சொறிச்செடி ; மீன்வகை . |
சொறிக்கல் | செம்பாறாங்கல் ; மஞ்சள் அரைக்குங் கல் ; சுக்கான் கல் . |
சொறிக்கிட்டம் | இரும்புத் துரு . |
சொறிக்கட்டை | காண்க : ஆதீண்டுகுற்றி . |
![]() |
![]() |
![]() |