தசைபிடி முதல் - தட்டுச்சுளகு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
தசைபிடி சதைபிடிக்கை .
தசையடைப்பு காண்க : தசைவளர்ச்சி ; கொழுப்புப் பிடித்தல் .
தசையூறுதல் சதைபிடித்தல் .
தசைவலி சதையில் உண்டாகும் நோவு .
தசைவளர்ச்சி சதைப்பற்றுண்டாகை ; புண்ணைச்சுற்றிச் சதை மிகுகை ; மூத்திரத்துளையை அடைத்துக்கொண்டு சதை வளர்கை .
தசைவைப்பு கோளின் ஆட்சிமுடிவு .
தஞ்சக்கேடு வலுவின்மை ; வறுமை .
தஞ்சம் எளிது ; தாழ்வு ; எளிமை ; பற்றுக்கோடு ; அடைக்கலப்பொருள் ; உறுதி ; பெருமை .
தஞ்சன் அறிஞன் .
தஞ்சனன் தன்னையுணர்ந்தவன் .
தஞ்சு காண்க : தஞ்சம் .
தட்குதல் தங்குதல் ; கட்டுதல் ; தடுத்தல் .
தட்சகன் எண்வகை நாகத்துள் ஒன்று ; குடும்பத் தலைவன் .
தட்சசங்காரன் தக்கனை அழித்தவனான சிவன் .
தட்சணம் தெற்கு ; வலப்பக்கம் ; அப்போதே .
தட்சணாக்கினி காண்க : தக்கணாக்கினி .
தட்சணாமூர்த்தம் காண்க : தட்சிணாமூர்த்தம் .
தட்சணாமூர்த்தி காண்க : தட்சிணாமூர்த்தி .
தட்சணாயம் காண்க : தக்கணாயனம் .
தட்சணை காண்க : தட்சிணை .
தட்சிணபூமி பூகோளத்தின் தென் சீதளபாகம் .
தட்சிணம் தக்கிணம் , தெற்கு ; வலப்பக்கம் ; அறிவுக்கூர்மை ; தாராளம் .
தட்சிணாசலம் பொதியமலை .
தட்சிணாமூர்த்தம் சிவபிரான் தென்முகமாயிருந்து பிரமபுத்திரர்களாகிய சனகாதியர் நால்வருக்கும் உபதேசித்த திருவுருவம் .
தட்சிணாமூர்த்தி தென்முகமாயிருக்கும் சிவமூர்த்தம் ; தெற்கிலிருக்கும் அகத்தியர் ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .
தட்சிணாயனம் காண்க : தக்கணாயனம் .
தட்சிணாவர்த்தம் காண்க : வலம்புரிச்சங்கு .
தட்சிணை குரு முதலிய பெரியோருக்குக் கொடுக்கும் பொருள் ; பரிதானம் ; சிட்சை .
தட்டகப்பை தட்டையாக இருக்கும் தோசை திருப்பி என்னும் கருவி .
தட்டத்தானி தன்னந்தனி ; முற்றும் தனித்திருக்கை .
தட்டம் உண்கலம் ; தாம்பாளம் ; துயிலிடம் ; படுக்கை ; கச்சு ; கைகொட்டுகை ; பரந்த இதழுடைய பூ ; நீர்நிலை ; பல் ; பாம்பின் நச்சுப்பல் ; நிலத்தில் வீழ்ந்து வணங்குகை ; யானை செல்லும் வழி ; மோவாய் ; அல்குல் ; வயல் .
தட்டம்மை அம்மைநோய்வகை .
தட்டல் கை முதலியவற்றால் தட்டுதல் ; தாளம் போடல் ; தடுத்தல் ; முட்டுப்பாடு ; ஐந்து என்பதன் குழூஉக்குறி ; தாலம் ; ஒன்றில் உள்ளதை வெளியில் கொட்டுகை .
தட்டல்தடவல் முட்டுப்பாடு ; நடை தடுமாறுகை .
தட்டழி ஒரு வாத்தியவகை .
தட்டழிதல் நிலைகுலைதல் ; திகைத்தல் ; தோல்வியுறுதல் ; சீர்கெடுதல் .
தட்டழிவு கலக்கம் ; தோல்வி .
தட்டறை அடைப்பை முதலியவற்றிலுள்ள சிறிய உட்பை .
தட்டாக்குடி தட்டார்கள் இருப்பிடம் .
தட்டாத்தி தட்டாரப்பெண் .
தட்டாரப்பூச்சி ஒரு பூச்சிவகை ; பறக்கும் பூச்சிவகை .
தட்டான் பொற்கொல்லன் ; காண்க : தட்டாரப் பூச்சி ; வெண்கோட்டம் ; புடல்கொடி ; பேய்ப்புடல் .
தட்டானுப்பி ஒரு கொடிவகை .
தட்டி காவல் ; சிறை ; கதவு ; படல் ; பலகை ; பிரம்பு முதலியவற்றால் பின்னிய மறைப்புத்தடுக்கு ; ஆயுதவகை ; வாத்தியவகை ; அரைச்சல்லடம் ; தாம்பளம் ; காண்க : வெண்கோட்டம் ; வெற்றிலைக் கட்டு .
தட்டிக்கவி கருப்பூர ஆரத்திப்பாட்டு .
தட்டிக்கழித்தல் விலக்குதல் ; சாக்குப்போக்குச் சொல்லுதல் ; ஒருவனுக்கு வரவேண்டிய தொகையிலிருந்து அவனால் செலுத்தவேண்டிய தொகையைக் கழித்துக் கணக்கு முடித்தல் .
தட்டிக்கேட்டல் அடக்கியாளுதல் ; காண்க : தட்டிச்சொல்லுதல் ; கண்டித்தல் .
தட்டிக்கொடுத்தல் அமைதிபண்ணுதல் ; ஊக்கப்படுத்தல் ; தூண்டுதல் : ஒருவர்மீது தட்டிக் குறிப்புக் காட்டுதல் .
தட்டிக்கொள்ளுதல் பறித்தல் ; திருடுதல் ; தளர்தல் ; மோதிக்கொள்ளுதல் ; தடைப்படுதல் ; பற்றாமற்போதல் .
தட்டிச்சுற்றுதல் கொள்ளையடித்தல் .
தட்டிச்சொல்லுதல் மறுத்துரைத்தல் ; காண்க : தட்டிக்கேட்டல் ; திக்கிப்பேசுதல் .
தட்டித்தடவுதல் தடுமாறுதல் .
தட்டித்தடுமாறுதல் தடுமாறுதல் .
தட்டித்திரிதல் சிரமப்பட்டு அலைதல் .
தட்டிப்பறித்தல் அடித்துப் பிடுங்குதல் ; தந்திரமாய்ப் பறித்தல் .
தட்டிப்பார்த்தல் தேங்காய் , நாணயம் முதலியவற்றைச் சுண்டிப்பார்த்து அவற்றின் இயல்பை அறிதல் ; இரகசியமறிய முயலுதல் .
தட்டிப்புடைத்தல் முறத்தாற் கொழித்து நெல் முதலியவற்றைப் பிரித்தெடுத்தல் .
தட்டிப்பேசுதல் மறுத்துரைத்தல் ; காண்க : தட்டிக்கேட்டல் ; திக்கிப்பேசுதல் .
தட்டிப்போடுதல் கவிழச் செய்தல் ; வெல்லுதல் ; மறுத்தல் .
தட்டியம் நெடுங்கேடயம் .
தட்டியழைத்தல் கைகொட்டிக் கூப்பிடுதல் ; போருக்கழைத்தல் .
தட்டியளத்தல் தானியம் முதலியவற்றைத் தலையை வழித்து அளத்தல் .
தட்டியோட்டுதல் மாட்டையடித்துச் செலுத்துதல் .
தட்டிவிடுதல் உற்சாகப்படுத்துதல் ; மாட்டையடித்துச் செலுத்துதல் ; விரைந்து செய்தல் ; கவிழச் செய்தல் ; உழவில் ஏர்களை முன் பின்னாக மாற்றுதல் ; பின்வாங்கச் செய்தல் ; மறுத்தல் ; திரும்ப உழுதல் ; வெட்டிவிடுதல் ; தப்புதல் ; உழுத சாலில் திரும்ப உழுதல் .
தட்டிவைத்தல் குறிப்பாகச் சொல்லுதல் .
தட்டு தட்டுகை ; அடி ; மோதுகை ; தாளம் போடுகை ; விலக்குகை ; முட்டுப்பாடு ; தடை ; குற்றம் ; தீனம் ; மறைவு ; காவல் ; பயிர்த்தட்டை ; தராசுதட்டு ; வட்டம் ; வளைவு ; கேடகம் ; குயவன்சக்கரம் ; முறம் ; தேர் முதலியவற்றின் நடுவிடம் ; ஆசனத்தடுக்கு ; கப்பல் தட்டு ; நெடுங்கை ; பூவிதழ் ; விபசாரி .
தட்டுக்காரன் ஏமாற்றுக்காரன் ; தந்திரக்காரன் .
தட்டுக்கிளி கிளித்தட்டில் ஒரு பக்கத்துத்தலைவன் நிலத்தில் சதுரக்கோடு கீறி ஆடும் ஒரு விளையாட்டுவகை .
தட்டுக்கிளிபாய்தல் நிலத்தில் சதுரக்கோடு கீறி ஆடும் ஒரு விளையாட்டுவகை .
தட்டுக்கூடை அகன்ற கூடைவகை .
தட்டுக்கெடுதல் மனங்கலங்குதல் ; வறுமையால் நிலைகெடுதல் ; இழப்படைதல் ; காண்க : தட்டுண்டுபோதல் ; தடுமாறிப்போதல் ; தாறுமாறாதல் .
தட்டுக்கேடு இழப்பு ; அழிவு ; குழப்பம் ; வறுமை .
தட்டுக்கொட்டு கொட்டுமுழக்கு ; போலி நடிப்பு ; மினுக்குப்பொருள் ; தந்திரம் .
தட்டுச்சரி மகளிர் முன்கையில் அணியும் அணிவகை .
தட்டுச்சுளகு அகன்ற முறவகை .